Search
  • Follow NativePlanet
Share
» »தாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா?

தாஜ்மஹால் தெரியும்..அதே ஆக்ராவில் குட்டி தாஜ்மஹால் ஒன்றும் இருக்கிறது அதை பற்றி தெரியுமா?

By Naveen

ஆக்ரா என்றாலே நம் நினைவுக்கு வருவது தாஜ்மஹால் தான். மனிதனால் இதைவிட பேரழகான ஒரு கட்டிடத்தை கட்டவே முடியாது என்று சொல்லுமளவுக்கு வெண்பளிங்கு கற்களினால் இழைக்கப்பட்டிருக்கும் தாஜ்மஹால் முகலாயர்களின் பெருமையை நூற்றாண்டுகள் கடந்தும் உலகுக்கு பறைசாற்றி வருகிறது.

இந்த ஆக்ரா நகரில் தாஜ்மஹாலை தவிரவும் முகலாய அரசர்களால் கட்டப்பட்ட பல்வேறு வரலாற்று கட்டிடங்கள் இன்றும் புதுப்பொலிவுடன் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் குட்டி தாஜ்மஹால் என்று விளிக்கப்படும் 'இத்மத் உத் தௌலா' ஆகும். தாஜ்மஹாலை போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இத்மத் உத் தௌலா :

இத்மத் உத் தௌலா :

பொன்னாபரணப் பெட்டகம் என்றும் குட்டி தாஜ்மஹால் என்றும் அழைக்கப்படும் இத்மத் உத் தௌலாஉத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது.

Jon Connell

இத்மத் உத் தௌலா :

இத்மத் உத் தௌலா :

கி.பி 1622 ஆரம்பித்து கி.பி 1628ஆம் ஆண்டு இத்மத் உத் தௌலா கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இருக்கும் ஹுமாயுனின் கல்லறை மற்றும் அக்பரின் கல்லறையான ஷிகந்தராவை போன்றே இக்கட்டிடத்தின் அடித்தளமும் செந்நிற மணல்கற்களினால் கட்டப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து அடித்தளத்தின் மேல் வெண்பளிங்கு கற்களை கொண்டு கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

lionel.viroulaud

யாரால் கட்டப்பட்டது?

யாரால் கட்டப்பட்டது?

இந்த குட்டி தாஜ்மஹாலானது பின்னாளில் தாஜ்மஹாலை கட்டிய முகலாய பேரரசர் ஷாஹ் ஜகானின் தாயார் நூர் ஜகானால் கட்டப்பட்டிருக்கிறது. 'மிர்சா கியாஸ்' என்ற அவரது தந்தையின் நினைவாகவே 'இத்மத் உத் தௌலா' கட்டப்பட்டிருக்கிறது.

Saad Akhtar

மும்தாஜ் !!

மும்தாஜ் !!

இந்த மிர்சா கியாசின் மகனும் நூர் ஜகானின் சகோதரருமான அபுல் ஹசன் என்பவரின் மகள் தான் மும்தாஜ் ஆவர். ஷாஹ் ஜகானுக்கு மணமுடிக்கப்பட்ட மும்தாஜின் நினைவாகத்தான் யமுனை ஆற்றின் கரையில் தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தாவுக்கும் பேத்திக்கும் தாஜ்மஹாலை போன்ற பேரழகுடைய நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டிருப்பது எத்தனை விந்தை.

lionel.viroulaud

குட்டி தாஜ்மஹாலின் அமைப்பு:

குட்டி தாஜ்மஹாலின் அமைப்பு:

தாஜ்மஹாலை போன்றே யமுனை ஆற்றின் கரையில் இத்மத் உத் தௌலாஉள்ளது. மிகப்பெரிய தோட்டத்தின் நடுவே துல்லியமான திட்டமிடலுடன் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள் மற்றும் நடைபாதைகளின் நடுவே ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட பளிங்கு கற்களினால் இத்மத் உத் தௌலாகட்டப்பட்டிருக்கிறது.

Ihorpa

உட்புற அலங்காரம்:

உட்புற அலங்காரம்:

இத்மத் உத் தௌலாகல்லறையின் உட்புறம் கார்நீலியன், ஜாஸ்பெர் போன்ற விலையுயர்ந்த கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளி இவற்றின் மேல்படும் போது வர்ணஜாலம் உருவாகிறது.

பின்னாளில் ஷாஹ் ஜகான் தாஜ்மஹாலை இதனை மாதிரியாக வைத்தே வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது.

Garrett Ziegler

உட்புற அலங்காரம்:

உட்புற அலங்காரம்:

இதனுள்ளே நூர் ஜகானின் தாய் மற்றும் தந்தையின் கல்லறைகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன. முகலாயர்களால் முதன்முதலில் முழுக்க முழுக்க பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட கட்டிடம் என்பதோடு பின்னாளில் கட்டப்பட்ட தாஜ்மஹாளுக்கே முன்னோடியாகவும் இத்மத் உத் தௌலாஇருந்திருக்கிறது.

Saad Akhtar

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

அருகருகே வைக்கப்பட்டுள்ள கல்லறைகள் !!

Christine Chauvin

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

தாஜ்மஹால் உள்ளேயும் இதே போலத்தான் ஷாஹ் ஜகான் மற்றும் மும்தாஜின் சமாதிகள் வைக்கப்பட்டுள்ளன.

Christine Chauvin

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

அலங்கார நுழைவுவாயில்!!

Beth

புகைப்படங்கள்:

புகைப்படங்கள்:

இத்மத் உத் தௌலா பற்றிய மேலும் அதிக தகவல்களையும், அதனை எப்படி சென்றடைவது? போன்ற தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X