Search
  • Follow NativePlanet
Share
» »லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?

லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?

லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?

By Udhaya

இந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள வனப் பகுதிகளை கண்டு களிக்க வேண்டுமானால், கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அமையும். மிசோரத்தின் தலைநகரமான ஐசவ்லில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த சரணாலயம். இந்த பரந்த சரணாலயம் அடர்ந்த பசுமையான மலைகள் செங்குத்துப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.

லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?

subharnab

35 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் 1300 மீட்டர் உயரத்தில் உள்ளது. கான்க்லங் வனவிலங்கு சரணாலயம் பல வகையான விலங்குகளுக்கு வாழ்விடமாக திகழ்கிறது. செரோ வகை ஆடுகள், முண்ட்ஜாக்ஸ் வகை மான்கள், காட்டு பன்றிகள், கிப்பன் வகை குரங்குகள், சாம்பா மான்கள், ஹூலாக் வகை குரங்குகள் மற்றும் சிறுத்தைகளை இங்கே காணலாம். இது போக இந்த சரணாலயத்தில் மதி மயக்கும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். இங்கே சிறிது காலம் தங்க வேண்டுமானால் லுங்க்லெய்யில் உள்ள அல்ப்ஸ்டா ஹோட்டலில் தங்கலாம். இந்த சரணாலயத்தை அடைய ஐசவ்லிலிருந்து வாடகை வண்டியில் வந்தடையலாம்.

லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?

Joe Fanai

மிசோரத்தின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது லுங்க்லெய். இது மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ளது. இதனை லுங்க்லெஹ் என்றும் அழைப்பார்கள். அதற்கு பாறையால் செய்யப்பட்ட பாலம் என்று பொருள் தரும். ட்லவ்ங் ஆற்றின் கிளையாறாக உள்ள கசிஹ் என்ற ஆற்றிற்கு அருகில் பாலம் போலவே காட்சி அளிக்கும் பாறை ஒன்று உள்ளது.

லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?


Coolcolney

இந்த பாறையாலேயே லுங்க்லெய் இந்த பெயரை பெற்றது. இந்நகரத்தை சுற்றி பல அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த இடங்கள் உள்ளது. அதனால் இங்குள்ள இயற்கை அழகை கண்டு களிக்க உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருடம் முழுவதும் இங்கே சுற்றுலாவிற்கு வருவார்கள்.

லுங்க்லெய்யில் இருக்கும் காங்க்லங்குக்கு போலாமா?

R london

சோபாக் ஸ்போர்ட்ஸ் அகாடமி, காம்சவி பூங்கா, கான்க்லங் வனவிலங்கு சரணாலயம், சைகுடி ஹால் (கலை நிகழ்ச்சிகளும் ஓவியக் கண்காட்சிகளும் நடக்கும் ஹால்) மற்றும் மிசோரத்தில் உள்ள துவம்லுயையா மோல் என்ற புற்தரையிலான கால்பந்து மைதானம் போன்றவைகள் தான் இங்குள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது போக இங்கே பல சுற்றுலாத் தலங்களும் ட்ரெக்கிங் தலங்களும் கூட உள்ளது. ஐசவ்லிலிருந்து பேருந்து, ஜீப் அல்லது ஹெலிகாப்டர் மூலமாக 175 கி.மீ. தொலைவில் உள்ள லுங்க்லெய்யை அடையலாம்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X