Search
  • Follow NativePlanet
Share
» »ஏலியன்கள் வசிக்கும் இந்தியாவின் மறுபக்கம்! மர்மம் விலகுமா ?

ஏலியன்கள் வசிக்கும் இந்தியாவின் மறுபக்கம்! மர்மம் விலகுமா ?

ஏலியன்கள் குறித்து உலகமுழுவதும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்க இந்தியாவில், இந்தியா - சீனா சேர்ந்து மறைக்கும் ஓர் ஏலியன் தளம் குறித்து உங்களுக்குத் தெரியுமா ?

வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள், உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று பல வகைகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறத. அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தைத் தவிர பிர கிரகத்திலும் உயிரிணங்கள் உள்ளன என அவ்வப்போதைய ஆராய்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது. வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என்றும் கூறப்படுகிறது. இதற்கு அதாரம் திடீரென வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் போன்ற ஒளியும், சில அறிகுறிகளுமே. உலகம் முழுவதும் இதுகுறித்தான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்க இந்தியாவில், இந்தியா - சீனா சேர்ந்து மறைக்கும் ஓர் ஏலியன் தளம் குறித்து உங்களுக்குத் தெரியுமா ?

வேற்று கிரக வாசிகள்

வேற்று கிரக வாசிகள்


சினிமாவில், கார்ட்டூனில் வேற்றுகிரக வாசிகள் குறித்து அதிகம் நாம் பார்த்திருப்போம். செய்திகளில் கூட விடை தெரியாத மர்மமான சில நிகழ்வுகள் குறித்து வெளியாகியிருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட மாபெரும் தொரில்நுட்பம் மிக்க நாடுகள் இந்த ஏலியன் குறித்தான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஏலியன் தளம்

இந்தியாவில் ஏலியன் தளம்


பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் அவ்வளவு அதிகமாக ஏலியன் குறித்த செய்திகள் வெளியாகவில்லை என்று கூறமுடியும். ஒரு சில சமயங்களில் வானில் திடீரென மாபெரும் ஒளி தோன்றியதாகவும், பறக்கும் மனிதர்கள் வின்னில் பறந்து சென்றதாகவும் மட்டும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அவை யாவும் மர்ம முடிச்சுக்களாகவே இன்று வரை நீழ்கிறது.

கொங்கா லா பாஸ்

கொங்கா லா பாஸ்


கொங்கா லா பாஸ் என்பது இந்தியாவிற்கு உட்பட்ட இந்திய - சீன எல்லைப் பகுதியில் உள்ள ஓர் கணவாய்ப் பகுதியாகும். இமயமலைத் தொடரில் லடாக் பிரதேசத்தின் அருகில் காணப்படும் இந்த பகுதி ஒரு ரகசிய ஏலியன் தளமாக கருதப்படுகிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவ வீரர்களும் கூட அவ்வப்போது இங்கு தோன்றும் திடீர் மாய ஒளி குறித்து தகவல் வெளியிடுவது வழக்கம்.

லா பாஸ்

லா பாஸ்


உலகிலேயே மனிதர்கள் வாழத் தகுதியற்றதும், பயணிக்கவே முடியாத பிரதேசங்களில் ஒன்றாக இந்தியாவின் லா பாஸ் முகடுகள் உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான ஒப்பந்தப்படி லா பாஸ் பகுதிக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டதாகும். இந்தியா - பாக்கிஸ்தான் போன்றே இங்கு இரு நாட்டினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்று சுவடுகள்

வரலாற்று சுவடுகள்


இப்பகுதி பாதுகாக்கப்படுவதற்கு வேறொரு காரணமும் உள்ளது. அதாவது இந்தோ- சீனப் போருக்கு முந்தைய காலங்களில் இந்திய கணவாய் பகுதியில் இராணுவ வீரர்கள் சீன வீரர்களால் கொள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்தே இந்தோ - சீனப் போர் ஏற்பட்டது. இதனால் தான் இப்பகுதி வரலாற்று சுவடுகள் மிக்க பகுதியாகவும் பாதுகாக்கப்படுகிறது என்ற கருத்து நிலவுகிறது.

U.S. Army

விசித்திர பாதாளம்

விசித்திர பாதாளம்


சில வருடங்களுக்கு முன் கூகுல் வழியாக இப்பகுதீயை ஆராய்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் இங்கு இராணுவ தளவாடம் ஒன்று இருப்பதையும், அருகே உள்ள பாதாளத்தில் வேற்றுகிரகவாசிகளின் ஒரு சில தோற்றம் இருப்பதையும் கண்டறிந்தனர். மேற்கொண்டு அங்கு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது அதுபோன்ற எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் போனது ஆராய்ச்சியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

ஏரியா 51

ஏரியா 51


இந்தியாவின் ஏரியா 51 என அறிவிக்கப்பட்டுள்ள கொங்கா லா பாஸ் வெப்பம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதீயின் நிலத் தோற்றம் கடிணமானதாக அதே சமயம் மழை அற்றதாகவும் உள்ளது. இதனால், இங்கு பாதாள மையங்கள் அமைக்க ஏற்ற கட்டமைப்புகள் அதிகம். இதுவே, வேற்றுகிரக வாசிகள் இங்கு தளம் அமைக்க காரணமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்வுகள் மூலம் அறியமுடிகிறது.

Doc Searls

திடீரென தோன்றும் அடர் வெளிச்சம்

திடீரென தோன்றும் அடர் வெளிச்சம்


இமயமலைத் தொடரில் உள்ள கைலாயநாதர் கோவிலுக்கு பக்தர்கள் நடைபயணமாக செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு முறை இரவில் பயணிகள் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலமடங்கு வெளிச்சம் தோன்றி அது மேல் நோக்கி பறந்துள்ளது. மேலும், அது சில நொடுகளிலேயே விண்ணில் சென்று மறைந்துள்ளது. இவை, இப்பகுதியில் வேற்றுகிரக வாசிகள் வசிப்பதற்கான அறிகுறியாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.

மறைக்கப்படும் உண்மை

மறைக்கப்படும் உண்மை


இன்னும் பல்வேறு விசித்திர சம்பவங்கள் இந்தியாவின் கொங்கா லா பாஸ் பகுதியில் அரங்கேறி வரும் நிலையில் இதுகுறித்தான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது இந்தியாவில் வேற்றுகிரக வாசிகளின் தளமாக கொங்கா லா பாஸ் செய்ல்பட்டு வருவதை தெளிவுபடுத்தும் வகையிலேயே உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X