Search
  • Follow NativePlanet
Share
» » புதிய பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் மிதக்கும் சிலைகளை கொண்ட இடம் எது தெரியுமா?

புதிய பத்து ரூபாய் நோட்டில் இருக்கும் மிதக்கும் சிலைகளை கொண்ட இடம் எது தெரியுமா?

மோடி அரசு புதிதாக வெளியிட்ட "10 ரூபாய்" நோட்டில் இருக்கும் இந்த இடம் எது தெரியுமா?

By Udhaya

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி, திடீரென்று திரை வழியாக மக்கள் முன் தோன்றிய நம் நாட்டின் பிரதமர் மோடி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்றிரவு முதல் செல்லாது எனவும், அதற்கு பதிலாக விரைவில் புதிய நோட்டுக்கள் விடப்படும் எனவும் அறிவித்தது நினைவிருக்கும். அதன்படி வரிசையாக 2000ரூபாய், 500ரூபாய், 200ரூபாய், 50ரூபாய் என வெளிவந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் 10ரூபாய் நோட்டு வெளிவந்தது. இந்த நோட்டில் இருக்கும் சரித்திர புகழ் வாய்ந்த, யுனெஸ்கோவின் புராதான சின்னங்களில் ஒன்றாகிய பகுதிக்குத்தான் இப்போது நாம் போகவிருக்கிறோம்.

10ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம்

10ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள பத்துரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் கோனார்க் சூரிய கோயில் ஆகும். இது 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து 35கிமீ வடகிழக்கில் அமைந்துள்ளது இந்த கோயில். இது சூரிய பகவானுக்காக கட்டப்பட்ட உலகின் ஒரே பெரிய வகை கோயில் ஆகும். இது பார்ப்பதற்கு நூறு அடி உயரமான தேர் போன்ற காட்சியளிக்கிறது. இது காமக்கலைகளையும் கூறும் கோயில் ஆகும்.

இந்த பத்து ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்பட்டது தெரியுமா? தெரிந்தவர்கள் கமண்டில் கூறுங்கள்...

Shamik Chakravorty

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம்

இது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் வித்தியாசமான தனித்தன்மை வாய்ந்த கட்டுமானமாகும். ஒடிசா மாநிலத்தின் ஒரே ஒரு உலக பாரம்பரிய சின்னம் கோனார்க் சூரிய கோயில் மட்டும்தான். 1250களில் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலின் பெரும்பாலான பகுதி சிதைந்து காணப்படுகிறது.

தமிழகத்தில் இருக்கும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் எவை எவை தெரியுமா? தெரிந்தவர்கள் கமண்ட்டில் குறிப்பிடுங்கள்...

Shamik Chakravorty

அறிவியல் தொழில்நுட்பங்களை மிஞ்சும் கலை வடிவம்

அறிவியல் தொழில்நுட்பங்களை மிஞ்சும் கலை வடிவம்


கங்கா வம்சத்தின் மிக வலிமை மிக்க அரசனாகிய முதலாம் நரசிம்மதேவன் இந்த கோயிலை கட்ட திட்டமிட்டு மிகப்பிரம்மாண்டமாக கட்டிமுடித்ததாக நம்பப்படுகிறது. கிட்டத்தட்ட 1200 வரை கலைஞர்களின் உதவியோடு இந்த கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. கட்டப்பட்டஆண்டு 13ம் நூற்றாண்டு. இந்த கோயில் கட்ட ஆரம்பித்து 12 ஆண்டுகள் தொடர்ந்து இடைவிடாது கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Shamik Chakravorty

 தேர் அமைப்பில் முழு கட்டிடக்கலை

தேர் அமைப்பில் முழு கட்டிடக்கலை


24 சக்கரங்களைக் கொண்டு இயங்கும் ஒரு தேரைப் போன்று வடிவமைக்க திட்டமிடப்பட்டு மிகச் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இந்த கோயில். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு தேர் வருவதைப் போலத்தான் இது இருக்கும். 10மீ சுற்றளவு கொண்ட 24 சக்கரங்கள் இந்த கோயிலைத் தாங்குவது போல் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த தேரை 7 குதிரைகள் இழுத்துச்செல்வது போல திட்டமிடப்பட்டுள்ளது.

