Search
  • Follow NativePlanet
Share
» »மராட்டிய மாநிலத்தில் இப்படியும் இடங்கள் இருக்கு தெரியுமா?

மராட்டிய மாநிலத்தில் இப்படியும் இடங்கள் இருக்கு தெரியுமா?

மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அது கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோயில்கள் கட்

By Udhaya

மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் தோண்டிப் பார்த்தால் அது கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.எனினும் மகாராஷ்டிராவை பற்றிய செய்திகள், 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுவான் சுவாங் என்ற புகழ்பெற்ற சீனப் பயணியின் குறிப்புகளில்தான் காணப்படுகின்றன. மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியின் புகழுக்கும், பெருமைக்கும் எவரும் அருகில்கூட வர முடியவில்லை. இந்த மாமன்னர்தான் இந்தியாவின் கட்டுறுதியான சாம்ராஜியங்களில் ஒன்றான மராட்டிய பேரரசை நிறுவியவர். இவர் முகாலய மன்னர்களுடன் செய்த போர்களும், நாடு முழுவதும் கட்டிய எண்ணற்ற கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இங்குள்ள வரலாற்று புகழ்மிக்க கோட்டைகளைப் பற்றி இந்த பதிவில் காண்போம்.

வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்

வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்

அஹமத் பாலிகாவின் உதவி மற்றும் ஆலோசனையில் பேரில் இந்த வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. 1960 ம் ஆண்டில் மஹாராஷ்டிரா தினத்தின் போது தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு துவக்கத்தில் இரண்டு அறைகளை மட்டுமே கொண்டிருந்தது. தற்சயம் முழு கட்டமைப்புடன் கூடிய அருங்காட்சியகமாக வளர்ந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 12000 பழங்கால எழுத்துப்பிரதிகளும், 8000 புராதன நாணயங்களும், 50,000 வரலாற்று ஆவணங்களும் அவை தவிர பலவித வரலாற்று கலைப்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. 1816ம் ஆண்டு லண்டனில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய வரைபடம் ஒன்றும், 66மீட்டர் நீளமுள்ள ஒரு ஜோதிடக்குறிப்பும் இங்குள்ள விசேஷ அம்சங்களாக கருதப்படுகிறது. இந்த மியூசியம் தற்சமயம் மாவட்ட ஆட்சியர் அலுவலகித்திற்கு அருகில் உள்ள ஹுடாட்மா சௌக் எனும் இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமையை தவிர்த்து மற்ற வார நாட்களில் இந்த மியூசியம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்துள்ளது. Vijayshankar.munoli -

வானோவ்ரி

வானோவ்ரி

வானோவ்ரி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்த நினைவிடமானது 18ல் வாழ்ந்த ஷீ மஹாட்ஜு ஷிண்டே என்று அழைக்கப்படும் பிரபலமான மராத்திய மஹா வீரருக்காக அமைக்கப்பட்டுள்ளது. பேஷ்வாக்களின் ஆட்சியில் இவர் ஒரு குறிப்பிட்த்தகுந்த தளபதியாக விளங்கினார். இந்த நினைவிடம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு வாஸ்து ஹரா கட்டிடக்கலை நிர்மாண விதிகளின் படி அமைக்கப் பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை பார்க்கலாம்.

பன்ஹாலா கோட்டை

பன்ஹாலா கோட்டை

தீன் தார்வாசா எனும் பெயருக்கு மூன்று கதவுகள் என்பது பொருளாகும். பன்ஹாலா கோட்டையில் உள்ள இது அடுத்தடுத்த மூன்று பிரம்மாண்ட கதவுகளைக் கொண்டதாக கோட்டையின் ஒரே நுழைவாயிலாகக் காணப்படுகிறது. இந்த வாசல் வழியாக நுழைந்தே ஆங்கிலேயர்கள் இக்கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர்.

