Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய நகரங்களின் இரவு நேரத் தோற்றம்!!!

இந்திய நகரங்களின் இரவு நேரத் தோற்றம்!!!

By

இந்தியாவிலுள்ள பெருநகரங்கள் அதிக மக்கள்தொகையை கொண்டிருப்பதுடன், வாகனங்களும் அங்கே அதிகளவில் காணப்படுகின்றன.

இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் இந்த நகரங்கள், பகலை விட இரவில் இன்னும் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன.

அந்தவகையில் இரவின் இருளை கிழித்துக்கொண்டு செல்லும் வாகனங்களும், மறுபக்கம் ஆரவாரமற்று மின் விளக்கின் ஒளியில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பகுதிகளுமென, நகரங்கள் இரவு வேளையில் புது வேடம் பூணுகின்றன.

அந்த சமயத்தில் இந்தியாவின் சில நகரங்கள் எவ்வாறாக காட்சியளிக்கின்றன என்று பார்ப்போம்.

படித்துப் பாருங்கள் : இந்தியாவின் பெஸ்ட் சன் செட் மற்றும் சன் ரைஸ்!

மும்பை

மும்பை

மும்பை கார்ப்பரேஷன் கட்டிடம் முன்பாக மாநகராட்சி பேருந்து, டேக்ஸிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் காட்சி.

படம் : Advait Supnekar

சென்னை

சென்னை

சென்னை கோட்டை ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையில் செல்லும் வாகனங்களின் விளக்கொளி.

படம் : Planemad

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹௌரா பாலம் இரவு நேர விளக்கொளியில் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

படம் : Shubhankar.sengupta19
http://commons.wikimedia.org/wiki/File:Howrah_bridge_betwixt_Lights.jpg

டெல்லி

டெல்லி

தலைநகர் டெல்லியிலுள்ள இந்தியா கேட் முன்பாக சுற்றுலாப் பயணிகள்.

படம் : Edmund Gall

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான UB சிட்டியும், அதற்கு பின்னால் கர்நாடக சட்டசபையான விதான சௌதா உள்ளிட்ட கட்டிடங்களும்.

படம் : Ming-yen Hsu

ஹைதராபாத்

ஹைதராபாத்

எப்போதும் வற்றாத நீர்த்தேக்கத்துடன் காட்சியளிக்கும் ஹுசேன் சாகர் ஏரி, ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் இரண்டையும் இணைப்பது போன்று காட்சியளிக்கிறது. ஏரியை சுற்றிலும் ‘நெக்லஸ் ரோடு' எனும் பிரசித்தமான வீதி அமைந்துள்ளது.

படம் : Alosh Bennett

குவஹாத்தி

குவஹாத்தி

தீபாவளி கொண்டாட்டத்தின் போது அஸ்ஸாம் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான குவஹாத்தி.

படம் : Kinshuk Kashyap

அஹமதாபாத்

அஹமதாபாத்

குஜராத் மாநிலத்தின் பொருளாதார நகரமாகவும், மிகப்பெரிய நகரமாகவும் அறியப்படும் அஹமதாபாத்தில் நவராத்திரி திருவிழாவை ஒட்டி கர்பா நடனமாடும் கலைஞர்கள்.

படம் : Hardik jadeja

ஆலப்புழா

ஆலப்புழா

ஆலப்புழாவின் உப்பங்கழியில் மிதந்து செல்லும் அழகிய படகு இல்லம்.

படம் : Ajith

அலஹாபாத்

அலஹாபாத்

அலஹாபாத் கும்பமேளாவின் போது.

அம்ரித்ஸர்

அம்ரித்ஸர்

அம்ரித்ஸரின் புகழ்பெற்ற தங்கக் கோயிலான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்.

மதுரை

மதுரை

மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆல்பெர்ட் விக்டர் பாலம்.

படம் : wishvam

ஹரித்வார்

ஹரித்வார்

ஹரித்வாரில் கங்கை நதியோரம் அமைந்திருக்கும் புனித இடமான ஹர் கி பௌரி.

படம் : Livefree2013

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சவாய் மான்சிங் அரண்மனை நிலவுடன் போட்டிபோட்டு ஜொலிக்கிறது.

படம் : Nitesh Pandey

ஜம்ஷேட்பூர்

ஜம்ஷேட்பூர்

ஜார்கண்ட் மாநிலத்தின் எஃகு நகரமாக அறியப்படும் ஜம்ஷேட்பூர் நகரிலுள்ள டாட்டா ஸ்டீல் தொழிற்சாலை.

படம் : Ashokinder

கொச்சி

கொச்சி

கொச்சி மரைன் டிரைவ் பகுதி மின் விளக்குகளின் ஒளியில் தகதகவென ஜொலிக்கிறது.

படம் : Augustus Binu

வாரணாசி

வாரணாசி

வாரணாசியில் கங்கைக் கரையோரத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான படித்துறையான தசாஸ்வமேத் படித்துறை.

படம் : dalbera

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி கடற்கரைக்கு அருகில் செல்லும் சாலை ஒரு மழைக்காலத்தில்!

படம் : Nelson.G

சிம்லா

சிம்லா

ஹிமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள டவுன் ஹால் பகுதி.

படம் : Sumit.kumar2209

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை.

படம் : Jegan M

கர்னூல்

கர்னூல்

ஆந்திர மாநிலம் கர்னூலில் உள்ள 12-ஆம் நூற்றாண்டு கோட்டை 'கொண்ட ரெட்டி புருஜு'.

படம் : Poreddy Sagar

சிவகாசி

சிவகாசி

'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசியின் பரபரப்பான வீதி ஒன்று.

படம் : Joel Suganth

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X