Search
  • Follow NativePlanet
Share
» »பிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி ! மர்மம் என்ன ?

பிரம்மாண்ட குகை, ஆண்கள் மட்டுமே செல்லும் அகத்தியர் அருவி ! மர்மம் என்ன ?

நாட்டின் இயற்கை வளமிக்க பகுதிகளுள் களக்காடு பாதுகாக்கப்பட்ட காடுகளும் உண்டு. பல்லுயிர்பெருக்கம் இந்த பகுதி காடு மற்றும் மலைகளில் நிறைய இருக்கிறது. அதாவது அதிக எண்ணிக்கையிலான பலவகை விலங்குகள், பறவைகள், மரம், செடி கொடிகள் என நிறைந்து காணப்படும் ஒரு அரிய இடமாகும். மலையேற்றம் செய்வதற்கு சிறந்த இடமாக கருதப்படும் இங்கே குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதியுடன் தொடர்ந்து பயணித்தால் அங்கே இருப்பது அமானுஷ்யம் நிறைந்த மாபெரும் குகையும், ஆண்கள் மட்டுமே செல்லக் கூடிய அகத்தியர் அருவியும். அப்படி அங்கே என்னதான் உள்ளது ?

களக்காடு

களக்காடு

ஆண்டு முழுவதும் உழைத்த களைப்பினைப் போக்க சில நாட்களாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அவசியம். உடலுக்கும் உள்ளத்திற்கும் உற்சாகத்தைத்தை தரக்கூடிய இடங்களுக்கு சில நாட்கள் சென்றுவந்தாலே புத்துணர்வு ஏற்படுவது இயற்கை. அப்படி நீங்கள் சுற்றுலா செல்லத் திட்டமிட்டால் வழக்கமான ஊட்டி, கொடைக்கானலைத் தவிர்த்து களக்காட்டிற்கு பயணம் செய்யலாம்.

SIVA ANANTHA KRISHNAN V

களாக் காடு

களாக் காடு

களக்காடு என்று அழைக்கப்படும் இந்தக் காட்டில் களா மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகும். இதனாலேயே இப்பகுதி களக்காடு என்று பெயர் பெற்றது. பண்டைய நாளில் திருக்களந்தை என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் சோரகாடவி என்றும் அழைக்கப்படுகிறது.

BenoitL

காட்டுக்கு ஓர் வரலாறு

காட்டுக்கு ஓர் வரலாறு

சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம் என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு.

Fryed-peach

புலிகளின் கூடாரம்

புலிகளின் கூடாரம்

களக்காடு வனப்பகுதி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய காடு ஆகும். இங்கு களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதிகளில் புலிகள் அதிகளவில் உலாவும். இதனாலேயே தமிழக அரசு இந்த வனப் பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காடுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உறைவிடமாக இருக்கிறது. இந்த காடுகளைச் சுற்றி புலிகள், யானைகள், சிறுத்தைகள், வறையாடுகள், சிங்கவால் குரங்குகள், கரடிகள் என பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன.

ஆறுகளுடன் அருவிகள்

ஆறுகளுடன் அருவிகள்

இந்த சரணாலயப் பகுதியில் பாண தீர்த்தம் மற்றும் அகஸ்தியர் அருவி ஆகிய இரண்டு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. தாமிரபரணி, மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய நதிகளுடன் பல கிளை நதிகளும் இந்த சரணாலயப் பகுதியில் ஓடுகின்றன. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த ஆறுகள் விளங்குகின்றன.

Vd89

பாணதீர்த்த அருவி

பாணதீர்த்த அருவி

பாணதீர்த்த அருவிக்கு செல்ல காரையார் அணைப்பகுதியை படகு மூலம் கடந்து வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும். இது ஒரு அருமையான அனுபவத்தை ஏற்படுத்தும். வனத்துறையிடம் அனுமதி பெற்று இங்கு மலையேற்றத்திலும் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் மாளிகை மற்றும் அருகில் அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் போன்றவைகளும் உண்டு.

Sunciti _ Sundaram's

சொரிமுத்து அய்யனார்

சொரிமுத்து அய்யனார்

காரையார் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் ஆலயம் பிரசித்தி பெற்றது. ஆடி அமாவசை அன்று நடக்கும் விழாவிற்கு பத்து நாட்கள் தங்கியிருந்து இறைவனை வழிபடுகின்றனர்.

Arunankapilan

அகத்தியர் கூடம்

அகத்தியர் கூடம்

மலையேற்றத்துக்கு மிக உகந்த காடுகளில் அகத்தியர் கூடம் பகுதியும் ஒன்று. இது களக்காடு மலைகளை ஒட்டி காணப்படுகிறது. இந்த காட்டில் மலையேற்றத்துக்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு இது கடினமான பகுதியாகும். இந்த மலையின் மேற்பகுதியில் அகத்திய முனிக்கு ஒரு கோவிலும் உள்ளது. இங்கு வரும் பல சுற்றுலாப் பயணிகள் அகத்திய முனியை வணங்கிவிட்டு செல்வது வழக்கம்.

Agasthiyar108

பிரமாண்ட குகை

பிரமாண்ட குகை

களக்காடு மலையில் பிரமாண்ட குகை ஒன்றும் காணப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 50 பேர் தங்கும் இடவசதி உள்ளது. செங்கல்தேரி மலையில் காணப்படும் குகை பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரம் கொண்ட செங்கல்தேரி பள்ளத்தாக்கில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் கருமண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே தான் பிரம்மாண்ட அளவில் ஓர் பாறை காணப்படுகிறது.

Dwilkinson08

சித்தர்களின் குகை

சித்தர்களின் குகை

பாறை இடுக்கின் வழியாக உள்ளே சென்றால் பிரமாண்ட குகை உள்ளது. குகையின் உள்பகுதி வீடுகளைப் போல நீளமாகவும், அகலமாகவும் உள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் வரை தங்கும் வகையில் இடவசதி உள்ளது. மழை பெய்தால் கூட தண்ணீர் துளிகள் குகைக்குள் விழுவதில்லை. குகையின் நுழைவு வாயில் சிறியதாக இருப்பதால் குனிந்து தான் செல்ல முடியும். முன் காலத்தில் இங்கு சித்தர்கள் தங்கி தவத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளன.

brownpau

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாபநாசத்திற்கு பேருந்து, வசதிகள் உண்டு. அங்கிருந்து தனியார் வாகனங்கள் மூலம் முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு செல்லலாம். வனத்துறையின் வாகனங்கள் மூலம் களக்காடு வனப்பகுதி வரை செல்ல முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X