Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்

சபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்

சபரிமலையில் பெண்களுக்கு தடை - இங்கோ தேவியின் மாதவிடாயைக் கும்பிடும் மக்கள்

By Udhay

சபரிமலையில் பெண்களுக்கு வரும் மாதவிடாய் குறித்து காரணம் சொல்லி, பலர் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், பெண்களின் மாதவிடாய் சிறப்பை கூறும் கோவிலும் இந்தியாவில் உள்ளது. அதிலும் இந்த கோவிலின் சிறப்பு என்னெவென்றால், ஒவ்வொரு மனித உயிரும் பிறந்து வரும் தாயின் யோனியை பூசிப்பதே இதுவாகும். உலகின் ஒரே கோவில் இதுமட்டும்தான் என்கிறார்கள் பக்தர்கள்.

குவஹாத்தி நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் காமாக்யா கோயிலை தரிசிக்காமல் திரும்பினால் இந்த சுற்றுலாப்பயணம் பூர்த்தியடையாது என்றே சொல்லலாம். ஹிந்து ஆன்மீக கலாச்சாரத்தின்படி 51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது. நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் வீற்றுள்ளது. சரி வாருங்கள் இன்னும் பல அதிசயங்களைத் தெரிந்துகொள்வோம்.

தனித்தனி கோயில்கள்

தனித்தனி கோயில்கள்

10 மஹாவித்யாக்களுக்கான தனித்தனி கோயில்கள் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. திரிபுரசுந்தரி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய தெய்வங்களின் சிலைகள் கோயிலின் பிரதான கருவறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 சிறு கோயில்கள்

சிறு கோயில்கள்

மற்ற ஏழு அவதாரங்களின் சிலைகள் பிரதான கோயிலை சுற்றியுள்ள சிறு கோயில்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்டிருக்கின்றன. அம்புபச்சி மேளா எனும் திருவிழா இந்த காமாக்யா கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 மாதவிலக்கு நாளில் திருவிழா

மாதவிலக்கு நாளில் திருவிழா

காமாக்யா தேவியின் வருடாந்திர மாதவிலக்கு நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதீகமாக சொல்லப்படுகிறது. நாடெங்கிலும் இருந்து தந்திரிக் யோகிகள் இந்த திருவிழாவின்போது அதிகம் விஜயம் செய்கின்றனர்.

துர்க்கா பூசை

துர்க்கா பூசை


துர்க்கா பூசை மற்றும் மானஷா பூசை ஆகிய திருவிழாக்களும் இந்த கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

ஒன்லி பார் ஹின்டுஸ்

ஒன்லி பார் ஹின்டுஸ்

ஹிந்துக்கள் மட்டுமே இந்த காமாக்யா கோயிலில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பது பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவலாகும்.

வேறு பெயர்கள்

வேறு பெயர்கள்


காமாக்யா தேவியை திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என பல பெயர் கொண்டு புராண கதைகளில் அழைக்கப்படுகிறார்.

கட்டிடம்

கட்டிடம்

ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் இது. காமாக்யா கோவில் 11 நூற்றாண்டில், ஓர் போரில் உண்மையான காமாக்யா கோவில் அழிக்கப்பட்டது என்றும் பிறகு 16ம் நூற்றாண்டில் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் மீண்டும் புதிப்பித்து கட்டினார் என்றும் கூறப்படுகிறது.

எங்குள்ளது

எங்குள்ளது

51 சக்திபீடங்களில் ஒன்றாக இந்த கோயில் கருதப்படுகிறது. நகர மையத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த நீலாச்சல் மலை உச்சியில் இந்த கோயில் வீற்றுள்ளது.

நரபலிகள்

நரபலிகள்


இந்த கோவிலில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு வரை நரபலிகள் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தனித்தன்மை

தனித்தன்மை

காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், வந்து செல்வோரை வாயடைத்து போய் பிரம்மிப்புடன் நோக்க வைத்து கடவுளின் சக்தியை உணர வைக்கிறது. தேவிக்காக எவ்வளவு கோவில்கள் அர்ப்பணிக்கப்பட்டு நிறுவப்பட்டாலும்...அவற்றுள் ஒன்றான இங்கே காணப்படும் தேவி...

 காண்போர் பரவசமடையும்

காண்போர் பரவசமடையும்

தனித்தன்மை நீங்கா தன்மையுடனும் மெய் சிலிர்க்கும் சிலையுடனும் காட்சியளித்து காண்போரை பக்தி பரவசமடைய செய்கிறது. ஆம், இங்கே நாம் வருவதன் மூலம் யோனி (அ) வாஜினா தேவியை நாம் வணங்குகிறோம்.

 கலையுண்ட கற்பம்

கலையுண்ட கற்பம்


விஷ்ணு மகாப்பிரபு, தன்னிடம் உள்ள சுதர்சன சக்கரத்தை கொண்டு அந்த சடலத்தை பல துண்டுகளாக வெட்டினார் என்றும் கதைகள் கூறப்படுகிறது. அப்பொழுது சக்தியின் வயிற்றிலிருந்து கர்ப்பம் இந்த தளத்தில் கலையுண்டதாகவும் வரலாறு கூறுகிறது

மூடியிருக்கும் நடை

மூடியிருக்கும் நடை


இந்த ஆலயத்தை வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமென்றாலும் சென்று காணலாம். ஆனாலும், இந்த சன்னதி வருடத்தில் ஒரு சில நாள்கள் மூடியே இருக்கும் என்றும் கூறுகின்றனர். அந்த சமயங்களில் எந்த சடங்குகளும் நடத்தப்படுவதில்லை

 பயம் கொண்டு நடுங்குகிறார்கள்

பயம் கொண்டு நடுங்குகிறார்கள்

ஒரு புராணத்தின் படி நமக்கு தெரிய வருவது என்னவென்றால், கோச் வம்சாவளிகளால் இந்த ஆலயம் வழிபட தடை செய்யப்பட்டு தேவியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அதனால் தெய்வத்தின் அச்சம் காரணமாக...கோச் வம்சாவளியால் இந்த காமாக்யா மலையின் வழியாக செல்ல கூட இன்று வரை பயம் கொண்டு நடுங்குகிறார்கள் எனவும் அங்கிருப்பவர்கள் உரைக்க நாம் கேட்கிறோம்.

 கட்டியணைக்க வந்த தேவி

கட்டியணைக்க வந்த தேவி


சத்தி தேவி தன் ஆசைக்கிணங்க சிவபெருமானை கட்டி அணைக்க இங்கே வந்ததாகவும், சிவதாண்டவம் ஆடியபடி சக்தியின் உடலை சுமந்து கொண்டு சிவபெருமான் வர...அப்பொழுது அவளுடைய கர்ப்பம் கலைந்ததாகவும் கூறப்படுகிறது.

All photos taken Form

PC: WikiCommons

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X