Search
  • Follow NativePlanet
Share
» »பிச்சுக்கிட்டு ஓடும் காவிரி ஆற்றின் இந்த நீர்வீழ்ச்சி கேள்விப்பட்டிருக்கீங்களா ?

பிச்சுக்கிட்டு ஓடும் காவிரி ஆற்றின் இந்த நீர்வீழ்ச்சி கேள்விப்பட்டிருக்கீங்களா ?

காவிரி நீர் வழிந்தோடும் வழியில் பல அம்சங்கள் இருந்தாலும் குறிப்பிட்டு ஒரு நீர்வீழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக கொட்டித் தீர்க்கிறது. அதன் அழகைக் காண போகலாம் வாங்க.

எத்தனை எத்தனை போராட்டங்கள், வேண்டுகோள்கள், அதிகாரங்கள் இந்த காவிரி நீரை அதன் வழியில் போக விட. நீங்கள் வேண்டுமானால் சண்டையிட்டுக் கொள்ளுங்கள், நாள் என் வழியில் செல்கிறேன் என்றல்லவா இன்று காவிரி நம் தமிழகத்தில் கரைபுரண்டோடுகிறது. தான் செல்லும் வழியெல்லாம் பசுமையை விதைத்துச் செல்லும் இக்காவிரியின் வழிந்து நெழிந்தோடும் அழகைக் காண தமிழகத்தின் பெரும்பாலான பயணிகள், குறிப்பாக விவசாயிகள் தங்கள் இருகரம் கூப்பி அதனை வரவேற்க, இதன் பிரம்மாண்டத்தைக் காண சுற்றுலாப் பயணிகளும் கூட ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த காவிரி நீர் வழிந்தோடும் வழியில் பல அம்சங்கள் இருந்தாலும் குறிப்பிட்டு ஒரு நீர்வீழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக கொட்டித் தீர்க்கிறது. அதன் அழகைக் காண போகலாம் வாங்க.

உற்சாகத் தீவு

உற்சாகத் தீவு


கர்நாடகாவில் இருந்து ஓடி வரும் காவிரி ஆற்றுப் படுகையை ஒட்டிய ஒரு பகுதி தான் ஷிவனசமுத்ரம். மாண்டியா மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான இது காவிரி ஆற்றில் உள்ள தீவுப் பகுதி ஆகும். ஷிவனசமுத்ரம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்றுள்ளது. உலகில் 100 முக்கியமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.

Nymishanandini

200 அடி உயரத்தில் இருந்து

200 அடி உயரத்தில் இருந்து


பாறைப்படுகைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியே ஓடிவரும் காவிரி ஆறு ஷிவனசமுத்ரத்தில் ககனசுக்கி மற்றும் பரச்சுக்கி எனும் இரண்டு கிளைகளாக பிரிகிறது. இப்படி பிரியும் காவிரி ஆற்றின் இந்த இரண்டு கிளைகளும் வேகத்துடன் ஒரு பெரிய 200 மீட்டர் சிகரத்திலிருந்து நீர்வீழ்ச்சியாய் பாய்கிறது.

Raghavan G

ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி

ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி


ஷிவனசமுத்ராவின் முக்கிய சுற்றுலாக்கவர்ச்சி அம்சமான இந்த பரச்சுக்கி மற்றும் ககனச்சுக்கி என்ற இரட்டை நீர்வீழ்ச்சிகளும் எதிரெதிரில் அமைந்துள்ளன. பரச்சுக்கி நீர்வீழ்ச்சி கிழக்கு பகுதியிலும் ககனச்சுக்கி நீர்வீழ்ச்சி மேற்குப்பகுதியிலும் காணப்படுகின்றன. ஜுலையிலிருந்து அக்டோபர் வரை நிலவும் மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிகளைப்பார்ப்பது சிறந்தது.

Rajeev Ganesh C

கவணம் தேவை

கவணம் தேவை


ககனச்சுக்கி அருவியைவிட பெரியதாக காட்சியளிக்கு பரச்சுக்கி அருவியின் அருகில் மலைப்பாறையில் குறுகலான படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருப்பதை சற்று தொலைவில் இருந்து பார்க்க முடியும். மழையில்லாத காலகட்டத்தில் பரச்சுக்கி அருவிப்பகுதியில் பரிசல் சவாரி மேற்கொள்ள முடியும். தற்போது பருவ மழை பெய்து காவிரி ஆற்றுப் படுகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீர்வீழ்ச்சியை நோக்கி மிக அருகில் செல்வது, குளிப்பது மிகவும் அபாயகரமானது.

Bgajanan

பிலிகிரி ரங்கணா மலைத் தொடர்

பிலிகிரி ரங்கணா மலைத் தொடர்


பிலிகிரி ரங்கணா மலைப்பிரதேசம் மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. பன்முக இயற்கைச் சூழலியலைக் கொண்டுள்ள இந்த பிலிகிரி ரங்கணா மலை தன் பெயரை இங்குள்ள வெண்ணிற மலையில் அமைந்துள்ள ரங்கநாதசுவாமி கோவில் மூலம் பெற்றுள்ளது. இம்மலைத் தொடரில் இருந்து காவரி நீர் வழிந்தோடும் காட்சி அவ்வளவு ரம்மியமாக தெரியும்.

Kalyan Varma

காட்டுயிர் சரணாலயம்

காட்டுயிர் சரணாலயம்


பிலிகிரி ரங்கசுவாமி கோவில் காட்டுயிர் சரணாலயம் சுருக்கமாக பிஆர்டி காட்டுயிர் சரணாலயம் என அழைக்கப்படுகிறது. பிலிகிரி மலைத் தொடரை ஒட்டி அமைந்துள்ள இந்த காட்டுயிர் சரணாலயம் தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்யமங்கலம் காட்டுயிர் சரணாலயத்தையும் இணைக்கிறது. காட்டெருமைகள், கரடி, புள்ளி மான், சாம்பார் மான், சிறுத்தைகள், காட்டுநாய்கள், யானைகள் மற்றும் நான்கு கொம்பு மான் போன்றவை இங்கே அதிகளவில் காணப்படுகின்றது.

Shyamal

சாகச விரும்பிகளுக்காக

சாகச விரும்பிகளுக்காக


பாறையேற்றம், காவேரி, கபிலா ஆறு உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்க, இம்மலைப் பகுதியில் ஏராளமான அம்சங்கள் உள்ளன. இருப்பினும், தற்போது இங்கே பெய்து வரும் மழையினால் முழுஅம்சங்களையும் கண்டு ரசிப்பது சிரமமானது. பாதுகாப்புடனும், வனத்துறையினரின் அனுமதியுடனும் சென்றால் மலையின் பசுமையை ரசிக்க முடியும்.

Shyamal

காவேரி மீன்பிடி முகாம்

காவேரி மீன்பிடி முகாம்


சீறிப்பாய்ந்து செல்லும் காவிரி நதியின் ஊடாக, தெற்கு கர்நாடகாவின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் காவேரி மீன்பிடி முகாம் அமைந்துள்ளது. காவேரி மீன்பிடி முகாம் நம்முடைய அன்றாட வாழ்கையின் அலுப்பையும், வெறுமையையும் நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். பெங்களூரிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில், பெங்களூர்- கொல்லேகலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மந்த்யா மாவட்டத்தில் அமைந்துள்ள இங்கு செல்ல போக்குவரத்து வசதிகள் எளிய முறையில் உள்ளன.

Rockuzz

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X