Search
  • Follow NativePlanet
Share
» »ஒரே இரவில் கிராமத்தை காலி செய்த மக்கள். மர்மம் என்ன ??

ஒரே இரவில் கிராமத்தை காலி செய்த மக்கள். மர்மம் என்ன ??

By Super Admin

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் அமானுஷ்யங்கள் நிறைந்ததாக சொல்லப்படும் ஒரு கிராமத்தை பற்றி பல கதைகள் உலாவுகின்றன. பல நூறு ஆண்டுகளாக மனிதர்களே வசிக்காத இந்த கிராமத்திற்கு புதுமையான இடங்களுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இந்த இடத்தை பற்றிய மர்மங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 குல்தாரா :

குல்தாரா :

வெப்பம் தகிக்கும் தார் பாலைவனத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் மணிமகுடம் என்று சொல்லப்படும் ஜெய்சால்மர் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் குக்கிராமமான இந்த குல்தாரா அமைந்திருக்கிறது.

Photo:Chandra

 குல்தாரா :

குல்தாரா :

முற்றிலும் சிதலமடைந்து காணப்பட்டாலும் இங்குள்ள வீதி அமைப்புகள் மற்றும் வீடுகளை பார்க்கும் போது நேர்த்தியாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட நகரை போன்றே இருக்கிறது. கோயில்கள், கிணறுகள், பொது மேடை போன்றவை இருக்கும் இந்த கிராமத்தில் 1825ஆம் ஆண்டுக்கு பிறகு மனிதர்கள் வசிக்கவே இல்லை. ஏன் தெரியுமா?

Photo:

 குல்தாரா :

குல்தாரா :

1291ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கிராமம் தான் சுற்றுப்பகுதியில் உள்ள 84 கிராமங்களுக்கு தலைமை கிராமமாகவும் இருந்துள்ளது. மழை வளம் இல்லாத பகுதியாக இருக்கின்ற போதிலும் மிகப்பெரிய அளவில் விவசாயம் நடைபெற்றிருக்கிறது.

Photo:Mirza Asad Baig

 குல்தாரா :

குல்தாரா :

கிட்டத்தட்ட 7 நூற்றாண்டுகள் இந்த கிராமத்தில் வசித்த பிறகு ஒரே நாளில் தங்கள் மானத்தை இழக்க விரும்பாமல் குல்தாரா மட்டுமில்லாமல் அதை சேர்ந்த 84 கிராமத்தினரும் மூட்டை முடிச்சுகளுடன் இடத்தை காலி செய்திருக்கின்றனர்.

Photo:Chandra

 குல்தாரா :

குல்தாரா :

இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது 1800களில் ராஜஸ்தானை ஆட்சி செய்த அரசரின் திவானாக இருந்தவன் குல்தாரா கிராம தலைவரின் மகளை திருமணம் செய்ய விரும்பியதாகவும் மறுக்கும் பட்சத்தில் மொத்த கிராமத்தையும் நாசமாக்கிவிடுவதாக அவன் விடுத்த மிரட்டலுக்கு பலியாக விரும்பாமல் இரவோடு இரவாக ஒரு தடயத்தையும் விட்டுவைக்காமல் சென்றிருக்கின்றனர்.

Photo:nevil zaveri

 குல்தாரா :

குல்தாரா :

மேலும் எதிர்காலத்தில் இந்த கிராமத்தில் யாரேனும் தங்கினால் அவர்களுக்கு மரணம் நேரும் படி இந்த கிராமத்தை சபித்து சென்றிருப்பதாகவும் இதனாலேயே இத்தனை வருடங்களில் யாருமே இங்கே தங்க முற்ப்படவில்லை என கூறப்படுகிறது.

Photo:Mirza Asad Baig

 குல்தாரா :

குல்தாரா :

வழக்கமான சுற்றுலாத்தளங்களை தவிர்த்து புதுமையான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள் ஜெய்சால்மர் நகருக்கு அருகில் இருக்கும் இந்த கிராமத்திற்கு நிச்சயம் ஒருமுறை வரவேண்டும்.

Photo:Tomas Belcik

 குல்தாரா :

குல்தாரா :

ஜெய்சால்மர் நகரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:Tomas Belcik

Read more about: adventure rajasthan jaisalmar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X