Search
  • Follow NativePlanet
Share
» »கஜூராஹோ ஒன்னு இல்ல இதுமாதிரி மொத்தம் 85 இருந்துருக்கு தெரியுமா?

கஜூராஹோ ஒன்னு இல்ல இதுமாதிரி மொத்தம் 85 இருந்துருக்கு தெரியுமா?

கஜூராஹோ ஒன்னு இல்ல இதுமாதிரி மொத்தம் 85 இருந்துருக்கு தெரியுமா?

By Udhaya

மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும். உலக பாரம்பரிய ஸ்தலங்களின் வரைபடத்தில் தனக்கென ஒரு பிரத்யேக இடத்தை இந்த கஜுராஹோ வரலாற்றுத்தலம் பெற்றிருக்கிறது.

கஜுராஹோ கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் உலகில் வேறெங்கும் காணமுடியாத தனித்துவத்துடன் மனித நாகரிகத்தின் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணங்களாக, காலச்சுவடுகளாக காட்சியளிக்கின்றன.

நீங்கள் கஜூராஹோவை காமக்கலைகளின் சின்னமாக மட்டும் கருதினால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உலகின் சிறந்த கட்டிடக்கலை இது என்பதை இந்த பதிவை படித்து முடித்த பின் உணர்வீர்கள். கஜூராஹோவின் கட்டிடக்கலைக்கு சான்றாக அழகிய 50 படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு பிடித்த கட்டிடத்தை கீழ குறிப்பிடுங்கள்.

 கலை மற்றும் பாரம்பரியம்

கலை மற்றும் பாரம்பரியம்

கஜூராஹோ கோயில்கள் மத்திய இந்தியாவை ஆண்ட சந்தேள ராஜ வம்சத்தினரால் 950 - 1050 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கின்றன. கஜூராஹோ ஸ்தலத்தில் மொத்தம் 85 கோயில்கள் உள்ளன. இவற்றில் 22 மட்டுமே தற்போது கால ஓட்டத்தில் முழுமையாக மிஞ்சியிருக்கின்றன.

Hiroki Ogawa

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்

வார்த்தைகளுக்குள் அடங்காத சிற்பக்கலை நுணுக்கங்கள் நிரம்பி வழியும் இந்த அற்புத வரலாற்று ஸ்தலம் உலகாளவிய கவனத்தை பெற்றுள்ளது.

Hiroki Ogawa

பொறியியல் நுணுக்கங்கள்

பொறியியல் நுணுக்கங்கள்

1986-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது இந்த கஜுராஹோ கோயில் ஸ்தலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது. கஜூராஹோ கோயில்களில் காணப்படும் சிற்பக்கலை அம்சங்களும் சித்தரிப்புகளும் மானுட முன்னோர்களின் வாழ்வியல் உன்னதங்கள் மற்றும் நாகரிகத்தை குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது.

Hiroki Ogawa

வீரமும் செழுமையும்

வீரமும் செழுமையும்

இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் பாலுணர்வு சார் அம்சங்களை பிரதிபலிப்பதாக ஒரு புரிதல் நிலவினாலும் உண்மையில் அவ்வகை சிற்பங்கள் முக்கியமான ஹிந்துக்கடவுளர்களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களின் ஒரு அலங்கார படைப்பு அம்சங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Hiroki Ogawa

 கற்சிலையிலும் காதல் கலை

கற்சிலையிலும் காதல் கலை

இங்குள்ள கோயில்களின் உருவாக்கமும் வடிவமைப்பும் அதி உன்னத பொறியியல் நுணுக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளன.

Hiroki Ogawa

 அறத்தின் அடையாளம்

அறத்தின் அடையாளம்

கஜுராஹோ என்றாலே காமக்கலை சிற்பங்கள் எனும் தவறான கருத்து அல்லது புரிதல் சில போஸ்ட்கார்ட் புகைப்படங்கள் மற்றும் தனித்து எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மூலமாக பரவி வந்திருக்கிறது.

