Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பட்டு நகரம் பற்றி தெரியுமா?

இந்தியாவின் பட்டு நகரம் பற்றி தெரியுமா?

ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் போச்சம்பல்லி நகரம், அங்கு தயார் செய்யப்படும் தரம் மிக்க பட்டுப் புடவைகளால் இந்தியாவின் பட்டு நகரம் என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. இந்த நகரம் பு

By Udhaya

ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் போச்சம்பல்லி நகரம், அங்கு தயார் செய்யப்படும் தரம் மிக்க பட்டுப் புடவைகளால் இந்தியாவின் பட்டு நகரம் என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. இந்த நகரம் புடவைகளுக்காக மட்டும் அல்லாமல் அதன் சுவை மிக்க கலாச்சாரத்துக்காகவும், பாரம்பரியத்துக்காகவும், புராதனத்துக்காகவும், வரலாற்று சிறப்புக்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இவை யாவையும் கிரகித்துக் கொண்டு தனித்துவமான நவீனப் பாதையில் பயணிக்கும் பாங்குக்காகவும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த ஊரைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

 பசுமை போர்த்திய குன்றுகள்

பசுமை போர்த்திய குன்றுகள்

போச்சம்பல்லி நகரம் பசுமை போர்த்திய குன்றுகள் புடைசூழ நெடுதுயர்ந்த பனை மரங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கோயில்களுக்கு மத்தியில் எழில் கொஞ்சம் நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு நடுவிலும் விருந்தோம்பல் பண்பில் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. இதன் காரணமாகவே போச்சம்பல்லி நகருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் வாரக்கணக்கில் தங்கி பட்டுப் புடவைகள் நெய்யும் கலையை நகர மக்களிடமிருந்து ஆர்வத்துடன் பயின்று செல்கின்றனர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூதான் இயக்கத்துக்காக போச்சம்பல்லி நகரம் சரித்திரங்களின் பக்கங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது 1950-களில் ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை பெற்றுத் தர இந்தியா முழுவதும் நடையாய் நடந்து ஒவ்வொரு நில உரிமையாளர்களிடம் சென்று ஆச்சார்ய வினோபா பாவே கோரிக்கை விடுத்தார். அப்படி அவர் நடத்திய பூதான் இயக்கம் துவங்கிய இடமாக போச்சம்பல்லி நகரம் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நகரத்தை சேர்ந்த நிலச்சுவாந்தாரான ராமச்சந்திர ரெட்டி என்பவர் பூதான் இயக்கத்திற்காக தன்னுடைய 250 ஏக்ரா நிலங்களை தானமாக அளித்தார்.

அதன் பிறகு வேறு பல நில உரிமையாளர்களும் தங்களுடைய நிலங்களை ஏழைகளுக்கு அளிக்க முன் வந்தனர். இதன் காரணமாக போச்சம்பல்லி நகரம் அன்றிலிருந்து பூதான் போச்சம்பல்லி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. போச்சம்பல்லி நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக வினோபா மந்திர் மற்றும் 101 தர்வாஜா இல்லம் ஆகியவை அறியப்படுகின்றன. போச்சம்பல்லி நகரில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் இல்லாதபோதும், ஹைதராபாத் உள்ளிட்ட ஆந்திராவின் பிற நகரங்களிலிருந்து சாலை வழியாக போச்சம்பல்லி நகரை சுலபமாக அடைந்து விட முடியும்.

101 தர்வாஜா இல்லம்

101 தர்வாஜா இல்லம்

போச்சம்பல்லி நகரில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதன கட்டிடமான 101 தர்வாஜா இல்லம் அப்போதைய கிராம வருவாய்த்துறை தலைவரால் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் 101 கதவுகளை கொண்டு கட்டப்பட்டுள்ளதால் 101 தர்வாஜா என்று அழைக்கப்படுகிறது. 101 தர்வாஜா இல்லத்தின் ஒவ்வொரு கதவுகளின் வழியாகவும் நீங்கள் பார்க்கும் காட்சியை உங்கள் வாழ் நாள் பூராவும் உங்களால் மறக்க முடியாது. எனினும் இதன் அனைத்து கதவுகளும் எப்போதும் திறந்திருப்பதில்லை. 101 தர்வாஜா இல்லம் தற்போது சாந்தி நிகேதன் என்று பெயரிடப்பட்டு ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வாரத்தில் ஒரு சில நாட்களில்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

வினோபா மந்திர்

வினோபா மந்திர்

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூதான் இயக்கம் துவங்கிய இடமாக வினோபா மந்திர் சரித்திரங்களின் பக்கங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. வினோபா மந்திர் என்பது உண்மையில் வினோபா பாவேவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் ஆஸ்ரமமே ஆகும். ஆனால் இதன் சமய முக்கியத்துவம் காரணமாக இது கோயிலாக கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளே வினோபா பாவேவுக்கும், பூதான் இயக்கத்திற்காக முதலில் தயாள மனதுடன் 250 ஏக்ரா நிலம் வழங்கியவரான ராமச்சந்திர ரெட்டிக்கும் சிலைகள் உள்ளன. அதோடு இங்கு வினோபா பாவேவின் வாழ்க்கை குறிப்புகள் பயணிகள் தெரிந்துகொள்ளும் விதமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூதன் இயக்கத்தின் சின்னமாக கோயிலுக்கு வெளியே பூதான் ஸ்தூபம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

Rahulogy

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X