Search
  • Follow NativePlanet
Share
» »டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!

டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!

இந்தியன் ரயில்வே மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஒரு அசத்தலான ஆன்மீக சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC இன் இந்த பட்ஜெட் ஃபிரண்ட்லியான டூர் பேக்கேஜ் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' மற்றும் 'தேகோ அப்னா தேஷ்' முயற்சிகளின் கீழ் துவங்கப்பட்டுள்ளது. தொகுப்பின் கீழ், பயணிகள் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான இடங்களையும், சில புனிதமான கோவில்களையும் கண்டு களிக்கலாம்.

இந்த பட்ஜெட் ஃபிரண்ட்லியான டூர் பேக்கேஜ் பற்றிய நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் கீழே படியுங்கள்!

‘சவுத் இந்தியா டிவைன் டூர் பேக்கேஜ் எக்ஸ் டெல்லி’

‘சவுத் இந்தியா டிவைன் டூர் பேக்கேஜ் எக்ஸ் டெல்லி’

'சவுத் இந்தியா டிவைன் டூர் பேக்கேஜ் எக்ஸ் டெல்லி' என்ற பெயர் கொண்ட பேக்கேஜ் இரண்டு முறை மேற்க்கொள்ளப்படுகிறது. முதல் பயணம் ஆகஸ்ட் 19 2022 அன்றும், இரண்டாவது பயணம் செப்டம்பர் 16 2022 அன்றும் தொடங்குகிறது. இந்த தொகுப்பின் கீழ், பயணிகளுக்கு விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் அறைகள், பயணக் காப்பீடு, உணவு (காலை மற்றும் இரவு உணவு), தரிசன டிக்கெட்டுகள் மற்றும் பேருந்து வசதி என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் நீங்கள் பத்மநாபசுவாமி கோயில், விவேகானந்தர் பாறை நினைவகம், ராமநாதசுவாமி கோயில், மீனாட்சி கோயில், திருப்பதி பாலாஜி கோயில், ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் ஆகியவற்றை பார்வையிடலாம்.

6 இரவு 7 பகல் அடங்கிய டூர் பேக்கேஜ்

6 இரவு 7 பகல் அடங்கிய டூர் பேக்கேஜ்

> டெல்லியில் தொடங்கும் இந்த பேக்கேஜில் பயணிகள் முதல் நாள் காலையில் விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைவார்கள். சிறிது களைப்பாறி உணவு உண்ட பின்னர் பயணிகள் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் பயணிகள் இரவை திருப்பதியில் கழிப்பார்கள்.

> இரண்டாம் நாள் காலை உணவுக்கு பிறகு அனைவரும் திருமலை ஸ்ரீ பாலாஜியையும், ஸ்ரீ பத்மாவதியையும் தரிசிப்பார்கள். பின்னர் அனைவரும் விமானம் மூலம் சென்னையை அடைவார்கள்.

> மூன்றாம் நாள் சுற்றுலாப் பயணிகள் காலை உணவுக்குப் பிறகு விமானம் மூலம் திருவனந்தபுரத்தை அடைவார்கள். பிறகு கோவளம் கடற்கரை, திருவனந்தபுரத்திற்கு அருகிலேயே உள்ள இடங்களுக்கு செல்வார்கள்.

> நான்காம் நாள் காலையில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில், கன்னியாகுமரி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், குமரி அம்மன் கோயில் மற்றும் சன்செட் பாயிண்ட் ஆகியவற்றைப் பார்வையிடுவார்கள்.

> ஐந்தாம் நாள் காலையில் காலை உணவுக்கு பின் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடற்கரையை கண்டு களிக்கலாம்.

> ஆறாம் நாள் காலையில் ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்வார்கள். தரிசனத்திற்கு பின்னர் பயணிகள் மதுரையை நோக்கி பயணிப்பார்கள். வழியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் செல்வார்கள்.

> ஏழாம் நாள் காலையில் மீனாட்சி கோயிலுக்கு செல்வார்கள். இத்துடன் பயணம் முடிவுக்கு வரும். சுற்றுலா பயணிகள் மதியத்திற்கு மேல் விமானம் மூலம் டெல்லி விமான நிலையத்தை சென்றடைவார்கள்.

கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள்

கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள்

இதில் உங்களுக்கு கம்ஃபர்ட், ஸ்டாண்டர்ட் மற்றும் பட்ஜெட் ஆகிய மூன்று வகுப்புகளின் தேர்வுகள் உள்ளன. ஒரு நபருக்கான கட்டணத்தைப் பற்றி நாம் பேசுகையில், கம்ஃபர்ட் வகுப்பு கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 45,260 இல் இருந்து தொடங்குகிறது. மேலும்

>கம்ஃபர்ட் வகுப்பில், 3 ஏசி டிக்கெட், காலை உணவு, மதிய உணவு, மாலை டீ-ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவும் கிடைக்கும், தங்குவதற்கு ஏசி அறை, ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பயண காப்பீடு ஆகியவை அடங்கும்.

>ஸ்டாண்டர்ட் வகுப்பில் ஸ்லீப்பர் ரயில் பயணம், ஸ்டாண்டர்ட் பொருளாதாரம் என்ஏசி அறை வசதி, காலை உணவு, மதிய உணவு, மாலை டீ-ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு, ஒரு நாளைக்கு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில், பயண காப்பீடு ஆகியவை அடங்கும்.

>பட்ஜெட் வகுப்பில் ரயில் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட், தர்மசாலா அல்லது ஹாலில் தங்குவதற்கான வசதி, காலை உணவு, மதிய உணவு, மாலை டீ-ஸ்நாக்ஸ் மற்றும் இரவு உணவு, ஒரு நாளைக்கு 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் மற்றும் பயண காப்பீடு ஆகியவை அடங்கும்.

> இரண்டு முதல் நான்கு வயது ஆகும் குழந்தைகளுக்கு கட்டணமாக ரூ.28,820 வசூலிக்கப்படுகிறது.

ஆகவே இப்போதே https://www.irctctourism.com/ என்ற இணையத்தளத்திலோ அல்லது மண்டல ரயில்வே அலுவலகங்களிலோ நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X