Search
  • Follow NativePlanet
Share
» »கன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க!

கன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க!

இந்த வார விடுமுறை நாளில் கன்னியாகுமரியில் இருந்து இயற்கை பொங்கும் கீரிப்பாறையை நோக்கி பயணிக்கலாம் வாங்க. ஆனா, அங்கே என்ன உள்ளது தெரியுமா ?

By Saba

ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாட்களில் சின்னதாக ஓரிரு நாள் சுற்றுலா சென்று வரத் தகுந்த தலங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார விடுமுறையினை சிறப்பாக கழித்திட இயற்கையுடன் ஒன்றிணைந்து மகிழ்வதற்கு ஏற்ற தலமான கீரிப்பாறையை நோக்கி பயணிக்கலாம் வாங்க. கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இத்தலத்திற்கு எப்படிச் செல்லாம் ? அங்கு என்னதான் உள்ளது என தெரிந்து கொள்வோம்.

கன்னியாகுமரி - கீரிப்பாறை

கன்னியாகுமரி - கீரிப்பாறை


கன்னியாகுமரியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கீரிப்பாறை. கன்னியாகுமரியினைச் சுற்றிலும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ள நிலையில் இயற்கைக்காகவும், பசுமைக்காகவும் பெயர் பெற்றத் தலமாக இந்த கீரிப்பாறை வனப்பகுதி திகழ்கிறது.

கீரிப்பாறை

கீரிப்பாறை

பெருஞ்சாணி அணையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கீரிப்பாறை. இப்பகுதியில் இருந்து மலையேற்றம் செய்ய வாடகைக் கார்கள் உள்ளன. இவை மலையேற்றத்திற்கு எனவே பிரத்யேக வண்டிகளாகும். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என பெயர்பெற்றுள்ளது. இப்பகுதி காட்டாறுகள் மலைச் சரிவில் பாறைகளின் இடையே வழிந்தோடி பெரிய காட்டாறாக உருவாகிறது.

சாகச மலையேற்றம்

சாகச மலையேற்றம்


கீரிப்பாறையில் பலவிதமான மூலிகைச் செடிகளும், வானுயர்ந்த மரங்களும் அதிகளவில் உள்ளன. மலையேற்ற சாகச விரும்பிகள் அதிகமாக இங்கே பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும், மலையேற்றத்தில் ஈடுபடுவோர் கீரிபாறைக்கு உட்பட்ட சமவெளிப் பகுதிகளில் யானைகள் கூட்டமாக செல்வதை காண முடியும்.

நீர்வீழ்ச்சிகள்

நீர்வீழ்ச்சிகள்


கீரிப்பாறை வனப் பகுதியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. அவற்றுள் வட்டப்பாறை நீர்வீழ்ச்சி மிகவும் பிரசிதிபெற்றது. மேலும், கீரிப்பாறையின் மலைகளில் மேல் அமைந்துள்ள இங்கு அவ்வப்போது யானைகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. இதனால், எந்த நேரமும் வனத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பர்.

வனவிலங்கு சரணாலயம்

வனவிலங்கு சரணாலயம்


இந்த வனப்பகுதியானது கடவுளின் வரப்பிரசாதமாக திகழ்கிறது. பல சிறிய நீரோடைகள் மற்றும் ஆறுகள் காட்டுப்பகுதிகளில் ஓடுகின்றன. கூடுதலாக, இயற்கை ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகவும் இது திகழ்கிறது. ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவின் சில பாதுகாக்கப்பட்ட காடுகளில் கீரிப்பாறையும் ஒன்று. இக்காட்டில் யானை, சிறுத்தை, சாம்பார் மான், கரடி என வன விலங்குகள் அதிகளவில் உள்ளதால் வனவிலங்கு சரணாலயமாகவும் இது செயல்படுகிறது.

ஐந்து நூற்றாண்டு கண்ட மரம்

ஐந்து நூற்றாண்டு கண்ட மரம்


கீரிப்பாறை காட்டில் சுமார் 500 வருடங்கள் கடந்த மரம் ஒன்று சுற்றுலாப் பயணிகளால் அதிகம் காணக்கூடிய அம்சமாகும். கீரிப்பாறைக்கு பயணிக்கும் யாவரும் தவறவிடக் கூடத ஒன்றாக இம்மரம் புகழ்பெற்றுள்ளது. முற்காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் நினைவாக தொல்காப்பியர் என இம்மரத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X