Search
  • Follow NativePlanet
Share
» »இடார்ஸி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இடார்ஸி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இடார்ஸி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

இடார்ஸி அதன் முந்தய காலங்களில் மேற்கொண்ட வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தப் பெயரைப்பெற்றுள்ளது. முந்தய காலங்களில் இந்நகரம் செங்கற்கள்(இண்ட்) மற்றும் கயிறு (ராஸி) வர்த்தகத்திற்கு பெயர் பெற்றது. அதன் காரணமாக இது இடார்ஸி' என அழைக்கப்படுகிறது. ஆனால் இன்று இது பிளைவுட் வர்தகத்திற்கு புகழ் பெற்று விளங்குகிறது. கனிம வளம் மிக்க இந்த நகரத்தில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலை இந்திய ராணுவத்தின் ஆயுதங்களின் தேவையை தீர்த்து வைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இங்குள்ள சோயா எண்ணெய் ஆலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இந்த நகரத்தை ஒரு பிரதம வர்த்தக மையமாக மாற்றியுள்ளது.

இடார்ஸி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இடார்ஸி சுற்றுலா பயணிகளுக்கு மிகச் சிறந்த சுற்றுலா இடங்களை தருகிறது. அவற்றுள் டாவா ஆற்றில் அமைந்துள்ள டாவா நீர்த்தேக்கம் மற்றும் போரி வனவிலங்கு சரணாலயம் போன்றவை மிக முக்கியமானவை. இந்த நகரத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல மதத் தளங்கள் உள்ளன. அவற்றுள் இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம், போதி மாதா மந்திர், ஹுஸைனி மஜ்ஜித், போன்றவை முக்கியமானவை. இங்கு உள்ள தெருக்களில் கைகளால் செய்யப்பட்ட கவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

இடார்ஸி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

BSSKrishnaS

இடார்ஸியை எவ்வாறு அடைவது?

இடார்ஸியை போபாலில் இருந்து மிக எளிதாக அணுகலாம். இது சாலை மற்றும் ரயில்கள் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை NH-69, இடார்ஸி வழியாக செல்கிறது. இந்த நகரத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக பல்வேறு ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் உள்ளன.

குளிர் காலமே இந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல சிறந்த பருவம் ஆகும்.

போரி வனவிலங்கு சரணாலயம்

போரி வனவிலங்கு சரணாலயம் நாட்டின் பழமையான வனவிலங்கு சரணாலயம் ஆகும். இந்த சரணாலயம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள சத்புரா மலையின் அடிவாரத்தில் உள்ளது. 1865 ம் ஆண்டு இந்த வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இது சுமார் 518 சதுர கி.மீ. அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. அழகும் கம்பீரமும் உள்ள சத்புரா தேசிய பூங்கா இதன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ளது. மேற்கு பகுதியில் டாவா ஆறு ஓடுகிறது. இத்தகைய அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த போரி வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன.
இந்த சரணாலயத்தில் உலர் இலையுதிர் மற்றும் மூங்கில் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சரணாலயத்தில் புலி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை, சாம்பார், சின்காரா, குரைக்கும் மான், பெரிய அணில், கோடிட்ட கழுதை புலி, குள்ளநரி, நீல்காய், நான்கு கொம்பு மான் போன்ற பல விலங்கினங்கள் காணப்படுகின்றன. புலிகள் இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சபாரிக்கள் நடத்தப்படுகின்றன. இங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக காட்டு பங்களாக்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன.

இடார்ஸி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Sulfur

இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம்

இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம் இடார்ஸின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். இந்த தேவாலயம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த சிறிய நகரத்தில் இருக்கும் இன ஒற்றுமைக்கு ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. இங்கு அனைத்து மத மக்களும் இணக்கமுடன் வாழ்கின்றனர். அதற்கு இங்குள்ள பல்வேறு மத வழிபாட்டு தளங்களே சாட்சியாக இருக்கின்றன. இந்த தேவாலயம் கிறித்தவ மக்களிடம் மட்டுமல்ல பிற மதங்களைச் சேர்ந்த மக்களிடமும் மிகப் பிரபலமாக உள்ளது.

இந்த தேவாலயத்தின் கட்டடக்கலை வடிவமைப்பு ஒரு அற்புதம் ஆகும். எனவே இடார்ஸிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த தேவாலயத்தை தரிசிப்பது அவர்களுடைய மனதிற்கு இதம் அளிக்கும். இந்த தேவாலயம் இந்த பகுதியில் பல்வேறு சமூக மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த தேவாலயம் அமைந்துள்ள இடம், இந்த தேவாலயத்தின் புனிதத்திற்கும் அதன் பிரபலத்திற்கும் காரணமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் எளிதாக அணுகலாம்.

Read more about: madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X