Hiroki Ogawa

கஜூராஹோ பிரம்மாண்ட கோயில்கள்:

கஜூராஹோ பிரம்மாண்ட கோயில்கள்:


உண்மையில் கஜுராஹா வரலாற்று ஸ்தலத்தை மானுட நாகரிகத்தின் ஒரு உன்னதமான ‘ஆவண ஸ்தலம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்.

CR Pushpa

 சமணக் கோயில்கள்

சமணக் கோயில்கள்

மத்திய இந்தியாவில் சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் செழித்தோங்கிய இந்து மன்னர் மரபின் வீரத்தையும் அறத்தையும், அக்காலத்தே வாழ்ந்த ஒப்பற்ற கலைஞர்களின் அறிவையும் கலாரசனையையும் கைத்திறனையும் புலப்படுத்துவதாக உள்ளன.

CR Pushpa

தெற்கு கோயில்கள்

தெற்கு கோயில்கள்


அதுமட்டுமல்லாமல் மானுடத்தில் காமம் ஒரு அங்கமே எனும் அறிவியல் பூர்வமான கருத்தையும் இங்குள்ள சிற்பங்கள் எடுத்துரைக்கின்றன.

CR Pushpa

இயற்கையிலேயே உருவானதா?

இயற்கையிலேயே உருவானதா?


கற்சிற்பங்களில் காணப்படும் காதற்கலை சித்தரிப்புகளில் இயற்கையின் ஆதி அம்சமான நிர்வாணம் மட்டுமன்றி புராதன இந்திய நாகரிகத்தின் உளவியல் பார்வையும் பொதிக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

CR Pushpa

ஏலியன் லெவல்

ஏலியன் லெவல்


இந்தியாவில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ள இந்த கஜூராஹோ ஸ்தலத்திற்கு கலாரசனை கொண்ட இந்தியர் யாவரும் வாழ்நாளில் ஒரு முறை விஜயம் செய்வது அவசியம்.

CR Pushpa

 சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்!

சுற்றியுள்ள சுற்றுலா அம்சங்கள்!

இந்திய மண்ணில் புராதன நாகரிக செழுமை குறித்த புரிதலுக்கு ஒரு முறை கஜுராஹோவுக்கு பயணம் செய்தே ஆக வேண்டும்.

CR Pushpa

விழாக்கள்

விழாக்கள்

கல்லறைகளுக்கு கிடைத்திட்ட அங்கீகாரம் அந்நாளைய மன்னர்கள் அறத்தின் அடையாளமாய் கருதி நிர்மாணித்திருக்கும் அற்புத கோயில் படைப்புகளுக்கு ஏன் கிட்டவில்லை என்பது விடை தேடவேண்டிய ஒரு கேள்வி.

CR Pushpa

கலைத்திறனுக்கு மிக சிறந்த உதாரணங்களாக

கலைத்திறனுக்கு மிக சிறந்த உதாரணங்களாக

மேற்குத்தொகுதி கோயில்களில் முழுக்க முழுக்க ஹிந்து தெய்வங்களுக்கான கோயில்கள் நிரம்பியுள்ளன. இவை கஜூராஹோ ஸ்தலத்தின் மஹோன்னத கலைத்திறனுக்கு மிக சிறந்த உதாரணங்களாக காட்சியளிக்கின்றன.

Ravi Agrawal

சவுசாத் யோகினி கோயில்

சவுசாத் யோகினி கோயில்

885ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலானது, இந்து கோயிலாக கருதப்படுகிறது. இந்த கோயிலின் மூல தெய்வம் தேவி மற்றும் 64 யோகினியர்கள். இதில் தேவியுடன் சேர்த்து 65 சிலைகள் இருந்ததாக தெரிகிறது. மேலும் இந்த கோயில் கட்டமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. தென்னகத்து அம்மன் கோயில்கள் போலில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Arnold Betten

லால்கன் மகாதேவா

லால்கன் மகாதேவா


சிவன் கோயிலான இது 900ம் ஆண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மிகவும் அழகாகவும் பழமையானதாகவும் காட்சிதரும் இந்த கோயில் சிறப்பானதாக இருக்கிறது.

