Search
  • Follow NativePlanet
Share
» »சோழர் குல வரலாற்றின் முக்கிய ஏரி! வீராணம் எனும் வீர நாராயண ஏரி

சோழர் குல வரலாற்றின் முக்கிய ஏரி! வீராணம் எனும் வீர நாராயண ஏரி

சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிட்டத்தட்ட 235 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஏரியில் இருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகி

By Udhaya

சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கதை நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கிட்டத்தட்ட 235 கிமீ தூரத்திலிருக்கும் ஒரு ஏரியில் இருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஏரி தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போலில்லை. இதற்கு பின் ஒரு வரலாறே இருக்கிறது. வாருங்கள் வீராணம் எனும் வீர நாராயண ஏரியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதுபோன்ற சிறந்த கட்டுரைகளை படிக்க தமிழ் நேட்டிவ் பிளானட் பக்கத்துக்கு செல்லுங்கள். தொடர்ந்து கட்டுரைகளை பெற மேலுள்ள பெல் பட்டனை அழுத்தி சப்ஸ்கிரைப் செய்யுங்கள். மேலும் நமது பக்கத்தை முகநூலில் பின்தொடர தமிழ் நேட்டிவ் பிளானட் சொடுக்குங்கள்

 எங்குள்ளது

எங்குள்ளது

வீராணம் எனும் வீர நாராயண ஏரி கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடலூர் மாவட்டம் சேத்தியாத் தோப்பு அருகே அமைந்துள்ள இந்த வீராணம் ஏரி, சிதம்பரத்தில் இருந்து 14 கிமீ தொலைவு ஆகும். காவிரியின் கீழணையிலிருந்து இங்கு நீர் வருகிறது.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சென்னையிலிருந்து 235 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஏரி. இது கிட்டத்தட்ட 5 மணி நேர பயண தூரமாகும்.

அதே நேரத்தில் இந்த ஏரி புதுச்சேரியில் இருந்து 85 கிமீ தூரத்திலும், கடலூரிலிருந்து 65 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

பழமை

பழமை

இந்த ஏரி தமிழகத்தின் மற்ற ஏரிகளைப் போல அல்லாமல், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழமையான இன்றும் புதுப்பொலிவுடன் விளங்கும் ஒரு அற்புத ஏரி ஆகும்.

1011ம் ஆண்டு கட்டத்தொடங்கி, 1037ம் ஆண்டு வெட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.

காவிரி கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த அணைக்கு நீர் வருகிறது.

Kailash Sugumaran

 வரலாறு

வரலாறு

விஜயாலயச் சோழனின் பேரனான முதலாம் பராந்தகன் சோழப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவர் ஆவார். தில்லை நடராசர் கோயிலுக்கு தங்கக் கூரை அமைத்து புகழ்பெற்றவர் அவர். இவருக்கு சோழ சிகா மணி, சூர சிகா மணி, வீர நாராயணன் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

இவர் காலத்தில் கட்டியதே வீராணம் ஏரி என்று தற்போது அழைக்கப்படும் வீர நாராயணம் ஏரி ஆகும்.

Srmdraju

 வீராணம் ஏரி உருவாக்கம்

வீராணம் ஏரி உருவாக்கம்

பராந்தகன் காலத்தில், வடக்கே ரெட்டை மண்டலத்து ராஷ்டிரக்கூட மன்னர்கள் வலிமை பெற்று வந்தனர். அவர்கள் அவ்வப்போது போரிட்டு பல நாடுகளை வென்றிருந்தனர். இதனால் தென்னாட்டை நோக்கி அவர்கள் படையெடுத்து வரக்கூடும் என்று கணித்திருந்த பராந்தகன் தன் மூத்த மகனாகிய ராஜாதித்தனை ஒரு பெரும்படையுடன் திருமுனைப் பாடி நாட்டுக்கு செல்ல பணித்தார். அது நடுநாடு, தென்னார்க்காடு நாடு என அழைக்கப்பட்டது.

