Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..!

ஸ்ரீரங்கத்தை விட பெரிய பெருமாள் சிலை இதுதானாம்... மறைக்கப்பட்ட உண்மை..!

ஸ்ரீரங்கநாதரின் பெருமையைக் கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம வித்தை உள்ளிட்ட பல்வேறு நூல்களில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரங்கர் வருகைக்கு முன்னதாகவே தோன்றிய சந்திர புஷ்கரணி என்னும் தீர்த்தம் புண்ணிய தீர்த்தமாக இத்தலத்தில் விளங்குகிறது. 156 ஏக்கர் பரப்பளவில் உலகிலேயே 7 பிரகாரங்களைக் கொண்டதும், 21 கோபுரங்கள், 9 தீர்த்தங்களையும் உள்ளடக்கிய புராதன ஆலயங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் ஸ்ரீ ரங்க ரங்கநாதர் வழிபாட்டில் உள்ளார்.

எது பெரியது ?

எது பெரியது ?

நாட்டில் பெரிய பெருமாள் சிலை திருச்சியில் உள்ள ஸ்ரீரங்க ரங்கநாத சிலை என்றே நாம் அறிவோம். இத்தலத்தில் மிகப்பிரம்மாண்டமாக 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் இது "பூலோக வைகுண்டம்" என்றும் அழைக்கப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் தலமாகும். மதுரகவி ஆழ்வாரைத் தவிர மற்ற 11 ஆழ்வார்களால் 247 பாசுரங்களால் ஸ்ரீ அரங்கனைப் போற்றி மங்களாசாசனம் செய்த தலமாகவும் இது விளங்குகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர், கம்பர் இராமாயணத்தை இத்தலத்தில் தான் அரங்கேற்றினார் என்பது மேலும் சிறப்புக்குரியது.

Nittavinoda

மறைக்கப்பட்ட உன்மை

மறைக்கப்பட்ட உன்மை

மேற்குறிப்பிட்ட தகவல்களை எல்லாம் கொண்டு பார்க்கையில் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதப் பெருமாளே நாட்டில் பெரிய பெருமாள் சிலை என நாம் எண்ணிவிடுகிறோம். ஆனால், அது உன்மையில்லை. தமிழகத்திலேயே மிகமிகப் பெரிய பெருமாளின் சிலை ஆதிதிருவங்கத்தில் தான் உள்ளது.

Melanie M

ஆதிதிருவரங்கம்

ஆதிதிருவரங்கம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவில். திராவிட கட்டிடக் கலையின் மூலம் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படும் இத்தலத்தின் ஒரு பகுதியாக விஜயநகர அரசாங்கம் மூலம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தானிய சேமிப்பு கொள்கலனும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Ssriram mt

தல சிறப்பு

தல சிறப்பு

நாட்டிலேயே பெரிய பெருமாளின் சிலை ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் உள்ளது என பரவலாக நம்பப்பட்டு வரும் நிலையில், அதனைக் காட்டிலும் மிகமிகப் பெரிய பெருமாள் சிலை இத்தலத்தில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பாக உள்ளது. இதனாலேயே உள்ளூர் பக்தர்களால் பெரிய பெருமாள் என இக்கடவுள் அழைக்கப்படுகிறார்.

Ssriram mt

ஏழை ஏதலன்

ஏழை ஏதலன்

வைணவக் கடவுளான பெருமாள் குறித்து பாடும் ஆழ்வார்கள் கூட இத்தலத்திற்கு வந்து மங்களாசாசனம் செய்யவில்லை என கருதி வந்த நிலையில், திருமங்கையாழ்வார் தனது திருமொழியில் வொருவாதாள் என தொடங்கும் 10 பாசுரங்களிலும், ஏழை ஏதலன் என தொடங்கும் 10 பாசுரங்களிலும் இங்குள்ள பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். இதற்கான சான்றாக கோவில் கல்வெட்டுக்களிலும் பாசுரங்களிலும் சான்றுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Ssriram mt

