Search
  • Follow NativePlanet
Share
» »அறியப்படாத அழகிய அருவிகள்!!!

அறியப்படாத அழகிய அருவிகள்!!!

By

ஒரு அடர்ந்த காட்டில் நடந்துசெல்வதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். எங்கும் பச்சை பசேலென மரங்கள் சூழ்ந்திருக்க, சில்லென வீசும் காற்றில், பறவைகளின் குழந்தை மொழியை கேட்டுக்கொண்டே மெல்ல மெல்ல நடந்து செல்கிறீர்கள்.

அப்போது எங்கோ வெகு தூரத்தில் ஓங்கார ஒலியுடன், சிங்கத்தின் கர்ஜனை போல, ஆர்பரித்துக்கொட்டும் அருவியின் சத்தம் கேட்கிறது. அருகே நெருங்க நெருங்க அதிகரிக்கும் அருவியின் ஒலி உங்களை சிலிர்ப்படைய வைக்கிறது.

திடீரென திரைகள் விலகியதுபோல் உங்கள் முன்பாக காதைப் பிளக்கும் சத்தத்துடன் மலையுச்சியிலிருந்து ஓங்காரமிட்டு அருவி கொட்டுகிறது.

எப்படி இருக்கும் அந்த அனுபவம் என்று எண்ணிப் பாருங்கள். அதைப்போலவே எங்கெங்கோ மறைந்துகிடக்கும் ஒரு சில அறியப்படாத அருவிகளை இங்கே காண்போம்.

கொடசின்மல்கி அருவி

கொடசின்மல்கி அருவி

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள கோகாக் நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் கொடசின்மல்கி அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு கோகாக் நகரிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும் பேருந்து நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ தூரம் நீங்கள் காட்டுவழியே நடந்துதான் கொடசின்மல்கி அருவியை அடையமுடியும்.

படம் : Shil.4349

தலக்கோணம் அருவி

தலக்கோணம் அருவி

ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்கினுள் தலக்கோணம் அருவி அமைந்துள்ளது.

படம் : VinothChandar

சாத்தோடி அருவி

சாத்தோடி அருவி

கர்நாடகாவின் எல்லாப்பூர் நகரிலிருந்து 19 கி.மீ தொலைவில், கல்லரமனே மலையருகில் உருவாகும் பல ஓடைகளின் கூட்டு சங்கமிப்பில் 50 அடி உயரத்திலிருந்து விழுகிறது சாத்தோடி அருவி. சுற்றுலாப்பயணிகளுக்கு மலையேற்றம், பிக்னிக், படகுப்பயணம், பறவை ஆராய்ச்சி போன்ற பல்விதமான மனம் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு வாய்க்கின்றன.

படம் : Adnan Alibaksh

ஆகாய கங்கை

ஆகாய கங்கை

கொல்லிமலையில் பாயும் அய்யாறு நதி சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுவதை ஆகாய கங்கை அருவி என அழைக்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலின் அருகே அமைந்துள்ள இந்த அருவியை சுற்றிலும் மலைகள் சூழ எழிலுடன் காட்சியளிக்கிறது. கோயிலிலிருந்து தொடங்கும் படிகள் அருவியின் முடிவு வரை நீள்கிறது. மொத்தம் ஆயிரம் எண்ணிக்கையில் இருக்கும் படிகளின் உயரம் சற்றே அதிகமாக இருப்பதால் இப்படிகளில் ஏறுவதும், இறங்குவதும் சோர்வு தரும் ஒன்றாகும்.

படம் : Karthickbala

மல்லலி அருவி

மல்லலி அருவி

கூர்க் மாவட்டத்திலுள்ள குமார பர்வதம் சிகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் மல்லலி அருவி அமைந்துள்ளது.

