Search
  • Follow NativePlanet
Share
» »பேருதான் கஞ்சமலை... அங்கு வாழ்வதோ தங்கம் தரும் சித்தர்..!

பேருதான் கஞ்சமலை... அங்கு வாழ்வதோ தங்கம் தரும் சித்தர்..!

சீனாவில் இருந்து நம்ம நாட்டுக்கு வந்த சித்தர் ஒருத்தர் இப்போதும் கூட தங்கம் வாங்கும் அதிசய நிகழ்வு குறித்து நிங்க கேள்விப்பட்டிருக்கீங்களா ?

சித்தர்களின் மகிமைகள் குறித்து பல கட்டுரைகளில் நாம படிச்சிருப்போம். ஏன், போகர் சித்தரின் மகிமைகளை பழனி நவபாஷான முருகன் சிலை ரூபத்துல இன்னைக்கும் நம்ம ஊரே கொண்டாடிட்டு தானே இருக்கு. சித்தர்கள் இன்னும் எத்தனை எத்தனையோ அம்சங்களை உருவாக்கிவச்சத பல வரலாற்று ஆய்வுகள் மூலமா கேள்விப்பட்டுட்டு தானே வரோம். அவர்கள் உருவாக்கி வச்ச கூற்றுக்களில் மட்டும் இல்லை, சித்தர்கள் மீதே பல வியக்கவைக்கும் கதைகள் இருப்பது நாம் அறிந்ததே. இன்றளவுகூட ஒரு சில தென்னக மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வரதாகவும் தானே மக்கள் நம்பிவருகின்றனர். அதற்கு ஏற்றவாறே இங்கே ஒரு மலையில் கூட தங்கம் வழங்கும் சித்தர் உலா வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். வாங்க, அது எங்கே, என்னவெல்லாம் உள்ளது என பார்க்கலாம்.

கஞ்சமலை

கஞ்சமலை


சேலம் மாநகத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கஞ்சமலை எனப்படும் சித்தர் கோவில். இதனை அமாவாசைக் கோவில் எனவும் உள்ளூர் மக்கள் அழைத்து வருகின்றனர். காலங்கிநாதர் எனும் சித்தர் அமர்ந்த நிலையில் மூலவராக உள்ள இக்கோவிலின் கல்லினால் ஆன கட்டிடம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. ஆனால் கஞ்சமலையின் வரலாறு ஆயிரக்கணக்கான
ஆண்டுகள் பழமையானது என்கின்றனர் தொல்லியல் துறையினர்.

தென்காசி சுப்பிரமணியன்

சீனச் சித்தர்

சீனச் சித்தர்


பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் கஞ்சமலையில் வாழ்ந்து வந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த முனிவரே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார். மக்களின் நலனுக்காக சீனாவிலிருந்து வந்த இங்கே தங்கிய சித்தர் பல அற்புதங்களை நிகழ்த்துயுள்ளார் என்கின்றனர் அப்பகுதியினர். கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, பாஷாண ஆய்வுகள் செய்ததற்கான தடயங்களை காண முடிகிறது. இன்றும் சித்தர்கள் உருவாக்கி ரகசியப்படுத்தியுள்ள அம்சங்களை வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி பூசை செய்வது வழக்கம்.

Booradleyp1

கிரிவலம்

கிரிவலம்


காலாங்கிசித்தரும், திருமூலரும் மலை உச்சியில் இருந்த கோவிலுக்கும் செல்ல பாதை உள்ளது. சித்தருக்கான தலத்தில் கிரிவலம் நடப்பது என்பது இங்கு மட்டும்தான். கஞ்சமலைக் கோவில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும். இங்கு நடந்து தான் செல்ல முடியும். கோவிலுக்குள் சித்தர் சன்னதியைத் தவிர விநாயகர், முருகன் ருவுருவம் மட்டும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மலையில் ஏராளமான மூலிகைகள் இருப்பதால், இங்கு கிரிவலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

Thamizhpparithi Maari

வற்றாத பொன்னி ஓடை

வற்றாத பொன்னி ஓடை


இக்கோவிலுக்கு உரிய பெருமையே அருகில் ஓடும் பொன்னி ஓடை தான். சுற்றுப்புரத்தில் எத்தகைய வறட்சி நிலவினாலும் இந்த ஓடையில் மட்டும் நீர் வற்றுவதே இல்லை. கோவிலுக்குள் இருக்கும் காந்ததீர்த்த குளத்து நீர் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இக்குளத்து நீரை தலையில் தெளித்தாலே வியாதிகள் தீரும் என்பது நம்பிக்கை.

Thamizhpparithi Maari

திருவிழா

திருவிழா

காலாங்கி சித்தர் கோவிலில் அமாவாசையன்று தான் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாக இருக்கும். அன்றைய தினம் சித்தரை வேண்டி சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடக்கும். தீராத நோயுள்ளவர்கள் அமாவாசையன்று சித்தேஸ்வரரை வணங்கி, கோவிலில் உள்ள தீர்த்தத்தை தலையில் தெளித்து நலம் பெற வேண்டிச் செல்வர். பவுர்ணமியன்று பக்தர்கள் மாலை 5 மணியில் இருந்து கிரிவலம் துவங்குவது வழக்கம். சுமார் 18 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள மலையை சித்தேஸ்வரர் நாமம் சொல்லி சுற்றி வருகின்றனர். இரவு வேளையில், சுற்றுச்சூழல் மாசில்லாத இம்மலையைச் சுற்றி வருவதன் மூலம் மூலிகை காற்று பட்டு, பல நோய்கள் தீர்வதாக நம்புகின்றனர்.

Jomesh

தங்கம் தரும் சித்தர் மகிமை

தங்கம் தரும் சித்தர் மகிமை


கோவிலை ஒட்டி ஓடும் ஓடையில் தங்கத் தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் பாஷாணம் செய்கையில் இந்த நீரையே பயண்படுத்தியுள்ளனர். இதனாலேயே இந்த நீரோடைக்கு பொன்னி என பெயரிட்டுள்ளனர். தங்கம் உள்ளிட்டு இல்லரத்தில் செழிப்பாக இருக்க வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால், தேவையான அளவு தங்கம் பெறலாம் என்பது நம்பிக்கை.

wikimedia

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சேலம் மாநகரில் இருந்து சூரமங்கலம் வழியாக திருமலைகிரி, முருங்கபட்டி வழியாக சுமார் 18 கிலோ மீட்டர் பயணித்தால் கஞ்சமலைக் கோவிலை அடைந்துவிடலாம். எடகானசாலை, இளம்பிள்ளை, முருங்கபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மலமாக இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X