தீன் தார்வாசாவுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிணறு அக்காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனும் தகவல் வியப்பூட்டும் ஒன்றாகும். அதாவது எதிரிக்கான தகவலை இணைத்து ஒரு எலுமிச்சம் பழத்தினை இக்கிணற்றினைப் போட்டால் அது அகழி வழியாக வெளியிலுள்ள எதிரியின் கையில் கிடைக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

பன்ஹாலாவின் முக்கியமான வரலாற்றுச்சின்னமான இந்த தீன் தார்வாசா வரலாற்றுக்காலத்தின் உன்னதமான பாரம்பரிய பின்னணியை நமக்கு உணர்த்தும் சின்னமாக திகழ்கிறது.

பீபீ கா மஃக்பாரா

பீபீ கா மஃக்பாரா

ஔரங்காபாத் அருகில் அமைந்துள்ள இந்த பீபீ கா மஃக்பாரா என்ற நினைவுச்சின்னம அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். ஔரங்காபாதிலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நினைவிடம் ஔரங்கசீப்பின் மகனான இளவரசர் ஆஸாம் ஷா என்பவரால் அவரது தாய் பேஹம் ரபியா துரானிக்காக கட்டப்பட்டதாகும். அதா உல்லா என்ற கட்டிடக்கலை நிபுணர் இந்த கல்லறைக்கட்டிட்த்தை நிர்மாணித்த கலைஞர் ஆவார். இவர் இந்த கல்லறைக் கட்டிடத்தை இன்னொரு தாஜ் மஹாலைப்போன்றே உருவாக்க முயன்றிருப்பது தெளிவாக புரிந்தாலும், அதில் அவர் வெற்றி பெற வில்லை. தாஜ் மஹால் உருவாக்கும் பிரமிப்பையும் மலைப்பையும் இந்த நினைவகம் ஏற்படுத்தவில்லை. ஆகவே இது தாஜ் மஹாலை பின்பற்றிய ஓரு நகல் என்ற பெருமையை மட்டுமே வரலாற்றில் பெற்றுள்ளது. இருப்பினும் பரந்து விரிந்த புல்வெளி தோட்டத்தின் நடுவில் தடாகங்களும், நீரூற்றுகளும், நீர்க்கால்வாய்களும் சூழ்ந்திருக்க மணற்பாறைகளால் எழுப்பப்பட்டு சுவர்கள் பூச்சு பூசப்பட்டு மேற்கூரையில் சலவைக்கல்லான குமிழ் வடிவ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது இந்த நினைவுக்கல்லறை மாடம். இதன் உள்ளே எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட சலவைக்கல் அமைப்பில் கல்லறை உள்ளது. இந்த நினைவகம் காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படுகிறது. நுழைவுக்கட்டணமாக இந்தியர்களுக்கு 10 ரூபாயும் வெளி நாட்டவர்க்கு 100 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

 கில்லா அரக் அரண்மனை

கில்லா அரக் அரண்மனை

ஔரங்காபாத் நகரில் மற்றொரு சுவாரசியமான இடம் இந்த கில்லா அரக் அரண்மனை ஆகும். இந்த அரண்மனை ஔரங்கசீப் மன்னர் காலத்தில் அவரது ஆணைப்படி கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. தற்சமயம் இடிபாடடைந்து காணப்படும் இந்த அரண்மனையில் புகழ் வரலாற்றுக் காலத்தில் டில்லியிலிருந்து மெக்கா வரையில் பரவி இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.கில்லா அரக் அரண்மனை நான்கு வாயில்களை கொண்டுள்ளது. அரண்மனையின் மற்ற பகுதிகள் சிதைந்து விட்டதால் ஔரங்கசீப்பின் கம்பீரமான அரியணை அறை மட்டுமே அரண்மனை தோட்டத்தின் அருகில் காணப்படுகிறது.

இங்குள்ள மஸ்ஜித்தை ஒட்டி ஒரு வித்தைகளுக்கான சிறு மைதானமும் உள்ளது. இந்த மைதானத்தின் வாசலுக்கருகில் உள்ள கல்வெட்டில் 1659 வருடத்தை குறிப்பிடும்படியாக சில குறிப்புகள் உள்ளன.

