Search
  • Follow NativePlanet
Share
» »ஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

ஹோலி பண்டிகை இந்தியாவிலேயே எங்கே மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது என்று தெரியுமா?

By Naveen

ஹோலி பண்டிகை உலகெங்கும் வாழும் இந்தியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாகும். சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்த ஒன்றாக ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் இருக்கின்றன.

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையோடு தொடர்புடைய மதுரா, விருந்தாவன் போன்ற ஊர்களில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உள்நாட்டினர் மட்டுமில்லாது ஏராளமான வெளிநாட்டவரும் இந்த ஊர்களில் நடக்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

அளவற்ற மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் ஹோலி பண்டிகையின் புராண வரலாற்றையும், இந்தியாவில் மிக கோலாகலமாக ஹோலி கொண்டாடப்படும் இடங்களை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஹோலி !!

ஹோலி !!

ஹோலி பண்டிகை என்பது ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசிக்கொண்டும், நீர் துப்பாக்கிகளில் வர்ணப்பொடி கலந்த நீரை பீய்ச்சி அடித்தும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.

ஹிந்து பண்டிகையான ஹோலி வட இந்தியாவில் குறிப்பாக உத்தரபிரதேசம், ஜெய்பூர், குஜராத் போன்ற இடங்களிலும் நேபாள், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்துக்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

Sreeram Nambiar

ஹோலி !!

ஹோலி !!

ஹோலி பண்டிகை பகவான் கிருஷ்ணனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. கிருஷ்ணன் பிறந்து வளர்ந்த மதுரா மற்றும் விருந்தாவனில் ஹோலி பண்டிகை 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அதிலும் விருந்தாவனில் நடக்கும் ஹோலி கொண்டாட்டங்கள் உலக பிரசித்தம்.

Biswajit Das

ஹோலி !!

ஹோலி !!

விருந்தாவன் மற்றும் மதுராவில் ஹோலி பண்டிகைக்கு பல நாட்கள் முன்பாகவே கொண்டாட்டங்கள் துவங்கிவிடுகின்றன. கிருஷ்ணன் ராதையை பற்றிய காவிய காதல் பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதுமாக கொண்டாட்டங்கள் மெல்ல களைகட்டுகின்றன.

குஜியா, பூரன் போலி,டாஹி படாஸ், அப்பளம், காஞ்சி மற்றும் மால்புவாஸ், மாத்ரி போன்ற ஹோலி ஸ்பெஷல் உணவுகளை பல நாட்களுக்கு முன்பே மக்கள் தங்கள் வீடுகளில் தயார் செய்கின்றனர்.

henrykkcheung

ஹோலி !!

ஹோலி !!

பொங்கல் பண்டிகையின் துவக்கமாக போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பது போல ஹோலி பண்டிகைக்கு முன்பாகவும் 'ஹோலிகா தகனம்' என்ற நெருப்பு மூட்டும் சடங்கு நடக்கிறது.

கருவிலேயே விஷ்ணுபகவானின் பெரும் பக்தனாக திகழ்ந்த பக்த பிரகலாதனை கொல்ல முயற்சித்த அவனது சகோதரி அரக்கி ஹோலிகாவை எரிப்பதை குறிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

Jai

ஹோலி-விருந்தாவன்&மதுரா:

ஹோலி-விருந்தாவன்&மதுரா:

கிருஷ்ணர் தனது பால்ய நாட்களை கழித்த விருந்தாவன் நகரில் ஹோலி பண்டிகையன்று அங்கிருக்கும் கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

குறிப்பாக ஹோலியன்று 54 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் பிரேம் மந்திர் கிருஷ்ணர் ராதை கோயிலில் கிரிஷ்ணனை தரிசிப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது.

விருந்தாவனில் இருக்கும் கிருஷ்ணர் கோயில்கள்:

விருந்தாவனில் இருக்கும் கிருஷ்ணர் கோயில்கள்:

விருந்தாவன் நகரம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. முன்பே சொன்னது போல பகவன் கிருஷ்ணர் வளர்ந்த நகரமான இங்கே ஏராளமான பழமையான கிருஷ்ணர் கோயில்கள் இருக்கின்றன.

