Search
  • Follow NativePlanet
Share
» »குமார பர்வதம் டிரெக்கிங்

குமார பர்வதம் டிரெக்கிங்

By

கூர்க் மற்றும் தெற்கு கன்னட மாவட்டங்களுக்கு இடையே, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 1,712 மீட்டர் உயரத்தில் குமார பர்வதம் மலைச்சிகரம் அமைந்துள்ளது.

புஷ்பகிரி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த மலைச்சிகரம் புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக திகழ்கிறது.

படித்துப் பாருங்கள் :தமிழகத்தின் புகழ்பெற்ற டிரெக்கிங் பாதைகள்

குமார பர்வதம் டிரெக்கிங்

குமார பர்வதம் டிரெக்கிங்

குமார பர்வதம் டிரெக்கிங் என்பது இந்திய மலைகளில் மேற்கொள்ளப்படும் மலையேற்றங்களில் மிகவும் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் 15 கி.மீ தூரம் மலைப்பகுதியில் டிரெக்கிங் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல.

படம் : Vivekvaibhavroy

டிரெக்கிங் பாதைகள்

டிரெக்கிங் பாதைகள்

குமார பர்வதம் மலைச்சிகரத்தை இரண்டு பாதைகளின் மூலம் நீங்கள் டிரெக்கிங் செய்து அடையலாம்.

1) சோம்வார்பேட்டிலிருந்து 7 கி.மீ தூரம் டிரெக்கிங் செய்து அடையலாம். (1 நாள்)

அல்லது;

2) குக்கே சுப்ரமண்யாவிலிருந்து 15 கி.மீ தூரம் டிரெக்கிங் செய்து அடையலாம். (2 நாள்)

இவற்றில் இயற்கை அழகு பூத்துக்குலுங்கும் குக்கே சுப்ரமண்யா பாதைதான் நிறைய மலையேற்றப்பிரியர்களால் விரும்பப்படுகிறது. எனவே நாம் மேற்கொண்டு குக்கே சுப்ரமண்யா பாதையில் டிரெக்கிங் செல்வதைப் பற்றியே இக்கட்டுரையில் காண்போம்.

படம் : karthick siva

யார் யாரெல்லாம் இந்த டிரெக்கிங் செல்லக்கூடாது!!!

யார் யாரெல்லாம் இந்த டிரெக்கிங் செல்லக்கூடாது!!!

1) 10 வயதுக்கு குறைந்த குழந்தைகளை உள்ள குடும்பம்.

2) அதிகமாக புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர்கள். (அல்லது டிரெக்கிங் செல்வதற்கு முன் ஒரு மாதம் புகைப்பிடிக்கக்கூடாது)

3) 10 கிலோ பயண மூட்டையை தூக்க முடியாவதர்கள். (ஒரு நாள் இரவு மலையில் தங்க நேரும் என்பதால் பயணத்துக்கு தேவையான பொருட்கள் அதிகமாக இருக்கும்)

படம் :Palachandra

என்னென்ன பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டும்?

என்னென்ன பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டும்?

1) கனமான, வலுவான பை ஒன்று.

2) 2 செட் ஆடைகள், நல்ல காலணிகள் (ஒன்று கூடுதலாக வைத்திருப்பது நல்லது), மூன்று நான்கு காலுறைகள்.

3) பாய் அல்லது சிறிய ரக மெத்தை. (வேண்டுமானால் டென்ட் எடுத்து வரலாம்)

4) டூத் பிரஷ், பேஸ்ட், சோப்பு, டாய்லெட் பேப்பர், டவல், தண்ணீர் பாட்டில்கள்.

5) விசில்.

6) கேமரா.

7) அழுத்தமான ஜாக்கெட்.

8) கண்ணாடி.

9) டார்ச்.

10) மொபைல் ஃபோன்.

11) 3000 ரூபாய் பணம், உங்களுடைய விசிட்டிங் கார்ட், ஐ.டி.கார்ட், எமெர்ஜென்சி ஃபோன் நம்பர்.

12) தேவைப்பட்டால் மருந்து மாத்திரைகள்.

13) குளுகோஸ், லைட்டர், தீப்பெட்டி, முதல் உதவி பெட்டி, கத்தி, உப்பு, உணவு, பிஸ்கட்டுகள், கொசுவர்த்தி, நைலான் கயிறு, திசைக்காட்டி.

படம் : karthick siva

ஒரு மாதம் முன்பு

ஒரு மாதம் முன்பு

டிரெக்கிங் செல்வதற்கு ஒரு மாதம் முன்பே ஆல்கஹால், சிகரெட் ஆகியவற்றி நிறுத்திவிடுங்கள். அதோடு டிரெக்கிங் செல்வதற்கு முதல் நாள் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

படம் : Sujay Kulkarni

எப்படி டிரெக்கிங் செல்வது?

எப்படி டிரெக்கிங் செல்வது?

