Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி இந்த வருசம் என்ன ஸ்பெசல் ?

பெங்களூர் லால்பாக் மலர் கண்காட்சி இந்த வருசம் என்ன ஸ்பெசல் ?

உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பர். ஆனால், இந்தியாவிலேயே சிறந்த, பெரிய மலர் கண்காட்சி எங்கு நடக்குது தெரியுமா ?

வண்ணமயமான பல மர்களை ஒரே இடத்தில் கண்டு ரசிக்க உதவுவது மலர் கண்காட்சிகள் தான். பலவகையான உள்நாட்டு மலர்கள் மட்டுமின்றி எளிதில் காணக்கிடைக்காத வெளிநாட்டு மலர்கள் கூட இதில் இடம்பெருவது சிறப்பம்சம். குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற மலர்கண்காட்சி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பர். ஆனால், இந்தியாவிலேயே சிறந்த, பெரிய மலர் கண்காட்சி எங்கு நடக்குது தெரியுமா ?

பெங்களூர்

பெங்களூர்

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த அதே சமயம் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள பெங்களூரில் தான் நாட்டிலேயே பெரிய மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. பெரும்பாலும், மலைப் பிரதேசங்கள் நிறைந்த பகுதிகளில் நடத்தப்படும் மலர் கண்காட்சி பெங்களூர் போன்ற நாகரங்களில் நடத்தப்படுவதற்குக் காரணம் இங்குள்ள ஜில்லென்ற காலநிலை தான். மேலும், செடிகள் வாடாமல் இருக்க திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது.

எங்க நடக்குது ?

எங்க நடக்குது ?


பெங்களூரிலேயே பிரபலமான சுற்றுலாத் தலமும், தாவரவியல் பூங்காவும் என்றால் அது லால் பாக். ஆண்டுதோறும் மலர் கண்காட்சி இங்கே நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தின், சென்னை, கோவை, திருச்சி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெங்களூர் பயணிக்கும் சுற்றுலாவாசிகள் லால்பாக் செல்வதை தவறவிடுவதில்லை. அந்தளவிற்கு ரம்மியமான தலமாக இது உள்ளது. 240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் ஆயிரம் வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன.

எப்போது நடக்கிறது ?

எப்போது நடக்கிறது ?


புல் தரைகள், மலர்ப்படுக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையும் மலர்களுமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில் வருடந்தோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதுவும், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மலர்கண்காட்சி இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டினரையும் வெகுவாகக் கவரக்கூடியது.

இந்த வருடம் என்ன சிறப்பு

இந்த வருடம் என்ன சிறப்பு


மாநில தோட்டக்கலைத் துறையும், மைசூர் பூங்கா சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியின் ஒருபகுதியாக பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் பல நூறு இனங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் ரோஜா மலர்கள் இடம் பெற்றுள்ளது.

ஆயுதங்களான ரோஜாக்கள்

ஆயுதங்களான ரோஜாக்கள்


இந்த வருடம் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள பல சிலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. அவற்றுள், இந்திய இராணுவத்தை போற்றும் வகையில் பீரங்கிகள், ஏவுகணைகள், இராணுவ வீரர்கள் என பல்வேறு உருவ வடிவங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது. மிருகங்களின் உருவத்திலும் மக்களை கவரும் வகையில் கண்காட்சியில் பூக்கள் இடம் பெற்றுள்ளது.

எப்போது செல்லலாம் ?

எப்போது செல்லலாம் ?


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குடியரசு தினத்தையும், ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தையும் முன்னிட்டு பெங்களூரு லால் பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி வரும் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மலர் சிங்கம்

மலர் சிங்கம்


மலர்களால் உருவான அழகிய சிங்கம்

இராணுவத் துப்பாக்கி

இராணுவத் துப்பாக்கி


கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இராணுவத் துப்பாக்கி

மலர் ஃபிலிம் ரோல்

மலர் ஃபிலிம் ரோல்


85-வது வருட கன்னட திரைப் பயணத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ள மலர் ஃபிலிம் ரோல்

கலர்கலரான மலர் தொகுப்பு

கலர்கலரான மலர் தொகுப்பு


கண்களை பறித்திழுக்கும் கலர்கலரான பூக்களின் தொகுப்பு

வெளிநாட்டுப் பூக்கள்

வெளிநாட்டுப் பூக்கள்


சின்ன சின்ன வெளிநாட்டுப் பூக்கள்

ஊதாப் பூக்கள்

ஊதாப் பூக்கள்


பூத்துக் குலுங்கும் ஊதாப் பூக்கள்

ஜவான் நினைவு மலர் ஸ்தூபி

ஜவான் நினைவு மலர் ஸ்தூபி


இராணுவ வீரர்களின் நினைவாக அழங்கரிக்கப்பட்டுள்ள மலர் ஸ்தூபி

கன்னட திரையுலகின் மலர் ரோல்

கன்னட திரையுலகின் மலர் ரோல்


கன்னட திரையுலகை பாராட்டும் விதமான அழங்கரிக்கப்பட்ட மலர் ரோல்

நேஷனல் ஃபிலிம் அவார்டு

நேஷனல் ஃபிலிம் அவார்டு


நேஷனல் ஃபிலிம் அவார்டு பெற்ற திரையுலகை விளக்கும் மலர்த் தொகுப்பு

இஸ்ரோவை பாராட்டும் மலர் அழங்காரம்

இஸ்ரோவை பாராட்டும் மலர் அழங்காரம்


ஜிஎஸ்எல்வி செயற்கைக் கோளை வெற்றிகரமாக செயல்படுத்திய இஸ்ரோவைப் பாராட்டும் விதத்திலான மலர் அழங்காரம்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X