சைதன்ய முனிவர் வழிபட்ட மதன் மோகன் கோயில் தான் இங்கிருக்கும் மிகப்பழமையான கோயில் ஆகும். அதுதவிர மீரா பாய் கோயில், கருட கோவிந்த் கோயில், பங்கே பிஹாரி கோயில், ஷாஜி கோயில், கிருஷ்ணர்-பலராமர் கோயில் போன்றவை இருக்கின்றன.

படம்: மதன் மோகன் கோயில்

ஹோலி கொண்டாட்டங்கள்- லத்மர் ஹோலி:

ஹோலி கொண்டாட்டங்கள்- லத்மர் ஹோலி:

திருமணத்திற்கு முன்பாக கிருஷ்ணர் ராதையை பார்க்க வந்த போது ராதையையும் அவரின் தோழிகளையும் கிருஷ்ணர் அளவுக்கதிகமாக கிண்டல் செய்திருக்கிறார். இதனால் அவருக்கு பாடம் புகட்ட நினைத்த ராதையும் தோழிகள் பெரிய மூங்கில் லத்திகள் கொண்டு விளையாட்டாக விரட்டியிருக்கின்றனர்.

இதனை குறிக்கும் விதமாக விருந்தாவனுக்கு அருகில் இருக்கும் நந்தகோன் கிராமத்திலிருந்து ஆண்கள் ராதையின் கிராமமான ப்ரசன்னாவிற்கு சென்று பெண்களிடம் லத்தியால் அடிவாங்கும் வித்தியாசமான சடங்கு நடக்கிறது.

Pic credit: Achal Mishra

ஹோலி கொண்டாட்டங்கள்- பங்கே பிஹாரி கோயில்:

ஹோலி கொண்டாட்டங்கள்- பங்கே பிஹாரி கோயில்:

ஹோலி பண்டிகையின் முக்கிய நாளான ரங்கபஞ்சமிக்கு சில நாட்கள் முன்பாக விருந்தாவனில் இருக்கும்பங்கே பிஹாரி கோயிலில் பக்தர்கள் கோயிலுக்குள் வந்து நேரடியாக கிருஷ்ணன் மேல் வண்ணப்பொடிகளை தூவி ஹோலி கொண்டாடும் நிகழ்வு நடக்கிறது.

வருகின்ற மார்ச் 23ஆம் தேதி காலை 9 மணி முதல் 1:30 வரை இது நடக்கவிருக்கிறது.

henrykkcheung

ஹோலி கொண்டாட்டங்கள்- மதுரா ஹோலி ஊர்வலம்:

ஹோலி கொண்டாட்டங்கள்- மதுரா ஹோலி ஊர்வலம்:

விருந்தாவனில் ஹோலி கொண்டாட்டங்கள் பகல் 1:30 முடிவடைந்த பிறகு அங்கிருந்து 11கி.மீ தொலைவிலிருக்கும் மதுராவிற்கு சென்று அங்கு மூன்று மணிக்கு நடக்கும் ஹோலி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.

விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் வண்ணப்போடிகள் தூவ விஷ்ராம் படித்துரையில் இருந்து ஹோலி படித்துரை வரை ஊர்வலம் செல்கின்றன. கிருஷ்ணன் பிறந்த ஊரில் ஹோலி கொண்டாடுவதை விட பாக்கியம் வேறென்ன இருக்க முடியும்.

விருந்தாவன்:

விருந்தாவன்:

என்றைக்கும் மறக்க முடியாத படி ஹோலி பண்டிகையை கொண்டாட விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த வருடம் விருந்தாவனுக்கு சென்று ஹோலி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுங்கள்.

விருந்தாவன் நகரை பற்றிய மேலதிக தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

உற்சாக மிகுதியில் சிறுவர்கள் !!

henrykkcheung

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் !!

Pabak Sarkar

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் !!

Captain Supachat

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் !!

Louish Pixel

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் !!

Sreeram Nambiar

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் !!

henrykkcheung

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்:

ஹோலி கொண்டாட்டங்கள் !!

Kannan Muthuraman

Read more about: festivals holi temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X