Keith Younger

பரா கமன்

பரா கமன்


இது 1672ல் கட்டப்பட்ட சமாதி மண்டபமாகும். முன்னர் இது அலி ரோஸா என்று அழைக்கப்பட்டது. இருப்பினும் ஷா நவாப் இந்த பகுதியை கைப்பற்றிய பிறகு அவர் இதற்கு பரா கமன் என்று தற்சமயம் அழைக்கப்படும் இந்த புதிய பெயருக்கு மாற்றினார். அவரது ஆட்சியில்12 வது நினைவுச்சின்னம் இது என்னும் பொருள் தரும்படியாக அவர் இந்த பெயரை வைத்துள்ளார். இந்த பரா கமன் சமாதி மண்டபம் ஏழு அலங்கார வளைவுகளை கொண்டுள்ளது. உள்ளே உள்ள சமாதி பீடத்தில் மன்னர் அலி மற்றும் அவரது அந்தப்புர ராணிகளின் கல்லறைகள் காணப்படுகின்றன. இங்குள்ள ஜும்மா மசூதி, ஜல் மன்ஸில் மற்றும் சத் மஸில் போன்ற இன்னபிற நினைவுச்சின்ன ங்களும் மறக்காமல் பார்க்க வேண்டியவையாகும். நௌஸர் இலாவியா'வின் ஞாபகார்த்தமாக எழுப்ப்ப் பட்டுள்ள ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய பழமையை கொண்ட இலாவியா மாளிகை இங்கு அருகில் உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்

Elroy Serrao

சலாபத் கான் சமாதி

சலாபத் கான் சமாதி


அஹமத்நகரில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் இடம் இந்த சலாபத் கான் சமாதி மண்டபமாகும். ஷா டோங்கார் எனும் மலையின் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 900 உயரத்தில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது.

இது சந்த் பீபி மஹால் என்றும் பிரசித்தமாக அழைக்கப்படுகிறது. தனக்கான சமாதி மண்டபமாக இது சலாபத் கான் மூலமே அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.1565ம் ஆண்டிலிருந்து 1579ம் ஆண்டு வரை நான்காம் நிஜாம் ஷாவான முர்தாஸா மன்னரின் அவையில் இந்த சலாபத் கான் அமைச்சராக சேவை புரிந்துள்ளார். முர்தாஸா மன்னர் செங்கிஸ் கான் மூலம் மரணமடைந்தது குறித்த வரலாற்றுப்பின்னணியை இந்த சமாதி மண்டபம் நமக்கு எடுத்துரைக்கின்றது.தூரத்திலிருந்து பார்த்தாலே தெரியும்படி இந்த மண்டபத்தின் குமிழ் கோபுரம் பிரம்மாண்டமாகவும் கம்பீரமாகவும் விளங்குகிறது. மூன்றடுக்கு கொண்ட ஒரு கூடத்தின் மூலம் இது சூழப்பட்டுள்ளது.

எண்கோண வடிவில் இந்த சமாதி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் உள்ளே சலாபத் கான், அவரது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்கள் ஆகியோரின் கல்லறைகள் காணப்படுகின்றன.

ரத்னகிரி நுழைவாயில்

ரத்னகிரி நுழைவாயில்

ரத்னகிரி நுழைவாயில் என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்டமான கலைச்சின்னம் அரபிக்கடலை நோக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. இது ரத்னகிரியில் மாண்டவி கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளது.

பலவிதமான தூண் அமைப்பு மற்றும் சுவர் அமைப்புகளுடன் காட்சியளிக்கும் இந்த கலைச்சின்னம் பிரதிநிதி தோண்டு பாஸ்கர் எனும் சிற்பியால் ரத்னகிரிப்பகுதியின் கடற்கரையை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பில் பலவித சிற்பவடிப்புகள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அற்புத கலைச்சின்னத்துக்கருகில் நடக்கும்போது வீசும் கடல் காற்றும், சூழ்ந்திருக்கும் இயற்கை எழிலும், தூரத்தே தெரியும் கடலின் தொடுவானமும் உங்களை மயக்க வைக்கும் அம்சங்களாக உள்ளன.

