Search
  • Follow NativePlanet
Share
» »நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலம் உலகையே ஈர்க்கும் விசித்திரம்..!

நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலம் உலகையே ஈர்க்கும் விசித்திரம்..!

நம் நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலம் என்றால் அது நாகலாந்து தான். எத்தனையோ பகுதிக்கு சுற்றுலா சென்றவராக நீங்கள் இருந்தாலும் இந்த நாகலாந்து மட்டும் ஒருவித புது அனுபவத்தை உங்களுக்குத் தரும்.

நம் நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலம் என்றால் அது நாகலாந்து தான். எத்தனையோ பகுதிக்கு சுற்றுலா சென்றவராக நீங்கள் இருந்தாலும் இந்த நாகலாந்து மட்டும் ஒருவித புது அனுபவத்தை, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பல பரவசமூட்டும் நினைவுகளை உங்களுக்குத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆழமான பாரம்பரிய கலாச்சாரம் வேரூன்றியிருக்கும் இந்த மாநிலம் தனது விருந்தினர்களை ஒருபோது பிரமிக்க வைக்க தவறுவதேயில்லை. இந்த ஊருக்கு மட்டும் செல்ல பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பே நீங்கள் இயற்கைக்காட்சிகளை ஏராளமாக பார்த்து ரசிக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்புடனேயே செல்லலாம். அந்த அளவுக்கு செழிப்பான பசுமையான இயற்கைக்காட்சிகள் நிறைந்த மலைகள் சூழ்ந்தது இது. சரி, அப்படி நாகலாந்துக்கு சுற்றுலாச் செல்ல திட்டமிட்டால் குறிப்பாக எங்கவெல்லாம் சென்று வரவேண்டும் என தெரிந்துகொள்வோம் வாங்க.

ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம்

ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம்


நாகலாந்தில் கைஃபைர் மாவட்டத்தில் உள்ள இந்த ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம் இயற்கை ரசிகர்களுக்கும் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும் ஏற்ற சுற்றுலாத் தலமாகும். இந்த சரணாலயத்தில் சிறுத்தைகள், புலிகள், காட்டு எருமைகள், ஹூலாக் கிப்பன் மற்றும் மிதுன் போன்றபல வகை விலங்கினங்கள் வசிக்கின்றன. நாகலாந்து பகுதியின் பிரசித்த பறவையான இருவாட்சி இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுவது கறிப்பிடத்தக்கது. விலங்கினங்கள் மட்டுமல்லாமல் பல அரிய தாவர வகைகளும் இந்த வனப்பகுதியில் நிறைந்துள்ளன. ஃபக்கிம் காட்டுயிர் சரணாலயம் மிக அதிகமான மழைப்பொழிவை பெறும் புவியியல் அமைப்பை கொண்டிருப்பதால் இங்கு அபரிமிதமான தாவரச்செழுமை காணப்படுகிறது. திமாபூர் விமான நிலையத்திலிருந்து இந்த சரணாலயத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் எளிய முறையில் உள்ளன.

Dhrubazaanphotography

கோஹிமா மிருகக்காட்சி சாலை

கோஹிமா மிருகக்காட்சி சாலை


கோஹிமா மிருகக்காட்சி சாலை அல்லது விலங்கியல் பூங்கா நாட்டிலேயே மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றாகவும் மற்றும் நாகலந்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கியமான சுற்றுலாதலமாகவும் உள்ளது என்பதும் பெருமைக்குரிய விசயமாகும். இயற்கையாகவே மலை மீது உருவாக்கப்பட்டிருப்பதால் விலங்குகள் மற்றும் பறவைகள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இந்த மிருகக்காட்சி சாலை உள்ளது. இந்த மலைப்பகுதிகள் விலங்குகளின் வாழிடமாக அமைவதற்காக வேண்டி புதுமையான வழிமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மலையேற்றம் செய்து நாகலாந்தின் தாவர மற்றும் விலங்கு வகைகளை கண்டு மகிழ்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இது உள்ளது. நாகலாந்து மாநிலத்தின் சின்ன பறவையாக அறிவிக்கப்பட்டுள்ள டிராகோபான் பறவையை இந்த மிருகக்காட்சி சாலையில் காண முடியும். இது மட்டுமல்லாமல், மாநில அரசின் விலங்காக உள்ள மிதுன் வகை காட்டெருமைகளும் கோஹிமா விலங்கியல் பூங்காவில் உள்ளன. பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளை கொண்டுள்ள இந்த பூங்காவில் கோல்டன் லாங்கூர் மற்றும் ஆசிய கருப்புக் கரடிகளையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

P Jeganathan

கிரேட்டர் கோஹிமா

கிரேட்டர் கோஹிமா


நாகலாந்தின் தலைநகரம் கோஹிமாவை சுற்றியுள்ள நகர அமைப்பு கிரேட்டர் கோஹிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நகர அமைப்புகள் கோஹிமா, ஜகாமா மற்றும் ஜோட்சோமா ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். கிரேட்டர் கோஹிமாவில் உள்ள நாகலாந்து மாநில அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நாக பழங்குடியினரின் கலாச்சாரங்களும் வரலாற்றின் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். மியூசியம் மட்டுமல்லாமல், இங்கிருக்கும் மிருகக்காட்சி சாலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக சில அரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களை காணவும் முடியும். உலகத்தின் இந்த பகுதிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு கோனோமா, இன்டாங்கி வனவிலங்கு சரணாலயம், இரண்டாம் உலகப்போர் கல்லறைகள் மற்றும் கத்தோலிக்க தேவாலயம் ஆகியவை கண்டிப்பாக காண வேண்டிய இடங்களாக உள்ளன. இங்கிருக்கும் மாநில அரசு எம்போரியத்தில் உங்களால் நாக பழங்குடியினருக்கே உரித்தான கலை மற்றும் தொல்பொருட்களையும் மற்றும் உலகப் புகழ் பெற்ற நாக சால்வைகளையும் வாங்கிட முடியும்.

P Jeganathan

இன்டாங்கி தேசிய பூங்கா

இன்டாங்கி தேசிய பூங்கா


இன்டாக்கி பூங்கா என்றும் உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இன்டாங்கி தேசிய பூங்கா, மாவட்ட தலைநகரம் 40 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் திமாபூர் நகரத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த பூங்காவை பிரிட்டிஷ் நிர்வாகத்தினர் 1923-ம் ஆண்டு உருவாக்கினார்கள். வட கிழக்கு இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய பூங்காக்களில் ஒன்றாக இருக்கும் இன்டாங்கி தேசிய பூங்கா, அடர்ந்த மழைக்காடுகளை கொண்டிருப்பதால் அது பல்வேறு பறவைகள், ஊர்வன உயிரினங்கள் மற்றும் பாலூட்டிகளின் இருப்பிடமாக இந்த பூங்கா உள்ளது. மலைகள், மலை முகடுகள் மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த பூங்கா முகாமிடுவதற்கும் மற்றும் சாகசம் செய்வதற்கும் மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. இந்த தேசிய பூங்காவில் நீங்கள் காணும் காட்டெருமைகள் மற்றும் ஹுலுக் கிப்பன்கள் ஆகியவற்றை நாகலாந்தில் மட்டும் தான் காண முடியும்.

Vikramjit Kakati

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X