Anshika42

 கறுப்பு பகோடா

கறுப்பு பகோடா

கோயில்களைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் அதிகம் படித்துவருபவர்களுக்கு இந்த கறுப்பு பக்கோடா பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கோயில் கட்டும்போது இதன் அருகே கடல் இருந்திருக்கிறது. பின் அந்த கடல் உள்வாங்கி சற்று தொலைவிற்கு போய்விட்டது. மேலும் கடற்கரையில் இருந்து காணும்போது இந்த கோயில் கறுப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதுதான் இந்த கோயிலுக்கு கறுப்பு பகோடா எனும் பெயரை கொண்டு வந்தது. பழங்காலத்தில் கடலில் பயணிப்பவர்களுக்கு இது ஒரு எல்லையாக இருந்துள்ளது. இந்த இடத்துக்கு வருபவர்கள் இதை கறுப்பு பகோடா என்றே அழைத்துள்ளனர். மேலும் வெள்ளைப் பகோடா என்ற ஒன்றும் இருக்கிறது தெரியுமா? தெரிந்தவர்கள் கமண்ட்டில் கூறுங்கள் பார்க்கலாம்...

SATHWIKBOBBA

சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் பெரிய கோயில்

சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் பெரிய கோயில்

சூரிய பகவானுக்கு உலகில் வேறெங்கும் இந்த அளவுக்கு பெரிய கோயில் இல்லை. ஏனெனில் இங்கு சமீப காலத்துக்கு முன்பு வரை வழிபாடு நடத்தப்பட்டு வந்துள்ளது. மிகப்பெரிய தேரோட்டியைப் போல சூரிய பகவானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கட்டுமானக் கலைக்கும், இதன் வெட்டுகளுக்கும் பெயர் பெற்றது. இதன் ஒவ்வொரு கல்லும் செதுக்கப்பட்டுள்ள விதமே சொல்லும் அறிவியல் உலகின் ஆச்சர்யமான விசயம் இது என்று....

இந்தியாவில் இன்னொரு சூரிய கோயில் இருக்கு கண்டுபிடிங்க பாக்கலாம்....

Ritika Majumdar

அறிவியலை மிஞ்சிய சூரிய கடிகாரம்

அறிவியலை மிஞ்சிய சூரிய கடிகாரம்

சூரிய கடிகாரம் என்றவுடன் சூரிய ஒளியில் இயங்கும் கடிகாரம் என்று கருதிவிடவேண்டாம். இது சூரியனின் திசையைக் குறிக்கும் கடிகாரம். அடடா... அந்த காலத்திலேயே இதை சரியாக கணித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்.

இது ஒரு காலச் சக்கரம் போன்றது. கடிகாரத்தில் 12 முட்கள் இருக்கும். ஆனால் இதில் 8தான். இந்த கோயிலில் இதுபோன்று 12 ஜோடி சக்கரங்கள் இருக்கின்றன. அவைதான் நேரத்தை குறிக்கின்றன. இந்த சக்கரங்களின் நிழலை வைத்தே நேரத்தை கணக்கிடலாம். தற்போது நாம் அறிவியலின் பல அதிசயங்களைப் பார்த்துவிட்டதன் காரணமாக இதன் அருமை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் பாருங்கள் இது எத்தனை காலத்துக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்று.....

Gsuruchi06

மிதக்கும் சிலை

மிதக்கும் சிலை


காந்தப்புல அறிவியல் நிறைந்த தலம் இதுவாகும். ஆம் இந்த கோயிலின் சிலைகள் மிதப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கற்களுக்குள் இரும்பை நுழைத்தார்களா, இல்லை இரும்பு தன்மை வாய்ந்த அதிக கற்களைப் பயன்படுத்தினார்களா தெரியவில்லை. காந்தப் புலம் நிறைந்த இவ்விடங்களில் சிலைகள் மிதக்கின்றனவாம்.

கற்களை அதற்கேற்றமுறையில் அடுக்கி, காந்தப் புல செறிவு நிறைந்த பகுதிகளில் வைத்தால் அது காற்றில் மிதப்பதைப் போல இருக்கும். அந்த காலத்திலேயே இந்த அறிவியலை கண்டுபிடித்துள்ளனர். கொஞ்சம் முயன்றிருந்தால் மின்சாரத்தைக் கூட கண்டுபிடித்திருக்கமுடியும்.
Mano49j

 மனிதர்கள் ஒட்டுமொத்த பிரச்சனையை ஒரே கல்லில் விளக்கிய அறிவு

மனிதர்கள் ஒட்டுமொத்த பிரச்சனையை ஒரே கல்லில் விளக்கிய அறிவு


மனிதர்களின் பிரச்னை என்றவுடன் நிம்மதியின்மையும், பணமும்தான் என்பது பலரது பதிலாக இருக்கும். பணம் அதிகம் சேர சேர நிம்மதி இழந்து வாடும் அநேக நபர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள். அப்படிப்பட்ட தத்துவங்களை ஒரே கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

இங்கு ஒரு சிலையில் சிங்கம், யானை, மனிதன் சேர்ந்தார்போல் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அதில் யானையை சிங்கம் நசுக்குவதுபோலவும், மனிதனை யானை நசுக்குவதுபோலவும் இருக்கிறது. மனிதனை பணம் அழித்துவிடுகிறது என்றும், பணத்தை விட வலிமையானது புகழ் என்பதும்தான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது.

