Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் ரூ. 21,600 இல் சண்டிகர், சிம்லா மற்றும் மணாலிக்கு 11 நாள் சுற்றுலா – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

வெறும் ரூ. 21,600 இல் சண்டிகர், சிம்லா மற்றும் மணாலிக்கு 11 நாள் சுற்றுலா – அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

அடிக்கிற வெயிலுக்கு இதமாக மலிவான விலையில் மலைப்பிரதேச சுற்றுலா ஒன்று சென்று வந்தால் நன்றாக இருக்குமென்று யோசிக்கிறீர்களா? உங்களுக்காகவே IRCTC ஒரு உற்சாகமான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது! ஆம், வெறும் ரூ. 21,600 இல் சண்டிகர், சிம்லா மற்றும் மணாலிக்கு நீங்கள் சுற்றுலா செல்லலாம்! அதனைப் பற்றிய விரிவான விவரங்களை இங்கே காண்போம்!

IRCTC அறிமுகப்படுத்திய புதிய டூர் பேக்கேஜ்

IRCTC அறிமுகப்படுத்திய புதிய டூர் பேக்கேஜ்

அன்றாட வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து ஒரு சிறு ஓய்வு எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா! ஆனால் அதே நேரத்தில் செலவும் அதிகம் ஆகக் கூடாது என்ற எண்ணம் உள்ளதா? நீங்கள் உடனே IRCTC இன் இணையத்தளத்தைப் பார்வையிட வேண்டும். IRCTC உங்களுக்காக எப்போதுமே ஏதாவது ஒரு உற்சாகமான திட்டத்தை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அந்த வகையில் தான் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் பதினொரு பகல்கள் பத்து இரவுகள் அடங்கிய சண்டிகர், மணாலி மற்றும் சிம்லா செல்லக்கூடிய ஒரு அட்டகாசமான டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கேஜில் பயணிகளுக்கான தங்கும் வசதி, உணவு, சுற்றிப் பார்ப்பது மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை அடங்கியுள்ளது.

டூர் பேக்கேஜின் விரிவாக்கம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த சுற்றுலா 3 ஆம் நாளன்று சண்டிகரை வந்தடைகிறது. அந்த நாள் முழுவதும் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரி, ரோஸ் கார்டன், மியூசியம், உயிரியல் பூங்கா ஆகியவற்றை சுற்றிப் பார்க்கலாம்.

5 ஆம் நாள் இரவில் சிம்லாவை அடைவீர்கள். 6, 7 மற்றும் 8 ஆம் நாட்களில் சிம்லா மற்றும் மணாலியில் உள்ள பள்ளத்தாக்குகள், மியூசியம், மடாலயங்கள், பனி மூடிய சிகரங்கள், சாலைகள், சாகச விளையாட்டுகள் ஆகியவற்றில் நீங்கள் ஈடுபடலாம். பிறகு 9 ஆம் நாளன்று மணாலியிலிருந்து சண்டிகரை அடைவீர்கள். பிறகு மீண்டும் சண்டிகரில் ஓய்வெடுத்துவிட்டு 11 ஆம் நாளன்று ஹவுரா ரயில் நிலையத்தை வந்தடைவீர்கள்.

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

டூர் பேக்கேஜிற்கான கட்டணங்கள்

நீங்கள் 1-3 பேர் கொண்ட குழுவாக இருந்தால், சிங்கிள் ஷேரிங்கிற்கு ரூ. 50,220, டபுள் ஷேரிங்கிற்கு ரூ.27,770 கட்டணமாக வசூலிக்கப்படும். அதுவே நீங்கள் 4-6 பேர் கொண்ட குழுவாக இருந்தால், சிங்கிள் ஷேரிங்கிற்கு ரூ. 62,130, டபுள் ஷேரிங்கிற்கு ரூ. 22,800 கட்டணமாக வசூலிக்கப்படும். குழந்தைகளுடன் பயணம் செய்தால் அதற்கு தனிக் கட்டணம் நீங்கள் செலுத்தவேண்டியிருக்கும்.

ஆகவே நீங்கள் சிம்லா, மணாலி அல்லது சண்டிகருக்குச் செல்ல திட்டமிட்டால் இந்த உற்சாகமான டூர் பேக்கேஜை பயன்படுத்திக்கொள்ளுங்கள்! உடனே https://www.irctctourism.com என்ற இணையத்தளத்தை பார்வையிட்டு இந்த அட்டகாசமான டூர் பேக்கேஜை உங்கள் வசப்படுத்திக்கொள்ளுங்கள்!

Read more about: irctc tour package chandigarh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X