Dennis Jarvis

பிரம்ம கோயில்

பிரம்ம கோயில்


925 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பிரம்ம கோயில் என்று அழைக்கப்பட்டாலும், இதற்குள் இருப்பவர் விஷ்ணு. ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. ஒருவேளை முன்னர் இங்கு பிரம்ம சிலை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

CR Pushpa -

லட்சுமன கோயில்

லட்சுமன கோயில்

இந்து கோயிலான இது வைகுண்ட விஷ்ணுவை மூலவராகக் கொண்டுள்ளது. மிகவும் அழகான முறையில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dennis Jarvis

வராஹ கோயில்

வராஹ கோயில்


950ம் ஆண்டு கட்டப்பட்ட வராஹ கோயில்

Dennis Jarvis

பர்ஸ்வனதா கோயில்

பர்ஸ்வனதா கோயில்


954ம் ஆண்டு கட்டப்பட்ட கோயில்

Jean-Pierre Dalbéra

கந்தாய் கோயில்

கந்தாய் கோயில்

கந்தாய் கோயில்

Patty Ho

மகிசாசூரமர்தினி கோயில்

மகிசாசூரமர்தினி கோயில்

மகிசாசூரமர்தினி கோயில்

Rajenver

விஸ்வநாத கோயில்

விஸ்வநாத கோயில்

விஸ்வநாத கோயில்

Dennis Jarvis

மடங்கேஸ்வர் கோயில்

மடங்கேஸ்வர் கோயில்

மடங்கேஸ்வர் கோயில்

Dennis Jarvis

விஷ்ணு கருட கோயில்

விஷ்ணு கருட கோயில்

விஷ்ணு கருட கோயில்

கணேச கோயில்

கணேச கோயில்

கணேச கோயில்

ஜகதாம்பி கோயில்

ஜகதாம்பி கோயில்

ஜகதாம்பி கோயில்

Marcin Białek

சித்ரகுப்தா கோயில்

சித்ரகுப்தா கோயில்

சித்ரகுப்தா கோயில்

Dennis Jarvis

ஆதிநாத் கோயில்

ஆதிநாத் கோயில்

ஆதிநாத் கோயில்

Marcin Białek

சாந்திநாத கோயில்

சாந்திநாத கோயில்

சாந்திநாத கோயில்

BluesyPete

கண்டரியா மகாதேவ கோயில்

கண்டரியா மகாதேவ கோயில்

கண்டரியா மகாதேவ கோயில்

Paul Mannix -

வாமன கோயில்

வாமன கோயில்

வாமன கோயில்

Sfu

ஜவேரி கோயில்

ஜவேரி கோயில்

ஜவேரி கோயில்

Sfu

சதுர்புஜா கோயில்

சதுர்புஜா கோயில்

சதுர்புஜா கோயில்

Sfu

துலதேவா கோயில்

துலதேவா கோயில்

துலதேவா கோயில்
Marcin Białek

கஜூராஹோ கிழக்குத்தொகுதி கோயில்

கஜூராஹோ கிழக்குத்தொகுதி கோயில்களில் ஹிந்து கோயில்களும் சமணக்கோயில்களும் அடங்கியுள்ளன. இவை மேற்குத்தொகுதி கோயில்களைப்போன்று நுணுக்கமான கலையம்சங்கள் நிரம்பியதாக காணப்படாவிட்டாலும் அவற்றிற்கே உரிய தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றன. இங்குள்ள பர்ஷவநாதர் கோயில் இருப்பதில் பெரியதான ஜைன கோயிலாகும்.