இந்த படை வடக்கு நாட்டின் படையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்த காத்திருப்பு காலத்தில் ராஜாதித்யனுக்கு ஒரு யோசனை. இந்த படையில் இருக்கும் லட்சக்கணக்கான வீரர்கள் சும்மா இருந்த நேரத்தில் பயனுள்ளதாக ஏதும் செய்யலாமே என்று எண்ணிய அரசர், பெரும் அணை ஒன்றைக் கட்ட முடிவெடுத்தார். அந்த ஏரிக்கு தன் தந்தையின் பெயரையே வீர நாராயண ஏரி என வைத்தார்.

Kailash Sugumaran

 ஏரியின் அமைப்பு

ஏரியின் அமைப்பு

9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஏரியானது, 16 கிமீ நீளமாகும். 4 கிமீ அகலம் கொண்டது இந்த ஏரி. இது கிண்டியிலிருந்து அண்ணாநகர் வரையிலான நீளம் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆரம்ப காலத்தில் 74 மதகுகளும் வாய்க்கால்களும் இருந்தன. இப்போது 28 வாய்க்கால்கள் மட்டுமே உள்ளன. 1445 கன அடி நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்டது இந்த ஏரி. ஆனால் இப்போது 935 கன அடி நீரையே தேக்கி வைக்க முடிகிறது.

rajaraman sundaram

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


காட்டுமன்னார் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், பூம்புகார், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி,தேரழுந்தூர் என இதன் அருகாமையில் நிறைய இடங்கள் காணப்படுகின்றன.

பூம்புகார்

தமிழ்ப்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ‘புகார் நகரம்' என்ற பெயருடன் குறிப்பிடப்படும் இந்த ‘பூம்புகார்' அல்லது ‘காவிரிப்பூம்பட்டிணம்' எனப்படும் நகரமானது தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

சோழ நாட்டின் முக்கிய நாகரிகக்கேந்திரமாக, காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அந்நாளில் வீற்றிருந்த பூம்புகார் நகரம் ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக கோலோச்சியிருக்கிறது. கி.பி 500 ம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு கடல் கொந்தளிப்பில் (ஆழிப்பேரலை) இந்த மகோன்னத வரலாற்று துறைமுகம் புதையுண்டு போனது. ‘உரு'வாக ஏதும் இன்று மிச்சமில்லை எனினும் ‘திரு'வாக விட்டுச்சென்றிருக்கின்றனர் தமிழ்ப்புலவர்கள் - இந்நகரத்தின் பெருமையை.

எனவே ஒரு வரலாற்று ஸ்தலமாக இன்றும் பூம்புகார் எனும் முக்கியத்துவம் பெற்று அடக்கமாக வீற்றிருக்கிறது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் ஸ்தலம் கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 86000 மக்கள் தொகையை கொண்ட ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக சுற்றுலாப்பயணிகளை பூம்புகார் நகரம் ஈர்க்கிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்ற பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும் சொல்லும் மற்றும் 'துறை' என்று நகரத்தைக் குறிக்கும் மூன்று வார்த்தைகளும இணைந்த கலவையே!

முன்பொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியார் சிவனின் சாபத்திற்குள்ளாகி, பெண் மயில் போன்று தோற்றம் பெற்று, இந்த இடத்தில் இருந்த சிவபெருமானை வணங்கி வந்தார். இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு மயிலாடுதுறை என்னும் பெயர் வந்தது. முந்தைய காலங்களில் 'மாயூரம்' என்ற சமஸ்கிருத பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் இன்று 'மயில் நகரம்' என்று பொருள் தரும் 'மயிலாடுதுறை' என்று மாற்றப்பட்டுள்ளது.

இன்று மிகவும் நவீனமான வளர்ந்து வரும் நகரமாக மயிலாடுதுறை இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அதன் உறுதியான, மறுக்க முடியாத வரலாறும் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது. மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் அதன் வரலாற்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். சிவபெருமானுக்கான இந்த கோவில் இந்நகரத்தின் பெயரையும் தன்னுடனே இணைத்துள்ளது.

Kasiarunachalam

Read more about: travel cuddalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X