படம் : Premnath Thirumalaisamy

ஷிவ்தார் கால் அருவி

ஷிவ்தார் கால் அருவி

புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் உள்ள வரந்தா மலைத்தொடரில் போர்-மஹத் சாலையில் ஷிவ்தார் கால் என்று ஒரு அற்புதமான குகை அமைந்துள்ளது. இந்த குகையில் 17-ஆம் நூற்றாண்டு மராட்டிய கவி மற்றும் முனியான சாம்ராத் ராம்தாஸ் என்பவர் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த இடத்தில்தான் இவருக்கும், சத்ரபதி சிவாஜிக்குமான முதல் சந்திப்பு நடந்தேறியது என்றும் கூறப்படுகிறது. இங்கு சாம்ராத் ராம்தாஸ் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மடலாயம் ஒன்றும் இருக்கிறது. அதோடு மழைக்காலங்களில் இந்த குகையை மறைத்துக்கொட்டும் அருவியின் காட்சி எவரையும் அடிமையாக்கிவிடும்.

ஹரிஷ்சந்திரகட் அருவி

ஹரிஷ்சந்திரகட் அருவி

மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டைப் பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது.

படம் : Bajirao

சிரிமனே அருவி

சிரிமனே அருவி

கர்நாடக மாநிலம் சிருங்கேரியிலிருந்து 14 கி.மீ தொலைவில் மங்களூர் செல்லும் வழியில் சிரிமனே அருவி அமைந்துள்ளது.

படம் : Vaikoovery

உஞ்ச்சலி அருவி

உஞ்ச்சலி அருவி

பெங்களூரிலிருந்து 425 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிர்சி நகரிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உஞ்ச்சலி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி 'காதை செவிடாக்கும் ஒலி எழுப்பும் அருவி' என்ற பொருளில் 'கெப்பா ஜோக்' என்று அழைக்கப்படுகிறது.

படம் : Sukruth

அம்போலி அருவி

அம்போலி அருவி

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அம்போலி எனும் நகரில் அம்போலி அருவி அமைந்துள்ளது.

படம் : Naveen Kadam

ஹிட்லுமனே அருவி

ஹிட்லுமனே அருவி

கர்நாடகாவிலுள்ள புகழ்பெற்ற சிகரமான கொடசாத்ரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஹிட்லுமனே அருவி அமைந்துள்ளது.

படம் : Shrikanth n

லக்கம் அருவி

லக்கம் அருவி

மூணாரிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 38 கி.மீ தொலைவில் லக்கம் அருவி அமைந்திருக்கிறது.

படம் : Subramanian Kabilan

கூட்லு தீர்த்த அருவி

கூட்லு தீர்த்த அருவி

பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் உள்ள அகும்பேவில் கூட்லு தீர்த்த அருவி அமையப்பெற்றிருக்கிறது. 126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்.

படம் : Balajirakonda

தோபி அருவி

தோபி அருவி

மகாராஷ்டிராவிலுள்ள மஹாபலேஷ்வரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தோபி அருவி 50 மீட்டர் உயரத்திலிருந்து ஆர்பரித்து விழுகிறது. இந்த அருவி கோய்னா பள்ளத்தாக்கில் விழுந்து, இறுதியில் கோய்னா ஆற்றில் சென்று கலக்கிறது. இது எல்பின்ஸ்டோன் மற்றும் லோட்விக் மலைக்காட்சித் தலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

படம் : Shirin tejani

செலவாரா அருவி

செலவாரா அருவி

கூர்கிலிருந்து 37 கி.மீ தொலைவில் செலவாரா அருவி அமைந்துள்ளது.

படம் : V.v

டைகர் பாயிண்ட் அருவி

டைகர் பாயிண்ட் அருவி

மும்பையிலிருந்து 84 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லோனாவ்ளாவில் உள்ள டைகர் பாயிண்ட் என்ற பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது.

படம் : Sobarwiki

ஹனுமான் குந்தி அருவி

ஹனுமான் குந்தி அருவி

சுத்தனப்பே அருவி என்றும் அழைக்கப்படும் ஹனுமான் குந்தி அருவி கர்நாடகாவில் உள்ள குதுரேமுக் தேசியப்பூங்காவில், கர்கலா அணை மற்றும் லக்யா அணைக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல வனத்துறையால் பாதுகாப்பான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அருவியைக் காண அனுமதிக்கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

படம் : Arun Keerthi K. Barboza

ஓநேக் அபி அருவி

ஓநேக் அபி அருவி

கர்நாடக மாநிலம் அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் ஓநேக் அபி அருவி அமைந்துள்ளது. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.

