Search
  • Follow NativePlanet
Share
» »லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

வட சிக்கிம் மாவட்டத்தில் தற்பொழுது பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறிவரும் லாச்சென் பகுதி அமைதியின் இருப்பிடமாக அறியப்படுகிறது. லாச்சென் என்பதற்கு 'மிகப்பெரிய கணவாய்' என்று பொருள். இங்கு கண்ணுக்கினிய காட்சிகளும், அடர்ந்த காடுகளும் பயணம் செய்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமையப்பெற்றுள்ளன. காங்டாக்கில் இருந்து லாச்சென் 129 கிமீ தொலைவில், குருடோங்மர் ஏரியையும், சோப்தா பள்ளத்தாக்கையும் நோக்கி அமைந்திருக்கின்றது.

லாச்செனிலும் வட சிக்கிமை சார்ந்த மற்ற இடங்களிலும் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக பின்பற்றுவதற்கென "சும்ஸா" என்றழைக்கப்படும் பழைய நிர்வாக அமைப்பு பின்பற்றப்படுகின்றது. இந்த சுய அரசாங்கதை தலைமை வகிக்கும் தலைவரின் பெயர் பிபான் ('Pipon'). அவர் பஞ்சாயத்திற்கு வரும் விவாதங்களை ஜனநாயக முறையில் தீர்த்து வைக்கின்றார். மேலும், ஒவ்வொரு வருடமும் லாச்செனில் "தாங்கு" என்றழைக்கப்படும் எருது பந்தயம் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இங்கு சுமார் 1000 பேர் கொண்ட மிகக் குறைந்த அளவிலான மக்களே உள்ளனர். லாச்செனை பார்த்து மகிழ நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களின் இடையில் வரலாம். இந்த பருவத்தில் இங்கு வானிலை இனிமையாக இருக்கும்.

லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Sujay25

லாச்சென் சென்றால் தவறாமல் இந்த ஏரியை காண வேண்டும். இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து 5,210 மீ உயரத்தில் அமைந்துள்ள உலகில் மிக உயர நீர் நிலைகளுள் ஒன்றாகும். வட சிக்கிம் மாகாணத்தில் அமைந்துள்ள இவ்விடம் தென் சீனா எல்லையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தென் கிழக்கு குன்சென்ஜுங்கா பகுதியை நோக்கி அமைந்திருக்கின்றது. குளிர் காலத்தில் இந்த ஏரி முழுவதும் உறைந்து காணப்படும். இந்த ஏரியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இடம் சோ லக்ஸ்மோ ஏரி. ராணுவத்திடமிருந்து முறையாக அனுமதி வாங்கி டிரெக்கிங் மூலம் குர்டொங்மர் ஏரியிலிருந்து சோ லக்ஸ்மோ ஏரி வரை செல்ல முடியும். குரு பத்மசம்பவா என்ற சீக்கிய துறவியின் பெயரை தழுவி இவ்விடத்திற்கு இப்பெயர் வந்தது. அத்துறவி இங்கு மதம் சார்ந்த சடங்குகளை நிகழ்த்தியதால் இவ்விடம் புனிதத்தலமாக கருதப்படுகின்றது. இப்புனிதத் தன்மையால்தான் இந்த ஏரியின் ஒரு பகுதி கடும் குளிர் காலத்திலும் உறையாமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.

லாச்சென் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Yonit Chauhan

கடல் மட்டத்திலிருந்து 13,500 அடி உயரத்தில் அமைந்துள்ள அழகிய ஏரிதான் தாங்கு. இந்த ஏரியை லாச்செனிலிருந்து 2 மணி நேரத்தில் அடையலாம்.

குர்டோங்மர் ஏரி மற்றும் சோ லாமூ - தீஸ்தாவின் தலைமை ஏரி போன்ற பிரபல தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாங்குவில் இறங்காமல் போக முடியாது. அத்தகைய அழகு நிறைந்த இவ்விடம் சிறிது சிறிதாக பிரபலம் அடைந்து வருகின்றது.

Read more about: sikkim
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X