Search
  • Follow NativePlanet
Share
» »மிட்னாபூரும் குரும்பேரா கோட்டையும்!

மிட்னாபூரும் குரும்பேரா கோட்டையும்!

மிட்னாபூரும் குரும்பேரா கோட்டையும்!

By Udhay

ஒரு காலத்தில் கலிங்கத்து அரசாட்சியின் ஒரு பகுதியாக இருந்த மிட்னாபூர், வெள்ளையர்களுக்கு எதிராக பல சுதந்திர போராட்ட தியாகிகளை தந்துள்ளதால் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது இந்த நகரம் கங்சபடி நதிக்கரையில் அமைந்துள்ளது. தலைநகரமான கொல்கத்தாவிற்கு மிக அருகில் இருப்பதாலும் இந்த இடம் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. மிட்னாப்பூரின் பெயரில் உள்ள மர்மம் பற்றியும், அங்கு அமைந்துள்ள குரும்பேரா கோட்டை பற்றியும் பார்க்கலாம்.

 பெயரில் உள்ள மர்மம்!

பெயரில் உள்ள மர்மம்!

இந்த நகரத்தின் பெயரை பற்றி தெரிந்து கொள்ளும் போது சுவாரசியாமாக இருக்கும். ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் இதற்கு ஒவ்வொரு கதையை கூறுகின்றனர். இங்குள்ள உள்ளூர் கடவுளான மெடினிமாதாவின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது என்று ஹிந்துக்கள் நம்புகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களோ பல மசூதிகளை கொண்ட அவர்களின் புனித ஸ்தலமான மெடினாவின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது என்று நம்பி வருகின்றனர்.

Tirthatanay

மிட்னாபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

மிட்னாபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

மிட்னாபூரில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. சப்லேஷ்வர் சிவன் கோவில், ஜகன்னாத் கோவில் மற்றும் அனைத்து மசூதிகளும் தர்காஹ்களும் தான் அவைகளில் சில. காளி தேவியின் பக்தர்கள் பட்டலா கோவிலுக்கு அடிக்கடி வருவார்கள்.

Koushikvu

விழாக்கள்

விழாக்கள்

மேற்கு வங்காளத்தில் உள்ள மற்ற நகரங்களை போல மிட்னாபூருக்கும் துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் காளி பூஜைகளின் போது வருவதே உகந்த நேரமாக இருக்கும். திருவிழாக்களின் போது நகரமே வண்ணமயமாக காட்சி அளிக்கும். இந்நேரத்தில் நகரத்தில் பல இடங்களில் பந்தல்களும், ஷாமியானக்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
Koushikvu

பூங்காக்கள்

பூங்காக்கள்

இங்குள்ள உள்ளூர்வாசிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயணம் மேற்கொள்வதால் இங்கு பல பூங்காக்கள் கட்டப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

Koushikvu

மிட்னாபூரை அடைவது எப்படி?

மிட்னாபூரை அடைவது எப்படி?

மிட்னாபூரை முக்கிய நகரங்களிலிருந்து விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

Arijul83

குரும்பேரா கோட்டை

குரும்பேரா கோட்டை


குரும்பேரா கோட்டையில் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதோடு இந்த கோயிலுக்கு நேர் பின்னே முகம்மது தாஹீர் என்பவரால் கட்டப்பட்ட மசூதி ஒன்றும் அமைந்துள்ளது.

Koushikvu

இந்து, இஸ்லாமிய ஒருமைப்பாடு

இந்து, இஸ்லாமிய ஒருமைப்பாடு

இந்து, இஸ்லாமிய ஒருமைப்பாட்டை விளக்கும் குரும்பேரா கோட்டைக்கு மத பேதமின்றி நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் குரும்பேரா கோட்டை சூரிய அஸ்த்தமன காட்சிக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

Tirthatanay

 உமாபதி சிவன் கோயில்

உமாபதி சிவன் கோயில்


ஆட்ச்சலா கட்டிடக்கலை மற்றும் டெர்ரக்கோட்டா பாணியில் கட்டப்பட்ட பழமையான சிவாலயமான உமாபதி சிவன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

இங்கு சிவபெருமானை தவிர கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட சூரிய பகவானின் விக்ரகத்துடன் சன்னதி உள்ளது. இந்த கோயில் 10 அல்லது 11-ஆம் நூற்றாண்டுகளின் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Vikramjit Kakati

Read more about: travel fort
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X