Search
  • Follow NativePlanet
Share
» »ஜோதிட கல் போயிடிச்சி.. இப்பல்லாம் ஜோதிட செடிதான்... இந்த இடம் பற்றி தெரியுமா?

ஜோதிட கல் போயிடிச்சி.. இப்பல்லாம் ஜோதிட செடிதான்... இந்த இடம் பற்றி தெரியுமா?

ஜோதிட கல் போயிடிச்சி.. இப்பல்லாம் ஜோதிட செடிதான்... இந்த இடம் பற்றி தெரியுமா?

மாங்கல்யா வான், கைலாஷ் தேக்ரி என்கிற மலை உச்சியில் அமைந்துள்ளது. இது கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் அம்பாஜி கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. வாருங்கள் இந்த இடம் பற்றி தெரிந்துகொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 ஜோதிட தோட்டம்

ஜோதிட தோட்டம்

மாங்கல்யா வான் என்பது ஒரு தனித்தன்மை வாயந்து ஜோதிட தோட்டம் ஆகும். இங்குள்ள தோட்டத்தில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று தாவரங்கள் உள்ளன.

அதிர்ஷ்ட தாவரங்கள்

அதிர்ஷ்ட தாவரங்கள்

ஜோதிடர்கள், அதிர்ஷ்டக் கற்கள் தருகின்றன அதே பலனை இந்த தாவரங்கள் கொடுப்பதாக கூறுகின்றனர். ஜோதிட தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்தத் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

கன்றுகள் விற்பனைக்கு

கன்றுகள் விற்பனைக்கு

அவர்களில் சிலர் அவர்களுக்கு தேவைப்படும் ஜோதிட தாவரங்களின் கன்றுகளை வாங்கிச் செல்கின்றனர். ஒருவருடைய ராசிக்கான மரத்தை ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது.

 கப்பார் மலை

கப்பார் மலை

கப்பார் மலை குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ல அம்பாஜி கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தெய்வீகமான இடம் புனித அன்னை அம்பாஜியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. இந்து மத புராணமான தந்த்ரா சூடாமணியில் தேவி சதியின் இறந்த உடலில் இருந்து ஒரு துண்டு இதயம் இந்த மலையில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 999 படிகள்

999 படிகள்


மலை ஏறி கோவிலை அடைய உதவும் 999 படிகள் இங்கு இருக்கின்றன. மலை உச்சியில் இருந்து சூரியன் மறைவதைப் பார்த்து ரசிக்கும் அனுபவம் ஓவியம் போல நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்

Read more about: travel gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X