Tessarman

ஷா கஞ்ச் மஸ்ஜித்

ஷா கஞ்ச் மஸ்ஜித்

ஔரங்காபாதில் அமைந்துள்ள இந்த ஷா கஞ்ச் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்த மசூதியின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒரு அற்புத கட்டிடக்கலை அதிசயமாகும்.

ஒரு உயரமான மேடையின் மீது இந்த மசூதி நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூன்று புறங்களும் சரிவாக அமைந்துள்ளன. நான்காவது புறம் அதன் மீது ஏறும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மசூதியானது இந்தோ சராசனிக் கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. இதனுள்ளே 24 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றுள் 6 தூண்கள் சதுர வடிவில் அமைந்துள்ளன. முன்பகுதியில் உள்ள முற்றத்தில் இரண்டு பெரிய நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மசூதியின் நுழைவாயில் ஒரு சிறிய மசூதியை போன்று வடிவமைக்கப்பட்டு பாரம்பரிய விதான வளைவுடன் இரு புறமும் இரண்டு மினார்களுடன் காட்சியளிக்கின்றது.

ஷாகு அருங்காட்சியகம்

ஷாகு அருங்காட்சியகம்

ஷாகு அருங்காட்சியகம் முன்னர் சத்ரபதி ஷாகு மஹாராஜாவின் ராஜ வம்சத்தினர் வாழ்ந்த அரண்மனையாக இருந்தது. புதிய அரண்மனையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் வடிவமைப்பு ஆங்கிலேய மற்றும் இந்து கட்டிடக்கலை வடிவமைப்பு இரண்டும் கலந்த அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.கோலாப்பூரில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் கோலாப்பூர் அரசர்களின் வாழ்க்கை மற்றும் ஆட்சிமுறை குறித்த வரலாறு பதிக்கப்பட்டுள்ளது. வழுவழுப்பான கருங்கற்களில் வரலாற்று சம்பவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கண்ணாடிகளில் பொறிக்கப்பட்டுள்ள ஓவியங்களில் ஷாகு வம்ச மஹாராஜாக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன.தற்சமயம் இந்த அருங்காட்சியகம் ஷாகு மஹாராஜ் வம்சாவழி வாரிசான ஷீமந்த் ஷாகு மஹாராஜ் அவர்களின் உரிமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் நன்கு பராமரிக்கப்பட்ட பூந்தோட்டமும் ஏரியும் மற்றும் ஒரு வனவிலங்கு காட்சியகமும் உள்ளது.

Vijayshankar.munoli

சஜ்ஜ கோதி

சஜ்ஜ கோதி

பன்ஹாலா மாவட்டத்தில் அமைந்துள்ள இது 1008ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மரணத்தின் பிடியிலிருந்து சிவாஜி சாமர்த்தியமாக தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. சஜ்ஜ கோதி என்ற பெயருக்கு தண்டனைக்கூடம் என்பது பொருளாகும். இந்த சஜ்ஜ கோதி கட்டிடம் மூன்று தளங்களை கொண்டு முகலாய கட்டிட பாணியில் காட்சியளிக்கின்றது. இங்கு சம்பாஜி தன் பொறுப்பற்ற குற்ற செயல்பாடுகளுக்காக தன் தந்தையாலேயே சிறை வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பசுமையான சூழலின் மத்தியில் அமைந்துள்ள இந்த சஜ்ஜ கோதி

தி ராயல் பேலஸ்

தி ராயல் பேலஸ்

தி ராயல் பேலஸ், கேம் சாவந்த் போன்ஸ்லே மூன்றாம் மன்னரின் ஆட்சியில், 1755 மற்றும் 1803-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க செங்கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார சின்னமாகும்.

மேலும் இதன் உட்சுவர்களில் வரிசையாக காணப்படும் அரசர் கால பழைய புகைப்படங்கள் பற்பல கதைகளை நமக்கு சொல்லும். அதோடு இந்த அரண்மனையின் அழகிய வேலைப்பாடுகளை உடைய அறைகளும், போராயுதங்களும், கலைப்பொருட்களும் நம்மை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் சென்று விடும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X