கஜூராஹோ தெற்குத்தொகுதி

கஜூராஹோ தெற்குத்தொகுதியில் இரண்டு கோயில்கள் மட்டுமே அடங்கியுள்ளன. துலாதேவ் கோயில் மற்றும் சதுர்புஜ் கோயில் ஆகியவையே இவை. ஒப்பீட்டு நோக்கில் மற்ற கஜூராஹோ கோயில்களின் கலையம்சங்களை இந்த தெற்குத்தொகுதி கோயில்களில் காண முடியவில்லை.

சிற்பங்களின் சிறப்பம்சம்


கஜுராஹோ சிற்பங்களின் சிறப்பம்சம் அவற்றின் பரிமாணங்கள் மற்றும் நுணுக்கங்கள் என்று சொல்லலாம். அடிப்படையில் அக்காலத்திய இந்திய கோயிற்கலை மரபுகளை ஒட்டி இங்குள்ள கோயில்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் வடிவமைப்பு ரீதியில் ஒரு கூர்மையான துல்லியமும் தனித்தன்மையும் இங்குள்ள ஒவ்வொரு கோயில்களின் உருவாக்கத்திலும் பிரதிபலிக்கின்றன.

மிகச் சிறந்த உருவத்துடன்

மனித முயற்சியா அல்லது இயற்கையின் படைப்பா என்று ஒரு கணம் மலைக்க வைக்கும் மிகச் சிறந்த உருவத்துடன் இங்குள்ள கோயில்கள் காட்சியளிக்கின்றன.

ஒரு சிறு பிசிறும் இல்லாமல்

அதிலும் குறிப்பாக மனித உடலின் திரட்சி, பருமன் வளைவுகள் போன்றவையும் ஏனைய உருவங்களின் அசல் பொலிவும் - கருங்கல்லில் ஒரு சிறு பிசிறும் இல்லாமல் வடிக்கப்பட்டிருக்கும் நுணுக்கம் உலகில் வேறெங்குமே காண முடியாத அற்புதமாகும்.

மனித உடல்

புவியின் மேம்பட்ட உயிர்வகையான மனித உடல் இங்கு அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மிகைப்படுத்தல் என்பது சிற்பங்களில் காணப்பட்டாலும் அவற்றின் மெருகு ஒன்றே மயக்க வைக்க போதுமானது.

அற்புத வரலாறு

இப்படி எல்லாவகையிலும் தனித்துவத்துடன் ஜொலிக்கும் இந்த அற்புத வரலாற்று தலத்துக்கு பெருமளவில். வெளிநாட்டவர் பயணம் செய்வதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

காதல் காமக்கலை காட்சிகள்

பொதுவாக கஜூராஹோ கோயில்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் காதல் காமக்கலை காட்சிகள் ஒரு முக்கியமான சுற்றுலா ஈர்ப்பு அம்சமாக விளங்குகின்றன. சௌஸத் யோகினி கோயில், ஜவரி கோயில், தேவி ஜகதாம்பா கோயில், விஸ்வநாத கோயில் , கண்டரிய மஹாதேவா கோயில், லஷ்மணா கோயிள் உள்ளிட்ட அனேக கோயில்கள் இந்த ஸ்தலத்தில் அமைந்துள்ளன. .

நடனத்திருவிழா

கஜூராஹோ நடனத்திருவிழா எனும் சுற்றுலா நிகழ்ச்சியும் ஏராளமான எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகளை இங்கு ஈர்க்கிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 25ம் நாள் தொடங்கி மார்ச் 2ம் நாள் வரை இந்த திருவிழா நடத்தப்படுகிறது. ஒரு வார காலம் நீடிக்கும் இந்த திருவிழாக்காலத்தின்போது இந்தியா முழுவதிலிருந்தும் நடனம் மற்றும் நிகழ்த்துகலை கலைஞர்கள் வருகை தருகின்றனர்.

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

கஜூராஹோவின் கலை

கஜூராஹோவின் அற்புதக் கலைப் படைப்புகள் 50

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X