கோவில் வரலாறு

கோவில் வரலாறு

அழகு மிகுந்த பெண்களை நாம் வர்ணிப்பதே அந்த சந்திரனைப் போன்ற முகம் கொண்டவள் என்று தான். அத்தனை அழகு மிக்கது சந்திரனும், சந்திரக் கடவுளும். ஒருநாள் சந்திரன் தனது மனைவியில் சாபத்தினால் அழகும், கலையும் இழந்து காணப்பட்டார். இதனைக் கண்ட தேவர்கள், சாபத்தில் இருந்து விடுபட இத்தல இறைவனைப் பிரார்த்திக்குமாறு அறிவுரை வழங்கினர். சந்திரனும், இப்பெருமாளை வணங்க, கண்முன் தோன்றிய பெருமாள், சாபம் நீக்கினார். இத்தலத்தின் தென்கிழக்கே உள்ள தீர்த்தத்தில் நீராடி சந்திரன் தவம் செய்ததாலேயே இத்தீர்த்தத்திற்குச் சந்திர புஷ்கரணி என்ற பெயரும் உண்டாகியது. பின், தேவர்களும் இந்த இடத்தில் எப்பொழுதும் பெருமாள் எழுந்தருளியிருக்க வேண்டும் என தவமிருக்க, தேவர்களின் வேண்டுகளின்படி இத்தலத்தில் ரங்கநாதர் உருவில் இறைவன் அருள்பாலித்து வருகிறார்.

Ssriram mt

வரமளிக்கும் பெருமாள்

வரமளிக்கும் பெருமாள்

முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்டுவந்த சுரதகீர்த்தி என்னும் மன்னன் குழந்தை பாக்கியம் இன்றி வருத்தத்தில் இருந்தார். எத்தனையோ செல்வங்கள் இருந்தும் புத்திர பாக்கியம் இன்றி இருந்த அவர் இத்தலத்து இறைவனை வேண்டி வணங்க, பெருமாளின் அருளால் 4 குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தார். இன்றும் கூட குழந்தை பாக்கியம் இன்றி தவிப்போர் ஆதிதிருவரங்கம் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Lomita

திருவிழா

திருவிழா

பெருமாள் என்றாலே வைகுண்டம் தானே. அதற்கு ஏற்றவாறே வைகுண்ட ஏகாதசியன்று இத்தலத்தில் பக்தர்கள் திரண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். பெருமாளுக்கு உகந்த நாட்களான புரட்டாசி சனிக்கிழமைகளிலும், பவுர்ணமி அன்றும் மூலவருக்கும், ரங்க நாயகி அம்மையாருக்கும் சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.

Ms Sarah Welch

நடை திறப்பு

நடை திறப்பு

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில் நடை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இதன் இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் உச்சி பூஜை மிகவும் பிரசிதிபெற்றது.

Ssriram mt

வழிபாடு

வழிபாடு

சந்திரனுக்கே அழகும், கலையும் வரமளித்த இத்தல பெருமாளை வணங்குவதன் மூலம் கல்வியிலும், கலையிலும் சிறந்து விளங்க முடியும் என்பது இத்தல நம்பிக்கையாக உள்ளது. நடனம் உள்ளிட்ட கலைத்துறையில் இருப்போர் அதிகளவில் இங்கு பயணிப்பது வழக்கம். இவ்வாறு வேண்டுவோர் பெருமாளுக்கும், ரங்கநாயகி அம்மையாருக்கும் புது வஸ்திரம் சாற்றி, துளசி மாலையிட்டு அர்ச்சனை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Ssriram mt

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம் பெருமாள் கோவில். விழுப்புரம்- மாம்பழப்பட்டு- திருக்கோவிலூர் தேசிய நெடுஞ்சாலையில் குப்பம், மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூரைக் கடந்தால் ஜம்பை முன்னதாக உள்ள இத்தலத்தை அடையலாம். திருவண்ணாமலையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, உளுந்தூர்பேட்டை என பிற பகுதிகளில் இருந்தும் பெரிய பெருமாள் கோவிலை சென்றடையப் பேருந்து வசதிகள் எளிய முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more