Search
  • Follow NativePlanet
Share
» »காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

வளமையான வரலாறு மற்றும் கலையை கொண்ட காலாஹண்டி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். உட்டேய் மற்றும் டெல் நதிகள் சங்கமாகும் இடத்தில் உள்ள இந்த இடத்தில் பழமையான பல கோவில்கள் உள்ளன. 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவிலில் அருமையான கட்டடக் கலையை காண நேரிடலாம். ஓவியத்தை போல் உள்ள மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அழகிய நகரம் இது. கற்காலம் மற்றும் இரும்புக் காலத்திற்கான பல தொல்பொருள் ஆதாரங்கள் இந்த இடத்தில் கிடைத்துள்ளன. இங்கு ஒவ்வொரு வருடமும் காலாஹண்டி உத்சவ் கொண்டாடப்படுகிறது. இந்த உத்சவத்தில் உலகளாவிய புகழ் பெற்ற இதன் கவின் கலைகள், பண்பாடு, இசை மற்றும் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்.

காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Debasish Rout

காலாஹண்டி சுற்றியுள்ள ஈர்ப்புகள்

காலாஹண்டி சுற்றுலா இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல அறிய மற்றும் அழகிய தலங்களை கொண்டுள்ளது. அவை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களாகவும் இயற்கை அழகு கொஞ்சும் இடங்களாகவும் விளங்குகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் இங்குள்ள அசுர்கர் என்ற இடத்தில் கிடைத்துள்ளது. குடஹண்டி என்ற மலையில் அழகிய ஓவியங்களை கொண்ட குகைகள் பல உள்ளன. ரபண்டர் என்ற ஒரு அழகிய நீர்வீழ்ச்சியும் உண்டு. மோகனகிரி என்ற இடத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் இயற்கை அழகுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இங்கு தான் லால் பகதூர் சாஸ்த்ரி விளையாட்டரங்கம் அமைந்திருக்கிறது. இங்கே பல விளையாட்டுக்களும் விழாக்களும் நடத்தப்பட்டுள்ளன.

காலாஹண்டியை அடைவது எப்படி?

காலாஹண்டியை ஒடிசாவிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலிருந்தும் சுலபமாக வந்தடையலாம். இங்கு இரயில் மூலமாக வர வேண்டுமானால் கேசிங்கா இரயில் நிலையம் மூலமாக வரலாம். விமானம் மூலமாக இங்கே வர வேண்டுமானால் புவனேஷ்வர் விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலாஹண்டிக்கு மழைக்காலத்தின் போது சுற்றுலாவிற்கு வருவதே சிறப்பானதாக இருக்கும்.

காலாஹண்டி சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Debasish Rout

மோஹன்கிரி

மோஹன்கிரி என்ற கவர்ச்சிகரமான கிராமம் இங்குள்ள சிவன் கோவிலுக்காக சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்ப இடமாக உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் காளி கங்கா என்ற ஓடை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஓடையின் கரையில் அழிந்த நிலையில் இருக்கும் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. இங்குள்ள ஜக்மோகன் ஹால் என்ற இடத்தில் 11 தூண்கள் உள்ளன.

இக்கோவில் புதுப்பிக்கபட்டாலும் கூட கி.பி.600-ல் கட்டப்பட்ட சில பகுதிகள் இன்னும் கூட அப்படியே இருக்கிறது. இந்த கோவிலில் பாறைகளில் செதுக்கிய சிற்பங்கள் பலவற்றை காணலாம். இதனுடன் சேர்த்து அக்காலத்தில் கட்டப்பட்ட எஞ்சியிருக்கும் கட்டடங்கள் இக்கோவிலை சுற்றிப் பார்க்கத் தூண்டும். இங்கு பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிவலிங்கம் இந்த கோவிலில் வைத்து இன்றும் கூட வழிப்பட்டு வருகிறது. இக்கோவில் தற்போதைய காலம் மற்றும் பழக்காலத்தின் கலவையாக விளங்குகிறது.

நீர்வீழ்ச்சி

ரபண்டர் என்ற அழகிய நீர்வீழ்ச்சி அடர்த்தியான காடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. நகரத்தின் கூட்டத்துக்கு நடுவே ரபண்டர் என்ற இந்த நீர்வீழ்ச்சி தனிமைபடுத்தப்பட்ட இடத்தில் வெறும் நீழ்வீச்சியின் சத்தம் மட்டும் கேட்கும் வகையில் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தை அடைய தூசி மிகுந்த சாலைகளை கடந்து செல்ல வேண்டும். சரியான தகவல் தொடர்பு இல்லாத போதிலும் கூட, இயற்கையோடு பல மணி நேரத்தை செலவழிக்க இங்கே சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதுண்டு. மிகவும் அறியப்பட்ட இந்த சுற்றுலாத் தலத்தில் தீரச் செயல் புரிபவர்கள் நடைபயணம் மேற்கொள்ள தோடாக இருக்கும். இதன் அமைதியும் தனிமையும் அதனுடன் கூடிய இயற்கை அழகும் தான் இந்த இடம் மிகப்பெரிய ஈர்ப்பாக இருக்க முக்கிய காரணமாகும். குளிர் காலத்தில் குளிர்ந்த தென்றல் வீசும் நேரத்தில் சில்லென்று அருவி நீர் ஓடும் போதே இங்கு சுற்றுலாப் பயணிகள் வர விரும்புவார்கள்.

Read more about: odisha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X