Search
  • Follow NativePlanet
Share
» »வானத்தில் பலூனில் பறக்க வேண்டும் என்று ஆசையா உங்களுக்கு?

வானத்தில் பலூனில் பறக்க வேண்டும் என்று ஆசையா உங்களுக்கு?

மனிதனுக்கு தோன்றிய ஆதி ஆசைகளில் ஒன்று பறவையை போல வானில் சிறகடித்து பறக்க வேண்டும் என்பது தான். அது நிறைவேறியது என்னவோ நூறு ஆண்டுகளுக்கு முன்பு தான். 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் விமானம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில ஆண்டுகள் முன்பு வரையிலும் கூட மனிதனால் பறப்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்றே கருதப்பட்டது. சைக்கிள் கடை வைத்திருந்த வ்றைக்ட் சகோதரர்களால் விமானத்தின் மாதிரி உருவாக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அறிவியல் வளர்ச்சியின் விளைவாக ஒளியின் வேகத்தில் செல்லும் விமானங்கள் வரை வந்துவிட்டன.

இருந்தும் விமான பயணம் பலருக்கு பறப்பதை போன்ற ஒரு உணர்வையே தராது. ஏதோ மிதக்கும் உலோகப்பெட்டிக்குள் உட்கார்ந்து செல்வதை போலத்தான் இருக்கும். அப்படியில்லாமல் வானில் பறந்து மேலிருந்து மனிதர்களையும், பேரழகு நிறைந்த இயற்கையையும் கண்டுரசிக்க ஆசையா உங்களுக்கு?. இந்தியாவிலேயே அதற்க்கான வாய்ப்பு இப்போது இருக்கிறது. அதை பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

லிங்கா படம் பார்த்திருக்கிறீர்களா?. அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரஜினியும், வில்லனும் பலூனில் பறந்துகொண்டே சண்டை போடுவது போல படமாக்கப்பட்டிருக்கும். அது தான் ஹாட் ஏர் பலூன் ஆகும்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

வெளிநாடுகளில் மட்டுமே இருந்துவந்த இந்த ஹாட் ஏர் பலூன் பயணம் இப்போது இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது.

ராஜஸ்தானில் இந்த பலூனில் பறந்தபடியே அம்மாநிலத்தில் உள்ள கோட்டைகள், வனவிலங்கு சரணாலயங்கள், குக்கிராமங்கள் போன்றவற்றை கண்டு மகிழலாம்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

ராஜஸ்தானில் இருக்கும் சில தனியார் நிறுவனங்களினால் ஹாட் ஏர் பலூன் பயணம் நடத்தப்படுகிறது.

ராஜஸ்தானில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான உதய்பூர், ஜெய்பூர், ரதம்போர் மற்றும் புஷ்கர் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

இந்த ஹாட் ஏர் பலூன் பயணங்கள் பொதுவாக அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவுமே நடத்தப்படுகிறது.

அதற்கு காரணம் அந்த சமயங்களில் தான் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். ஒருவேளை அந்த நேரத்திலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் இந்த பலூன் பயணம் ரத்து செய்யப்படும்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூனில் ஒரு மணிநேரம் வரை நாம் வானில் பறக்கலாம். வானில் பறக்கும் நேரத்தை தவிர அதற்காக தயாராகும் நேரத்தை கணக்கிட்டால் மொத்தம் மூன்று மணிநேரம் வரை பலூனில் நாம் இருக்கலாம்.

நாம் பறக்கும் நேரத்தில் இருக்கும் வானிலை, காற்றோட்டம் போன்றவற்றை பொறுத்து தரையிலிருந்து 1200 அடி உயரம் வரை நாம் செல்லலாம்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

ராஜஸ்தானில் வருடம் முழுக்க ஒரே மாதிரியான வெப்ப நிலையை நிலவுகிறது. எனவே இதன் காரணமாக பலூன் பயணம் ரத்து செய்யப்படுவது கிடையாது.

அப்படியே ரத்து செய்யப்படுவதாய் இருந்தால் நிறுவனத்தால் நம்மிடம் அதுகுறித்து முன்னரே தெளிவாக சொல்லப்பட்டு பணம் திரும்ப அளிக்கப்படும்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

ஒரே சமயத்தில் இந்த பலூனில் நான்கு பேர் முதல் எட்டுப்பேர் வரை பயணம் செய்யலாம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பலூனில் ஏற அனுமதியில்லை.

ஒரு மணிநேரம் வரை தொடர்ந்து நிற்கவேண்டும் என்பதால் அதற்க்கான உடல் பலம் உங்களுக்கு இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன் பயணம் மேற்கொள்ள அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டம் உகந்ததாகும்.

இதற்கு கட்டணமாக ஒருவருக்கு 8000-9000 வரை வசூலிக்கப்படுகிறது.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

இந்தியாவின் சுற்றுலா தலைநகரான ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க ஹாட் ஏர் பலூனில் சுற்றிப்பார்ப்பது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

குறிப்பாக புஷ்கர் மற்றும் உதய்பூர் நகரங்களை சுற்றிப்பார்ப்பது அட்டகாசமாக இருக்கும். அந்த இரண்டு நகரங்களை பற்றியும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் அல்லது நவம்பர் மாத இறுதியில் உலகின் மிகப்பெரிய ஒட்டக சந்தை நடைபெறும். 4-5நாட்கள் கோலாகலமாக இவ்விழா நடைபெறும்.

ஒட்டகச்சந்தை மட்டுமில்லாது கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாப்பயணிகள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகளும் நடைபெறும். இதனை பலூனில் மேலே பறந்தபடியே கண்டு ரசிக்கலாம்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

புஷ்கர் ஒட்டக சந்தையில் ஒட்டகங்களுக்கு இடையேயான அழகி போட்டி நடக்கிறது. விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள் இப்போட்டியில் கலந்துகொள்கின்றன.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

புஷ்கரை போலவே ராஜஸ்தானில் இருக்கும் மற்றுமொரு மிகப்பிரபலமான சுற்றுலா நாகரம் தான் உதய்பூர் ஆகும். இந்தியாவின் வெனிஸ் என்றழைக்கப்படும் இந்நகரில் தான் செயற்கை ஏரிக்கு நடுவே அமைந்த 'லேக் பேலஸ்', உதய்பூர் மகாராஜாவின் இருப்பிடமான சிவ் நிவாஸ் பேலஸ், மாலை நேரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் பிசோலா ஏரி போன்றவற்றை பலூனில் பறந்தபடியே காணலாம்.

ஹாட் ஏர் பலூன்!!

ஹாட் ஏர் பலூன்!!

அடுத்த முறை ராஜஸ்தான் வந்தால் நிச்சயம் ஹாட் ஏர் பலூனில் ஒரு பயணம் மேற்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

புஷ்கர்

உதய்பூர்

ஜெய்பூர்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X