Search
  • Follow NativePlanet
Share
» »புயல்களால் அழியும் உலகம்! உலகின் முதல் நடராஜர் சிலை நடத்தும் பிரளயம்? உண்மை என்ன?

புயல்களால் அழியும் உலகம்! உலகின் முதல் நடராஜர் சிலை நடத்தும் பிரளயம்? உண்மை என்ன?

இத்தனை நாட்கள் சிதம்பரம் நடராஜர் சிலை தான் முதலும், முதன்மையான நடராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிலை என நாம் நினைத்திருந்தோம். ஆனால், அந்த சிலையை விட உலகிலேயே முதல் நடராஜர் சிலை எங்க இருக்கு தெரியுமா?

இத்தனை நாட்கள் சிதம்பரம் நடராஜர் சிலை தான் முதலும், முதன்மையான நடராஜருக்கு என அர்ப்பணிக்கப்பட்ட சிலை என நாம் நினைத்திருந்தோம். ஆனால், அந்த சிலையெல்லாத்தையும் விட உலகிலேயே முதல் நடராஜர் சிலை எங்க இருக்கு தெரியுமா ? பல நூற்றாண்டுகளைக் கடந்த பெருமை மட்டுமின்றி இன்னும் சில மர்மங்களையும் இந்த நடராஜர் சிலை கொண்டுள்ளது கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது. வாருங்கள், முதன்முதலில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இப்ப எங்க இருக்கு ? எப்படி இருக்கு என பார்க்கலாம்.

தல சிறப்பு

தல சிறப்பு


சுமார் 2000 வருட பாரம்பரியம் கொண்டது நெல்லையப்பர் செப்பறை நடராஜர் திருக்கோவில், இதன் முக்கியமான அம்சமாக, இந்த திருக்கோவிலில் உள்ள சிலையே உலகின் முதல் நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் நடராஜர் சிலை எப்படி உள்ளதோ, அதே போன்று சற்றும் மாறாமல் வடிவமைக்கப்பட்ட சிலைகள் நான்கு உள்ளன. அதில் ஒன்று செப்பறையிலும் மற்றொன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசூழ்ந்த மங்கலம், கருவேல மங்கலம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரி மங்கலம் ஆகியவற்றிலும் இருப்பது வியக்கத்தகுந்ததாகும். உலகை புரட்டிப் போடும் சில விசயங்களை இந்த சிலை குறிப்பால் உணர்த்துகிறதாம்.

Ms Sarah Welch

கோவில் வரலாறு

கோவில் வரலாறு


சிற்பி ஒருவர் சிதம்பரத்தில் இருந்து நடராஜரின் விக்தரமத்தை சுமந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அதன் கனம் தாங்காமல் செப்பறை என்னும் இடத்தில் வைத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தான். சிறிது நேரம் கழித்து கண் திறந்து பார்த்தபோது சிலை காணாமல் போயிருந்தது. இதுகுறித்து, சிற்பி அந்த ஊர் மன்னரான ராமபாண்டினிடம் முறையிட்டதைத் தொடர்ந்து சிலை தேடப்பட்டது. அப்போது, தொலைவில் சலங்கை சத்தம் கேட்டுள்ளது. அங்கே சென்று பார்த்தபோது நடராஜர் சிலை இருந்துள்ளது. அதனருகே எரும்புகள் ஊர்ந்துசென்றுள்ளது. இதனைக் கண்ட மன்னர், அங்கேயே நடராஜருக்கு என கோவில் கட்டினார். எரும்புகள் ஊர்ந்துசென்று மறைந்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டது. ஆனால், சிறிது காலத்தில் அருகில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அக்கோவில் அழிந்துபோனது. பின், அச்சிலையைக் கொண்டு மீண்டும் கோவில் எழுப்பப்பட்டது. இதுபோல்தான் மீண்டும் இயற்கைச் சீற்றங்கள் தொடங்கியிருப்பதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

Ms Sarah Welch

தாமிரமாக மாறிய தங்கச் சிலை

தாமிரமாக மாறிய தங்கச் சிலை


சிதம்பரம் நடராஜருக்கு சோழ நாட்டு சிற்பியான நமச்சிவாய ஸ்தபதியிடம் நாட்டு சிற்பியான நமச்சிவாய ஸ்தபதியிடம் தாமிரத்தால் சிலை செய்யும் பொறுப்பு தரப்பட்டது. அதைக் கண்ட அந்த ஊரின் அரசன் சிங்கவர்மன், தாமிரச் சிலையை போன்ற தங்கத்தில் வடித்தால் சிறப்பாக இருக்கம் என்று எண்ணி, தங்கச்சிலையை வடிக்க உத்தரவிட்டான். தங்கத்தில் பூர்த்தி செய்யப்பட்ட சிலை தாமிரச் சிலையாக மாறிவிட்டது. வருத்தமுற்ற சிங்கவர்மன் கனவில் சிவபெருமான் தோன்றி, உன் கண்களுக்கு மட்டுமே தங்கச்சிலையாக இருப்பேன். மற்றவர்களுக்கு தாமிர சிலையாகவே இருப்பேன் என்று கூறி மறைந்தார். எனவே இரண்டாவது சிலையையே சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்தனர். முதல் சிலையே செப்பறை வந்து சேர்ந்தது.

Ms Sarah Welch

ஒரே சிலை 4 இடத்தில்

ஒரே சிலை 4 இடத்தில்


சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி உள்ளதோ அச்சிலை உருவாக்குவதற்கு முன்பே அதேப் போன்று நான்கு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளைக் காண வேண்டும் என்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செப்பறை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம், கருவேல மங்கலம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரி மங்கலம் ஆகிய நான்று தலங்களுக்குச் செல்ல வேண்டும்.

Ms Sarah Welch

வழிபாடு

வழிபாடு

கலைநயத்தில் ஆர்வம் உள்ளவர்கள், கல்வியில் சிறந்து விளங்க இந்த நடராஜரை வழிபடுவது நல்லது. பெரும்பாலும், நடனக் கலைமிக்கவர்கள் அதிகளவில் இத்தலத்தில் வந்து வழிபட்டு செல்வர். அவ்வாறு வழிபட்டுச் சென்று வெற்றிகண்டுவிட்டாலோ, அல்லது வேண்டியது நிறைவேறிவிட்டாலோ சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.

Richard Mortel

நடைதிறப்பு

நடைதிறப்பு


அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும்.

Ms Sarah Welch

திருவிழா

திருவிழா


இங்கு முக்கிய விழாக்களாக மகாசிவராத்திரி, பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகிறது. ஆனித் தேர்த் திருவிழாவுடன் கூடிய அழகியகூத்தர் திருவீதி உலா வரும் வைபவமும் மிகவும் பிரசிதிபெற்றதாகும். ஆனால் கவலை கொள்ள தேவையில்லை மக்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இறைவனிடத்திலிருந்தே பிறக்கிறது.

BishkekRocks

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருநெல்வேலி மாநகரில் இருந்து நாரணம்மல்லபுரம், ராஜவள்ளிபுரம் வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் பயணித்தால் தாமிரபரணி ஆற்றுப்படுகைக்கு அருகில் உள்ள செப்பறை நடராஜர் கோவிலை அடையலாம். சென்னை- விழுப்புரம்- திருச்சி - கன்னியாகுமரி தேசியச் சாலையை ஒட்டியவாறு இக்கோவில் உள்ளதால் மாநகரத்தில் எந்தப் பகுதியில் இருந்தும் எளிதில் இந்தக் கோவிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X