Search
  • Follow NativePlanet
Share
» »மக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்த ஆயிரத்தெண் விநாயகர்..!

மக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்த ஆயிரத்தெண் விநாயகர்..!

விநாயகர் மக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்ததும், இன்றும் பக்தனாக அமர்ந்து அருள்பாலிக்கும் திருத்தலம் குறித்து அறிந்துகொள்ள பயணிக்கலாம் வாங்க.

விநாயகர் என்றாலே நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பமான கடவுளாகத்தான் இருக்கும். மிகவும் எளிமையான கடவுளாகவும், அரசமரத்தடி, தெருமுக்கு, குளக்கரை என எங்கும் அமர்ந்து நம்முடன் ஒருவராக இருப்பவராகவும் விநாகயர் உள்ளார். மண், சாணம், மஞ்சள் ஆகிய எளிய பொருட்களிலும் விநாயகர் மக்களுடனேயே உலா வருகிறார். அதுவேன், எந்தக் காரியமும் விநாயகரை வழிபட்டுத் தானே தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்னர். இத்தகைய விநாயகர் மக்களின் துயர் துடைக்க தானே பக்தனாக வந்ததும், இன்றும் பக்தனாக அமர்ந்து அருள்பாலிக்கும் திருத்தலம் குறித்து அறிந்துகொள்ள பயணிக்கலாம் வாங்க.

தலவரலாறு

தலவரலாறு

கொற்கை பாண்டிய மன்னருக்கு குழந்தை செல்வம் இல்லை. அவர் ஒரு ஜோதிடரை கலந்தாலோசித்தார் ஜோதிடரும் மன்னரின் ஜாதகத்தை விரிவாக அலசி ஆராய்ந்து மன்னரிடம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று ஆயிரத்தெட்டு நபர்களுக்கு அன்னதானம் செய்தால் குழந்தைபேறு கிடைக்கும் என்று அறிவுருத்தினார். மன்னரும் ஆயிரத்தேழு நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்த நிலையில் ஒருவர் மட்டும் குறைவாக வந்திருந்ததை கண்டு மனமமுடைந்து நின்றார் மன்னர். அப்போது விநாயகரே பண்டிதர் உருவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து மன்னரளித்த விருந்தில் கலந்துகொண்டார். மன்னருக்கும் புத்திர பாக்கியம் கிடைத்தது. எனவே இத்திருக்கோவிலுக்கு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவில் என்று பெயர் உண்டானது.

Ssriram mt

புராதண சிறப்பு

புராதண சிறப்பு


ஆண்டாள் கவிராயர் என்பவர், ஆறுமுகமங்கலத்துக்கு சென்ற போது உண்பதற்கு உணவு கிடைக்கவில்லை. கடும் பசியில் வாடிய கவிராயர் ஆறுமுகமங்கலத்திற்கு யார் போனாலும் சோறு கொண்டு போங்கள் சொன்னேன் சொன்னேன் என பாடினார். இப்பழிச் சொல்லை நீக்கும் பொருட்டு இத்திருக்கோவலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் கோவிலுக்கு வருவோருக்கு அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

BishkekRocks

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்


ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் கணேச பஞ்சரத்தினம் பாடிய பின் திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரம் பாடியே நோய் நீங்கப்பெற்றார் என்பது இக்கோவிலின் தல புராணமாக உள்ளது.

Jayabharat

கல்வெட்டு சிறப்பு

கல்வெட்டு சிறப்பு


ஆயிரத்தெண் விநாயகர் கோவிலின் மகா மண்டபத்தில் இறைவன் திருநாமம் ஏற்பட்டதற்கான செய்திகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், இக்கோவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதும், அமைப்பு குறித்த விபரமும் கல்வெட்டில் வட்டெழுத்து வடிவில் காணப்படுகிறது.

Zoetrope2012

வரம் தரும் ஆயிரத்தெண் விநாயகர்

வரம் தரும் ஆயிரத்தெண் விநாயகர்


திருமணமாகாதவர்கள் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு வந்து கல்யாணசுந்தரி அம்மனை தரிசித்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது தொன்நம்பிக்கை. எனவே, இத்திருக்கோவிலின் கல்யாணசுந்தரி அம்மனுக்கு மஞ்சள் பட்டுப்புடவை எடுத்து சாத்தி வேண்டுவது இன்றும் நடைபெற்று வருகிறது.

YVSREDDY

வழிபாடு

வழிபாடு

கல்வில் கவனக்குறைவு, வழக்குகள் இழுபறி, பணப் பிரச்சனைகள் உள்ளிட்டவை தீர்ந்திட பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். வேண்டுதல் நிறைவேறிய பின்பு விநாயருக்கு நூற்றியெட்டு அல்லது ஆயிரத்தெட்டு தேங்காய்கள் உடைத்து வழிபடுகிறார்கள். நூற்றியெட்டு அல்லது ஆயிரத்தெட்டு தீப வழிபாடும் நடத்துவது வழக்கம்.

Malyadri

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் முக்காணி என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது ஆயிரத்தெண் விநாயகர் ஆலயம். ஆரம்ப காலத்தில் ஆயிரத்தெண் விநாயகரை குளக்கரையில் வைத்து வழிபட்டு வந்தனர். பிறகு காளஹஸ்தீஸ்வரர், கல்யாணி அம்மன் சந்நதிகளுடன் மகாமண்டபம் கட்டப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் பயணித்தால் சாயபுரம் அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம். திருச்செந்தூரில் இருந்து இக்கோவில் 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X