Gsuruchi06

வைரத்தில் பட்டு பிரதிபலிக்கும் சூரியஒளி

வைரத்தில் பட்டு பிரதிபலிக்கும் சூரியஒளி


வேறெந்த கோயிலிலும் இல்லாத ஒரு அதிசயம் இந்த கோயிலில் நிகழ்கிறது. சரியாக குறிப்பிட்ட நேரத்தில் சூரிய ஒளி கோயிலுக்குள் விழுந்து, அங்கிருக்கும் வைரத்தில் பட்டு எதிரொளிக்கிறது. இது சரியான கோணத்தில் நிகழவேண்டும். ஏனென்றால் பூமி சுற்றுவதையும், சூரியன் பிரதிபளிப்பதையும் அன்றாடம் காணும் நமக்கு தெரியும் அது சரியான கோணத்தில் தினமும் ஒரே நேரத்துக்கு நிகழ வாய்ப்பில்லை. ஆனால் இந்த அதிசயம் எப்படி நடக்கிறது?

Satyabrata Nanda

கட்டிடக்கலை அதிசயம்

கட்டிடக்கலை அதிசயம்

இந்த கோயிலின் எந்த மூலைக்கு சென்றாலும், எந்த இடத்தைப் பார்த்தாலும் அங்கு தெய்வங்களின் சிலைகளும், நாட்டியக்காரர்களின் சிலைகளும் காட்சியளிக்கும். ஒவ்வொரு இன்டு இடுக்கிலும் இது செய்யப்பட்டுள்ளது கட்டிடக்கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Krishnan

 தரிசிக்கும் அனுபவம்

தரிசிக்கும் அனுபவம்


கொனார்க் நகரத்தின் பிரதான அடையாளமான சூரியக்கோயிலை முதன் முதலாக தரிசிக்கும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அப்படி ஒரு நுணுக்கமான புராதன கட்டிடக்கலை அம்சங்களுடன், கடந்து போன ஒரு ஆதி நாகரிகத்தின் வாசனை சிறிதும் மறையாமல் இந்த கோயில் வீற்றிருக்கிறது.

Thamizhpparithi Maari

கோயிற்கலை மரபின் உச்சம்

கோயிற்கலை மரபின் உச்சம்

ஒடிஷா மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை மரபின் உச்சபட்சமான அழகியல் அம்சங்களை இங்கு தரிசிக்கலாம். கற்களில் வடிக்கப்பட்ட மஹோன்னத கட்டிடக்கலை அற்புதங்களை கொண்ட இந்திய புராதன சின்னங்களின் மத்தியில் இந்த கோயில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது. இந்த கோயிலில் அழகை தரிசிக்க வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேடி வருகின்றனர்.

Kinkiniroy2012 -

 சூரியக்கடவுளின் வாகனம்.

சூரியக்கடவுளின் வாகனம்.

நரசிம்மதேவா எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் 13ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயில் வளாகத்தில் 24 சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ஒரு தேர் அமைப்பு வெகு நுணுக்கமான சிற்பக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சூரியக்கடவுளின் வாகனமாக இந்த தேர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Gsuruchi06

கற்பனைப்படைப்பு

கற்பனைப்படைப்பு


வெகு உன்னதமான ஒரு கற்பனைப்படைப்பாகவும் மற்றும் கட்டிடச்சிற்பக்கலை நிர்மாணமாகவும் இந்த தேர் அமைப்பு கருதப்படுகிறது. கொனார்க் நகரின் இதர சிறப்பம்சங்கள் யாவற்றையும்விட இது அதிக அளவில் ரசிக்கப்படும் அம்சமாகவும் புகழ் பெற்றுள்ளது. 1984ம் ஆண்டில் உலகப்பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இந்த சூரியக்கோயில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு பெருமைக்குரிய அம்சமாகும்.

Kinkiniroy2012

 கொனார்க் நடனத்திருவிழா

கொனார்க் நடனத்திருவிழா

கொனார்க் நடனத்திருவிழா எனும் பிரபலமான நிகழ்வு இந்த சூரியக்கோயில் வளாகத்தில்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்த்தப்படுகிறது. இந்த அற்புதமான கோயிலின் சில பகுதிகள் கால ஓட்டத்தில் சிறிது சேதமடைந்து காணப்பட்டாலும் இதன் பொலிவு இன்றளவும் குறையாமல் பார்வையாளர்களை பிரமிக்கச்செய்கிறது.
Gsuruchi06 -

Read more about: travel temple odisha tour trip
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X