Search
  • Follow NativePlanet
Share
» »தென்னகத்தின் காசி!!

தென்னகத்தின் காசி!!

By Staff

கொட்டியூர் மகாதேவ கோவில் கேரளாவின் புராதன கோவில்களில் ஒன்று. இதற்கு வடக்கேஷ்வரம் கோவில், இக்கரே கொட்டியூர் கோவில் என்று இரண்டு பெயர்கள் இருக்கிறது. இதே போல, இன்னொரு சிவன் கோவில் : அக்கரே கொட்டியூர் கோவில்.

இந்த இரண்டு சிவன் கோவில்களும் மிகவும் விசேஷமானவை. ஆகையால், கொட்டியூரை தென்னகத்தின் காசி என்று அழைக்கிறார்கள்.

Kottiyoor

Photo Courtesy : Satheesan.vn

இந்தக் கோவிலின் சிவன் சுயம்பாக வந்தது என்று ஐதீகம் இருக்கிறது. மணிதரா என்று சொல்கிறார்கள் மலையாளத்தில். அதாவது ஆலமரத்தை சுற்றி வட்டமாக போடப்பட்டிருக்கும் ஒரு கல் மேடை; அதற்கு மேல் சிவலிங்கத்தை வைத்து வழிபடுகிறார்கள். சிவனுக்கு, இளநீர், நெய், பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். இதே போல, பார்வதியையும் இன்னொரு மேடை மேல் வைத்து வழிபடுகிறார்கள். இந்தியாவின் வெகு சில கோவில்களே இது போல் பார்வதியையும், சிவனையும் ஒன்றாக வழுபடும் முறை இருக்கிறது.

இந்த கோவிலின் மிக முக்கிய திருவிழாவாக எல்லோரும் கொண்டாடுவது கொட்டியூர் வியாக்ஷ மஹோத்சவம். கேரளாவின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருவதுண்டு. இதனால் கொட்டியூர் உற்சவம் என்றும் அழைக்கின்றனர்.

Kottiyoor2

Photo Courtesy : Sivavkm

மொத்தம் 27 நாட்கள் திருவிழா நடைபெறும். இச்சமயத்தில், இக்கரே கொட்டியூர் கோவிலை மூடிவிடுவார்கள். பூஜை, கடவுளுக்கு படைப்பது எல்லாமே அக்கரே கொட்டியூர் கோவிலில் நடைபெறும். இன்னொரு சுவாரஸ்யம் : இந்த அக்கரே கொட்டியூர் கோவில் திருவிழாவின் போது மட்டுமே திறந்திருக்கும். மற்ற நேரங்களில் மூடிவிடுவார்கள்.

பக்தர்கள் பவாலி எனும் ஆற்றில் குளித்து விட்டு கோவிலுக்கு செல்வது வழக்கம். ஒடப்பு என்று மூங்கில்களால் ஆன மலரை, பக்தர்கள், கோவிலுக்கு வந்ததன் அடையாளமாக வாங்கிச் செல்வதுண்டு.

Odappu

Photo Courtesy : Vinayaraj

கொட்டியூர் கோவிலை அடைவது எப்படி!!

கொட்டியூர் கோவில் கண்ணூர் மாவட்டதில் அமைந்திருக்கிறது!! தலசேரி, மனன்தாவடி, கண்ணூர் ஆகிய ஊரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அருகில் இருக்கும் ரயில் நிலையம் 60 கி.மீ தொலைவில் இருக்கும் தலசேரி.

Read more about: kottiyoor shiva temples kerala kannur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X