Search
  • Follow NativePlanet
Share
» »சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..!

சத்தீஸ்கரில் தனித்து பெருமைபெற்ற டோங்கார்கர் மலைக் கோவில்..!

பழமையான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சான்றுகள் பல கிடைக்கும் பகுதிகளில் பிரசிதிபெற்ற ஒன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள டோங்கார்கர் மலைக் கோவில் குறித்து தெரியுமா ?

நம்நாட்டில் பழமையான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் சான்றுகள் பல கிடைக்கும் பகுதிகளில் பிரசிதிபெற்ற ஒன்று சத்தீஸ்கர் மாநிலம். இயற்கை எழில் அம்சங்களைப் பொறுத்தவரை இம்மாநிலத்தில் இல்லாததே இல்லை என்றுதான் கூற வேண்டும். அத்தனையுடத இங்கே நிறைந்து காணப்படுகின்றன. காட்டுயிர், அடர் வனப்பகுதி, மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை ரசிகர்களை ஈர்க்கும் சுற்றுலாத் தலங்கள் சத்துஸ்கர் தன்னுள் கொண்டுள்ளது. இங்குள்ள சில முக்கியமான நீர்வீழ்ச்சிகளாக சிதிரகொடே நீர்வீழ்ச்சி, திரத்கர் நீர்வீழ்ச்சி போன்றவற்றை சொல்லலாம். சரி இவையெல்லாம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் பகுதிகள். கூட்ட நெரிசல் அற்ற, அதேசமயம் அனைத்து விதமான காட்சிகளையும் கொண்ட சுற்றுலாத் தலம் இங்கே எது என்று கேட்டால் அதற்கு டோங்கார்கர், ராஜ்நாந்த்காவ்ன் மலைக் கோவிலைத் தான் சொல்ல வேண்டும். அப்படி அங்கே என்ன இருக்கு என பார்க்கலாம் வாங்க.

டோங்கார்கர்

டோங்கார்கர்


மா பம்லேஷ்வரி எனும் புகழ் பெற்ற கோவில் அமைந்திருக்கும் தலமான டோங்கார்கர் அதன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளுக்காகவும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரபலமாக விளங்குகிறது. இது ராஜ்நாந்த்காவ்ன் நகரத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலும், துர்க் நகரிலிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மலைகள் மற்றும் குளங்கள் போன்ற அற்புதமான இயற்கை அம்சங்கள் நிரம்பியுள்ள இந்த டோங்கார்கர் பகுதிக்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகளுக்கு ஊர் திரும்பவே மனம் வராது.

Dvellakat

மா பம்லேஷ்வரி தேவி கோவில்

மா பம்லேஷ்வரி தேவி கோவில்


டோங்கார்கர்வில் அமைந்துள்ள மா பம்லேஷ்வரி தேவி கோவில் ஒரு மலையுச்சியில் 1600 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலைப்பற்றி கூறப்பட்டு வரும் புராணக்கதைகள் இந்து ஆன்மீக பயணிகள் மத்தியில் பரவலாக அறிய வைத்துள்ளன. மலையின் உச்சியில் உள்ள கோவில் படி பம்லேஷ்வரி என்றும் அடிவாரத்தில் உள்ள கோவில் சோட்டி பம்லேஷ்வரி கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன. நவராத்திரி திருநாளின்போது இந்த கோவில் தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் பயணிப்பர். சிவன் கோவில் ஒன்றும் அனுமான் கோவில் ஒன்றும் இந்த மா பம்லேஷ்வரி கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலே உள்ள கோவிலுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கயிற்றுக்கார் இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாகும். சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ஒரே ரோப்கார் இது என்பது மேலும் சிறப்பூட்டக்கூடியது.

Rksande

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


டோங்கார்கர் தலத்திலிருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் ராய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. டோங்கார்கர் நகரில் பிரத்தியேக ரயில் நிலையமும் உள்ளது. இருப்பினும் பேருந்துகள் மற்றும் தனியார் டாக்சிகள் என்று சாலைவழி போக்குவரத்து வசதிகளே இங்கு அதிகமாக பயணிகளால் பயன்படுத்தப்படுகின்றன. கல்கத்தா-மும்பை தேசிய நெடுஞ்சாலையான NH6 டோங்கார்கர் வழியாக செல்கிறது.

Ambuj.kulshresth

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்


பிர்க்கா கிராமம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜ்நாந்த்காவ்ன் மாவட்டத்தில் உள்ள இந்த பிர்க்கா கிராமம் ஒரு முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலமாகும். கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரு சிவன் கோவில் இந்த கிராமத்தில் உள்ளது. இக்கிராமம் ரம்மியமான இயற்கைக் காட்சிகளுடன் மலைகளால் சூழப்பட்ட தலமாகும். புராதனக் கோவிலான இது சிதிலமடைந்து காணப்பட்டாலும் இதன் கருவறை மற்றும் மண்டப அமைப்புகள் நல்ல நிலையில் காணப்படுகின்றன. சுமுர் 10 முதல் 11-ஆம் நூற்றாண்டுகளில் நாகவம்ஷி அரசர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோவிலில் கட்டிடக்கலையை இன்றும் கண்டு ரசிக்கலாம்.

Sushil Kumar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X