Search
  • Follow NativePlanet
Share
» »மகாராஸ்டிராவில் புதைந்து கிடக்கும் மர்மக் குகைகள்..! தேடிப்போலாமா..!

மகாராஸ்டிராவில் புதைந்து கிடக்கும் மர்மக் குகைகள்..! தேடிப்போலாமா..!

வரலாற்று ஆவணங்களும், போர்க் கருவிகளும் புதையல்களாக இன்றும் மகாராஸ்டிராவில் உள்ள குகைகளில் புந்துகிடைப்பதாக நம்பப்படுகிறது. இம்மாநிலத்தில் புகழ்பெற்ற மர்மம் நிறைந்த குகைகளைத் தேடிச் செல்லாமா?

மகாராஸ்டிரா என்றாலே முதலில் நம் நினைவில் தோன்றுவது வரலாற்று சின்னங்கள் தான். மகாராஷ்டிராவின் வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால் அது கிபி 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்மை அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில் தான் மகாராஷ்டிராவின் முதல் புத்த குகைக் கோவில்கள் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. எனினும் மகாராஷ்டிராவை பற்றிய சான்றுகள், 7-ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த சீனப் பயணியின் குறிப்புகளில்தான் உள்ளன. இப்பகுதியை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்தாலும், அவர்களின் செல்வங்களும், பல வரலாற்று ஆவணங்களும், போர்க் கருவிகளும் புதையல்களாக இன்றும் மகாராஸ்டிராவில் உள்ள குகைகளில் புந்துகிடைப்பதாக நம்பப்படுகிறது. வாருங்கள், இம்மாநிலத்தில் புகழ்பெற்ற மர்மம் நிறைந்த குகைகளைத் தேடிச் செல்லாம்.

ஜுன்னர் குகைகள்

ஜுன்னர் குகைகள்


மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் அமைந்துள்ளது ஜுன்னர் குகைகள். இப்பகுதியில் பிரபலமான சுற்றுலாத் தலமாக அறியப்படும் இக்குகை இரண்டாம் நூற்றாண்டு, மற்றும் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவையாகும். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை ஆராய ஆய்வாலர்கள் அதிகளவில் இங்கே பயணிப்பது வழக்கம். ஜுன்னர் குகைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மன்மோடி குகைகள், கணேஷ் லேனா குகைகள் மற்றும் துல்ஜா குகைகள் ஆகும். இவற்றில் மன்மோடி குகைகள் இப்பெயரிலேயே அழைக்கப்படும் மலையில் உள்ளன. இந்த குகையில் உள்ள கட்டிடக்கலை வேலைப்பாடுகளும் கலையம்சங்களும் மிகப் பிரசித்தி பெற்றுள்ளன. வட்டவடிவ குமிழ்மாடக் கூரையுடன் கூடிய ஒரு சைத்யா சபைக் கூடத்தைக் கொண்டுள்ள துல்ஜா லேனா குகைகளும் குறிப்பிடத்தக்க புகழைப் பெற்றுள்ளன. கணேஷ் லேனா குகைகள் ஜுன்னரிலிருந்து தெற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இங்கு பல விஹாரங்களும், சன்னதிகளும் காணப்படுகின்றன. அவற்றுள் ஆறாவது சைத்யா குகை மற்றும் கணேஷ் லேனா குகை இரண்டும் மிக பிரசித்தமாக அறியப்படுகின்றன.

Niemru

கார்லா மற்றும் பாஜா குகைகள்

கார்லா மற்றும் பாஜா குகைகள்


கண்டாலாகண்டாலா மலைப் பிரதேசத்தில் பிரபலமான சுற்றுலா அம்சமாக உள்ளது கார்லா மற்றும் பாஜா குகைகள். இந்த புராதனச்சின்னங்கள் இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை ஆகும். மிகப் பெரிய பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இத்தலம் வரலாற்று ஆய்வாலர்கள் மத்தியில் மிகவும் பிரசிதிபெற்றது.

Anandajoti

பிராமணிய குகைக் கோவில்கள்

பிராமணிய குகைக் கோவில்கள்


எல்லோராவில் அமைந்துள்ள பிராமணிய குகைக் கோவில் குகை ராவன் கி கை என்றும் அழைக்கப்படுகிறது. இக்குகைக்கோவிலின் நடைபாதை சதுர வடிவில் மக்கள் வலம் வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் சுவர்களில் வைணவ நம்பிக்கை சார்ந்த உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதேப்போல் மற்ற சுவர்களில் பெண் தெய்வங்களான கஜலட்சுமி, துர்க்கை அம்மனின் உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு மிகப்பெரிய முற்றத்தையும் நீங்கள் காணலாம். இந்த முற்றத்திலிருந்து 4 சுரங்கப்பாதைகள் இந்து குகைகளுக்கு செல்கின்றன. அதோடு முற்றத்தின் நடுவே சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது.

Ms Sarah Welch

மச்சிந்திரநாத் குகை

மச்சிந்திரநாத் குகை


மச்சிந்திரநாத் குகை என்றழைக்கப்படும் இந்த குகை மச்சிந்திரநாத் எனும் முனிவரின் பெயரால் இப்பெயரை பெற்றுள்ளது. இந்த முனிவர் தோரண்மாலில் அமைந்துள்ள இக்குகையில் தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. தோரண்மால் மலைவாசஸ்தலத்திலுள்ள இந்தக் குகை இயற்கையாகவே உருவான குகையாகும். இதற்கு அருகாமையிலேயே மச்சிந்திரநாத் கோவில் மற்றும் மார்க்கண்டேய ரிஷி மலைக்காட்சி தளம் போன்றவையும் அமைந்துள்ளன.

KuwarOnline

புத்த குகைக் கோவில்

புத்த குகைக் கோவில்


எல்லோராவில் புத்தரின் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்தக் குகைக் கோவில், நீண்டு செல்லும் படிக்கட்டுகள் முடியும் இடத்தில் உள்ளது. இங்கு தனியாக உள்ள மண்டபம், புத்தரின் முடிவடையாத சிற்பங்களின் காட்சிக் கூடமாக இருந்து வருகிறது. இங்கே காணப்படும் செல்வக் கடவுள் பஞ்சிகா மற்றும் செழுமையின் பெண் தெய்வமான ஹரிதி உள்ளிட்ட கடவுளர்களின் சிலைகள் பெரிதாகவும், கம்பீரமாகவும் காட்சியளிக்கின்றன. இத்தலத்தில் புத்தர் அமர்ந்திருப்பது போல் காணப்படும் சிற்பம் ஒன்று முடிக்கப்படாத நிலையில் உள்ளது. அதோடு சிறிய பூவணி வேலைகளாலும், குறியீடுகளாலும் இந்த இடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த குகை இப்போது சிதைந்த நிலையிலேயே காணப்படுகிறது. 117 அடி ஆழமும், 59 அடி அகலமும் கொண்ட இக்குகையில் புத்த துறவிகளுக்காக 20 அறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Freakyyash

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X