Search
  • Follow NativePlanet
Share
» »ஹைதராபாத் பக்கத்துல இப்படியொரு திகில் கோட்டையா..!?

ஹைதராபாத் பக்கத்துல இப்படியொரு திகில் கோட்டையா..!?

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தை பின்னுக்குத் தள்ளிய கம்மத்தில் வானுயர்ந்த கோட்டைகளும், பல நூற்றாண்டுகளை கடந்தும் கம்பீரம் இலக்காத கோவில்களும் தவிர்த்து வேறு என்னவெல்லாம் இங்கு உள்ளதுன்னு பாக்கலாமா

தெலுங்கானாவில் கோட்டைகளுக்கு பெயர் பெற்ற நகரம் ஹைதராபாத் என்றே உங்களில் பெரும்பாலானோர் நினைத்திருப்பீர். ஆனால், ஹைதராபாதிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கம்மம் நகரம் தான் உன்மையில் கோட்டைகளுக்கான நகரமாக திகழ்கிறது. வானுயர்ந்த கோட்டைகளும், பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரம் இலக்காத கோவில்களும் தவிர்த்து வேறு என்னவெல்லாம் இங்கு உள்ளது என பார்க்கலாம் வாங்க.

ஆற்றங்கரை நாகரீகம்

ஆற்றங்கரை நாகரீகம்


கிருஷ்ணா ஆற்றின் துணையாறுகளுள் ஒன்றான முன்னேரு எனும் ஆற்றின் கரையில் கம்மம் நகரம் தோன்றியுள்ளது. ஆந்திரப்பிரதேச வரலாற்றில் இதற்கு ஒரு முக்கியமான இடமும் உண்டு. புகழ்பெற்ற கம்மம் கோட்டை கம்மம் நகரத்தில் மட்டுமல்லாமல் ஆந்திர மாநிலத்திலேயே முக்கியமான வரலாற்றுச்சின்னமாக அறியப்படுகிறது.

Shashank.undeela

மலைக் கோட்டை

மலைக் கோட்டை


ஒரு மலையின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த கம்மம் கோட்டை வரலாற்று கால இந்தியாவின் மேன்மையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் பலவித கட்டிடக்கலை அம்சங்களின் கலவையான கலைப்படைப்பாகவும் காட்சியளிக்கிறது. பல்வேறு ராஜவம்சங்களைச் சேர்ந்த மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டிருப்பதே இந்த கலவையான அம்சங்களுக்கு காரணம்.

Prasanth Dasari dasariprasanth

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்


கம்மம் கோட்டையினைச் சுற்றிலும் ஜமாலபுரம் கோவில் மற்றும் கம்மம் லட்சுமி நரசிம்மர் கோவில் பாலாயிர் ஏரி என பல்வேறு சுற்றுலாத் தலங்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. இவை தவிர பப்பி கொண்டலு மலை, வய்யர் ஏரி போன்றவையும் இயற்கை எழில் சுற்றுலாத் தலங்களுக்கு ஏற்றவையாக உள்ளன.

Topperpranav

ஜமாலபுரம் கோவில்

ஜமாலபுரம் கோவில்


கம்மம் நகரத்திலிருந்து 75.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமாலபுரம் கோவில் சின்ன திருப்பதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயரால் இக்கோவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கே மூலவராக வெங்கடேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

wikipedia

லட்சுமி நரசிம்மர் கோவில்

லட்சுமி நரசிம்மர் கோவில்


கம்மம் நகரத்திலிருந்து 171 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது லட்சுமி நரசிம்மர் கோவில். நகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு சாலை வழியாக எளிதில் சென்றடையலாம். ஒரு மலையின் மீது கம்மம் நகரை நோக்கியவாறு இந்தக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கம்மம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசத்தில் இக்கோவில் முக்கியமான ஆன்மீகத் தலமாக விளங்குகிறது.

HoysalaPhotos

பாலாயிர் ஏரி

பாலாயிர் ஏரி


கம்மம் மாவட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்த பாலாயிர் ஏரி இந்தியாவிலுள்ள அழகான ஏரிகளுள் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. கம்மம் மாவட்டத்தில் குசுமஞ்சி தாலுகாவில் உள்ள பாலாயிர் எனும் கிராமத்தின் ஒரு பகுதியாக இந்த ஏரி வீற்றுள்ளது. பிற ஏரிகளைப் போல் அல்லாமல் இந்த ஏரி மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும். பலவித நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த பாலாயிர் ஏரி கம்மம் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

Omer123hussain

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X