விபூதி அருவி

விபூதி அருவி

கர்நாடக மாநிலம் சிர்சி நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில், யானா எனும் கிராமத்தில் விபூதி அருவி அமைந்துள்ளது.

படம் : Shash89

கல்ஹத்திகிரி அருவி

கல்ஹத்திகிரி அருவி

கர்நாடக மாநிலத்திலுள்ள கெம்மனகுண்டியிலிருந்து 10 கி.மீ தொலைவில் கல்ஹத்திகிரி அருவி அமைந்துள்ளது.

படம் : Suhph

தூவானம் அருவி

தூவானம் அருவி

பொள்ளாச்சியிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தினுள் தூவானம் அருவி அமைந்துள்ளது.

படம் : Ajith U

ஜெனித் அருவி

ஜெனித் அருவி

மகாராஷ்டிர மாநிலத்தின் லோனாவ்ளாவிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கோபோலி என்ற இடத்தில் ஜெனித் அருவி அமைந்திருக்கிறது.

படம் : Aditya Patawari

கடம்பி அருவி

கடம்பி அருவி

கர்நாடகாவிலுள்ள குதுரேமுக் தேசியப்பூங்காவினுள் கடம்பி அருவி அமைந்துள்ளது.

படம் : Karunakar Rayker

தலையார் அருவி

தலையார் அருவி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலைகளில் 975 அடி உயரத்திலிருந்து விழும் தலையார் அருவிதான் தமிழகத்தின் உயரமான அருவியாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் 3-வது உயரமான அருவியாகவும் தலையார் அருவி அறியப்படுகிறது.

படம் : Barbaragailblock

பள்ளிவாசல் அருவி

பள்ளிவாசல் அருவி

மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிவாசல் அருவி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு வரும்போது அருகே அமைந்துள்ள சீதா தேவி கோயிலுக்கும் பயணிகள் சென்று வரலாம்.

படம் : Sasi097

மேகமலை அருவி

மேகமலை அருவி

தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதியில் கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி உள்ளது.

படம் : Kujaal

தேவருகுண்டி அருவி

தேவருகுண்டி அருவி

மங்களூர் மாவட்டத்தில் உள்ள தொடிக்கானா எனும் கிராமத்திலிருந்து சுமார் 5 கி.மீ தூரம் காட்டு வழியே நடந்துசென்றால் தேவருகுண்டி அருவியை அடையலாம்.

உலக்கையருவி

உலக்கையருவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் அருகேயுள்ளது இந்த உலக்கையருவி.

படம் : Gokulnathk

ஆடியன்பாறா அருவி

ஆடியன்பாறா அருவி

கேரளாவின் நீலம்பூர் நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ள குரும்பலங்கோட் எனும் இடத்தில் ஆடியன்பாறா என்ற இந்த அழகிய அருவி அமைந்துள்ளது. நீலம்பூரிலிருந்து ஊட்டி செல்லும் நெடுஞ்சாலை வழியாக இந்த இடத்துக்கு சென்றடையலாம்.

படம் : Sidheeq

குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்க்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் குட்லாடம்பட்டி அருவி அமைந்துள்ளது.

படம் : எஸ்ஸார்

உப்பலமடுகு அருவி

உப்பலமடுகு அருவி

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசிட்டி நகரின் வடக்கு பக்கத்தில் உப்பலமடுகு அருவி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள இந்த அருவி தடா அருவியென்று பிரபலமாக அறியப்படுகிறது.

படம் : VikiUNITED

அணஷி அருவி

அணஷி அருவி

கர்நாடக மாநிலம் தாண்டேலியில் உள்ள அணஷி நேஷனல் பார்க்கில் இந்த அருவி அமைந்திருப்பதால் இது அணஷி அருவி என்றழைக்கப்படுகிறது.

படம் : Lakshmipathi23

Read more about: அருவிகள்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X