பெங்களூர் மவுண்ட்டெனியரிங் கிளப் (http://bmcindia.org/) போன்றவை உலகம் முழுக்க பல்வேறு பயணத் திட்டங்களை செய்து தருகின்றன. எனவே அவற்றில் ஒன்றின் மூலமாக சென்றால் சுலபமாக இருக்கும். இல்லையென்றால் மூன்றுக்கும் அதிகமான நபர்களுடன் நீங்களே ஒரு குழுவை அமைத்துக்கொண்டும் டிரெக்கிங் செல்லலாம்.

படம் : Sujay Kulkarni

டிரெக்கிங் விவரம்

டிரெக்கிங் விவரம்

முதல் நாள் : 6 கி.மீ தூரம் குக்கே சுப்ரமண்யாவிலிருந்து, பட்ருமனே வரை 4 மணிநேர பயணம். பின்னர் அங்கேயே டென்ட் அமைத்து இரவு தங்கிக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் நாள் : முதல் பாதி - 7 கி.மீ தூரம் பட்ருமனே முதல் குமார பர்வதம் சிகரம் வரை 4 மணிநேர பயணம்.
இரண்டாம் பாதி : குமார பர்வதம் முதல் பட்ருமனே வரை 2 மணிநேர பயணம்.
மூன்றாம் பாதி : பட்ருமனே முதல் குக்கே சுப்ரமண்யா வரை 2 மணிநேர பயணம்.

படம் : Sujay Kulkarni

உணவு

உணவு

முதல் நாள் காலை உணவை முடித்துக்கொண்டு 1 மணி நேரம் கழித்து டிரெக்கிங்கை தொடங்கலாம். அதன் பின்னர் பட்ருமனேவை அடைந்த பிறகு நீங்கள் மதிய உணவை முடித்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் முன்கூட்டியே எத்தனை பேர் வருகிறீர்கள், எப்போது வருவீர்கள் என்று தகவல் சொல்ல வேண்டும். தகவல் சொல்ல வேண்டிய எண்கள் : 9448647947 / 9480230191. அதன் பின்னர் அங்கேயே டென்ட் அமைத்து இரவு தங்கிக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு, வேண்டுமானால் மதியத்துக்கும் பார்சல் கட்டிக்கொண்டு சிகரம் நோக்கி கிளம்பலாம். அப்படி கிளம்பும்போது டென்ட், படுக்கை முதலிய பொருட்களை பட்ருமனேவிலேயே விட்டுவிட்டு மலையேறுவது சிறந்தது.

படம் : karthick siva

சோதனைச் சாவடி

சோதனைச் சாவடி

டிரெக்கிங் தொடங்கிய 200 மீட்டர் தொலைவில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. அதைத் தாண்டிச் செல்வதற்கு நபர் ஒன்றுக்கு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன் பின்னர் அரைக் கி.மீ தொலைவில் வியூ பாயின்ட் ஒன்று காணப்படுகிறது.

படம் : karthick siva

கல்லு மண்டபம்

கல்லு மண்டபம்

வியூ பாயின்ட்டிலிருந்து 2 மணி நேரம் நடந்தால் சிறு ஓடை ஒன்று காணப்படுகிறது. அதில் நீங்கள் நீர் அருந்திவிட்டு, பாட்டில்களிலும் நிரப்பிக்கொள்ளலாம். அதன் பின்னர் கல்லு மண்டபம் என்றறியப்படும் 4 தூண்கள் கொண்ட சிறிய மண்டபம் போன்ற அமைப்பு ஒன்று வழியில் தென்படுகிறது. அங்கும் நீர் நிலை ஒன்றை பார்க்க முடியும். இந்த இடத்தில் சிலர் கேம்ப் அமைத்தும் தங்குவதுண்டு.

படம் : karthick siva

எழில் மலைக்காட்சிகள்

எழில் மலைக்காட்சிகள்

கல்லு மண்டபத்திலிருந்து சிகரம் நோக்கி செல்லும் வழி முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளின் எல்லையற்ற அழகை கண்டு ரசிக்கலாம்.

படம் : karthick siva

கடினமான மலைச்சரிவுகள்

கடினமான மலைச்சரிவுகள்

குமார பர்வதம் சிகரத்தை நோக்கி நீங்கள் அடுத்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் மிகவும் கவனமாக எடுத்துவைக்க வேண்டும். அந்த அளவுக்கு செங்குத்தான மலைச்சரிவுகள் அமைந்துள்ளன.

படம் : Sujay Kulkarni

குமார பர்வதம் சிகரம்

குமார பர்வதம் சிகரம்

கடுமையான பாதைகளை எல்லாம் கடந்த பின்பு இறுதியாக குமார பர்வதம் சிகரத்தை நீங்கள் அடைந்துவிடுவீர்கள். பின்னர் அங்கேயே எங்காவது அமர்ந்து மதிய உணவை முடித்துக்கொண்டு மலையிரங்கலாம். அதற்கு முன்பாக இச்சிகரத்தின் உச்சியில் அமைந்துள்ள சிறிய சிவன் கோயிலுக்கு செல்பவர்கள் செல்லலாம்.

