Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் பணக்கார கோயிலான திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி புதையல்கள்

உலகின் பணக்கார கோயிலான திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் கோடான கோடி புதையல்கள்

திருப்பதி... உலகின் அதிகம் பேர் சுற்றுலாவுக்கு வரும் ஒரு கோயில் மட்டுமல்ல. அது இந்தியாவின் அடையாளம். உலகெங்கும் உள்ள பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காரணமாக காணிக்கை இட்டு திருப்பதி வெங்கடாச்சலபதியை உலகி

By Udhaya

திருப்பதி... உலகின் அதிகம் பேர் சுற்றுலாவுக்கு வரும் ஒரு கோயில் மட்டுமல்ல. அது இந்தியாவின் அடையாளம். உலகெங்கும் உள்ள பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் காரணமாக காணிக்கை இட்டு திருப்பதி வெங்கடாச்சலபதியை உலகின் மிகப் பெரிய பணக்கார சாமியாக மாற்றியுள்ளனர். இது அவரின் பக்தர்கள் அனைவருக்குமே பெருமைதான். ஆனால் கோயிலில் இதுவரை காணிக்கையாக வந்த பணத்தின் மதிப்பைவிட அதிக மதிப்பு கொண்ட புதையல் இருப்பதாகவும், அதை சிலர் எடுக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வெறும் தகவல்கள் மட்டுமல்ல..இவற்றை கூறியது இந்த கோயிலின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு. இதனால் இந்த விசயம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சுற்றுலாவுக்கு செல்பவர்களும், பக்தி மயமாக திருப்பதி செல்பவர்களுக்கும் இது கொஞ்சம் அதிர்ச்சியான தகவலாகத்தான் இருக்கும். வாருங்கள் அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்,

 கோடிக்கணக்கில் புதையல்கள்

கோடிக்கணக்கில் புதையல்கள்


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திருப்பதி கோயிலின் தலைமை அர்ச்சகர் ஒரு பூதாகரமான விசயத்தை வெளியிட்டார். அது திருப்பதி கோயிலில் இருக்கும் புதையல். இந்த புதையலின் மதிப்பு இதுவரை கோயிலுக்கு காணிக்கையாக வந்த பணம், நகை மதிப்புகளைக் காட்டிலும் இருமடங்கு அதிகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Bryan Allison

பக்தர்களுக்கு தடை

பக்தர்களுக்கு தடை

ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து 16ம் தேதி வரையில் பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக அவர்கள் சொல்வது கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கப்போகிறது என்பதுதான். மேலும் இந்த நேரத்தில் சிலர் புதையலை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தீட்சிதர் புகார் கூறியுள்ளார்.

rajaraman sundaram

காசு மாலை காணவில்லை

காசு மாலை காணவில்லை


திருப்பதி கோயிலில் வழக்கம் வழக்கமாக நிறைய வருடங்கள் அணுவித்து வந்த காசு மாலை உள்ளிட்ட பெரும் மதிப்பு கொண்ட நகைகளை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பும் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

ShashiBellamkonda

புதையலை எப்படி எடுக்கலாம்

புதையலை எப்படி எடுக்கலாம்


9 நாட்கள் திட்டம் என்ற ஒன்று இருப்பதாக அரசல் புரசலாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதன்படி இந்த 9 நாட்களுக்குள் சுரங்கத்தை தோண்டி புதையலை எடுத்துவிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதன்காரணமாகவே பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை என அப்பகுதி மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இதுகுறித்து கோயில் நிர்வாகம் உறுதியான மறுப்பை வெளியிடவில்லை என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. மேலும் இதுமாதிரியான தகவலைத்தான் தலைமை அர்ச்சகரும் கூறியுள்ளார்.

Amarnath

அழியப்போகிறதா திருப்பதி

அழியப்போகிறதா திருப்பதி


முன்பு ஒரு கல்வெட்டு செய்தி எனும் தலைப்பிட்டு, சமூக வலைத்தளங்களில் சுற்றிய செய்தி ஒன்றை நினைவுகூரலாம். அதில் திருப்பதியில் இருக்கும் புதையலை எடுத்தால் திருப்பதி அழிந்துவிடும் என்று கூறப்பட்டிருந்தது.

அழியப்போகிறதா திருப்பதி? வலைத் தளங்களைச் சுற்றும் கல்வெட்டு செய்திகள் - உண்மை என்ன?

Saminathan Suresh

 சர்ச்சை மேல் சர்ச்சை

சர்ச்சை மேல் சர்ச்சை

திருப்பதி உலகப் புகழ் பெற்றது மட்டுமல்லாமல், நிறைய சர்ச்சைகளுக்கும் பெயர் போனது. அதன்படி இந்த கோயிலில் இருப்பது உண்மையில் பெருமாள் அல்ல.. முருகன்தான் என பல ஆண்டுகளாகவே இப்படி ஒரு செய்தி பரவியுள்ளது.

திருப்பதியில் இருப்பது உண்மையில் யார் தெரியுமா?

Krishna Jakkinapalli

3200 அடி உயரத்தில்

3200 அடி உயரத்தில்

வெங்கடேஸ்வரர் கோயிலான திருப்பதி அமைந்திருக்கும் மலைஸ்தலமும், அதைச்சுற்றியுள்ள மலைப்பகுதிகளும் திருமலா என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3200 உயரத்தில் அமைந்திருக்கும் இம்மலைகளில் ஏழு சிகரங்கள் வானுயர்ந்து நிற்கின்றன.

Pratyusha kapavarapu

சிகரங்கள்

சிகரங்கள்


ஆதிசேஷனின் வடிவாக கருதப்படும் இந்த சிகரங்கள் நாராயாணாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி மற்று வெங்கடாத்ரி என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

Pratyusha kapavarapu

திருப்பதி மலை

திருப்பதி மலை

இவற்றில் வெங்கடாத்ரி எனப்படும் ஏழாவது சிகரத்தில்தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. திருமலா எனும் சொல் திராவிட மொழிகளில் ‘புனிதமலை' என்ற அர்த்தத்தை தாங்கி நிற்கிறது என்பது சொல்லாமலே விளங்கக்கூடிய ஒன்றாகும்.

Sai deepthi dhulipudi

திருப்பதியில் காணவேண்டியவை

திருப்பதியில் காணவேண்டியவை

பிரதானக்கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வரஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.

Nature.Catcher

ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா

ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்கா

ஆன்மீக அம்சங்களை தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.

ShashiBellamkonda

 ஷிலாத்தோரணம்

ஷிலாத்தோரணம்

ஷிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும். திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும் பக்தர்களும் நன்கு அறிந்ததே.

Saminathan Suresh

உணவுகள்

உணவுகள்

ஆந்திர மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவுவகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம். மேலும், இங்கு உள்ளூர் தயாரிப்புகளாக பலவகை கைவினைப்பொருட்கள், மரக்குடைவு பொருட்கள், மரப்பொம்மைகள், கலம்காரி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் சந்தன பொம்மைகள் போன்றவை ஏராளமாக கிடைக்கின்றன. ரசனை மிக்கவர்கள் இவற்றில் ஏதாவதொன்றை வாங்காமல் ஊர் திரும்புவதில்லை.

ShashiBellamkonda

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X