படம் : karthick siva

மலையிறக்கம்

மலையிறக்கம்

மலையேற்றம் எவ்வளவு கடினமானதோ அதேபோன்று மலையிறக்கமும் கடினமானது. ஆனால் ஏறும் போது ஆகும் நேரத்தைவிட இறங்கும் போது ஆகும் நேரம் குறைவு. அதேவேளை இறங்கும்போது சரிவுகளில் கவனமாக கால் வைத்து இறங்க வேண்டும். இல்லையென்றால் சறுக்கி விழ வாய்ப்புண்டு. முடிந்தவரை சூரிய அஸ்த்தமனத்துக்கு முன்பே வரப் பாருங்கள். அப்படி நேரமாகும் பட்சத்தில் கையில் டார்ச் கொண்டு செல்வது அவசியம்.

படம் : karthick siva

மல்லலி அருவி

மல்லலி அருவி

குமார பர்வதம் சிகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மல்லலி அருவி.

படம் : Premnath Thirumalaisamy

புஷ்பகிரி வனப்பகுதி

புஷ்பகிரி வனப்பகுதி

குமார பர்வதம் சிகரத்துக்கு செல்லும் வழியில் உள்ள புஷ்பகிரி வனப்பகுதி.

படம் : lohit v

டென்ட்

டென்ட்

குமார பர்வதம் டிரெக்கிங் வந்த பயணிகள் டென்ட் அமைத்து தங்கியுள்ள காட்சி.

படம் : Sujay Kulkarni

சிற்றோடை

சிற்றோடை

டிரெக்கிங் செல்லும் வழியில் உள்ள சிற்றோடை ஒன்றில் நீராடும் பயணிகள்.

படம் : karthick siva

அறிவுப்பு பலகைகள்

அறிவுப்பு பலகைகள்

டிரெக்கிங் செல்லும் வழியில் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காக திசை மற்றும் தூரத்தை குறிக்கும் அறிவிப்பு பலகைகள் ஒரு சில மரங்களில் வைக்கப்பட்டுள்ளன.

படம் : Sujay Kulkarni

இளைப்பாறும் பயணிகள்

இளைப்பாறும் பயணிகள்

டிரெக்கிங் செல்லும் வழியில் சிறிது நேரம் இளைப்பாறும் பயணிகள்.

படம் : karthick siva

அதிகாலை பனிமூட்டம்

அதிகாலை பனிமூட்டம்

அதிகாலை பனிமூட்டத்தில் டிரெக்கிங் செல்லும் பயணிகள்.

படம் : karthick siva

பீமன மண்டே

பீமன மண்டே

குமார பர்வதம் சிகரம் செல்லும் வழியிலுள்ள பீமன மண்டே எனும் பாறை.

படம் : Naveenkumar Avalakki sure

குக்கே சுப்ரமண்யா கோயில்

குக்கே சுப்ரமண்யா கோயில்

குக்கே சுப்ரமண்யா நகரில் உள்ள முருகன் கோயிலான குக்கே சுப்ரமண்யா கோயில். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

படம் : karthick siva

காட்டு வழியே!

காட்டு வழியே!

குமார பர்வதம் சிகரத்தை அடைய நீங்கள் இதுபோன்ற காடுகளை கடந்துசெல்ல வேண்டும்.

படம் : Naveenkumar Avalakki sure

உச்சியிலிருந்து

உச்சியிலிருந்து

குமார பர்வதம் சிகரத்தின் உச்சியிலிருந்து கீழே தெரியும் காட்சி.

படம் : Sujay Kulkarni

டிரெக்கிங் விவரம்

டிரெக்கிங் விவரம்

குமார பர்வதம் டிரெக்கிங் குறித்த முழு விவரங்களைக் கொடுக்கும் இந்த பேனர் டிரெக்கிங் செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ளது.

படம் : Shashidharus

குறைந்தது 3 பேர்!

குறைந்தது 3 பேர்!

குமார பர்வதம் டிரெக்கிங் செல்பவர்கள் குறைந்தது 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழுவை உருவாக்கிக்கொள்ளவும்.

படம் : Sujay Kulkarni

சூரிய உதயம்

சூரிய உதயம்

சிகரத்தின் உச்சியிலிருந்து தெரியும் சூரிய உதயக் காட்சி.

படம் : Sujay Kulkarni

எங்கும் பசுமை!

எங்கும் பசுமை!

குமார பர்வதம் டிரெக்கிங் முழுக்க நீங்கள் இதுபோலவே பசுமையான காட்சிகளைத்தான் காண்பீர்கள்.

படம் : karthick siva

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

குமார பர்வதம் சிகரத்தின் உச்சியிலிருந்து தெரியும் சூரிய அஸ்த்தமனக் காட்சி.

படம் : Sujay Kulkarni

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X