Search
  • Follow NativePlanet
Share
» »எரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்..! தென்னகத்தின் காசி தேடி போலாமா ?

எரிந்த சதி தேவி உடலை சுமந்து நடனமாடிய சிவன்..! தென்னகத்தின் காசி தேடி போலாமா ?

கைலாசத்தில் இருந்து சதி தேவியின் பயணத்தை தொடர்புப்படுத்தும் வகையில் பெயரிடப்பட்ட இடங்கள் இன்னமும் கூட உள்ளது. கொட்டியூர் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேரளாவில் கண்ணூர் மாநகராட்சியில் அமைந்துள்ள பசுமையான சஹ்யத்ரி மலைகளில் உள்ள கொட்டியூர் கோவில், சைவ-ஷக்த வழிபாட்டிற்கு பழமையான இடமாக நம்பப்படுகிறது. இதனை தென்னகத்து காசி எனவும் அழைக்கின்றனர். இங்கே தான் ஆணவமுள்ள மன்னனான தக்சன் தீய விதிக்கான யாகத்தை நடத்தினான் என புராணம் கூறுகிறது. தன் கணவன் சிவபெருமானுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையால் கோபம் கொண்ட சதி தேவி இங்கே தான் அக்னியில் தன் உயிரை மாய்த்தாள். தன் மனைவி உயிருடன் இல்லை, அதுவும் அவளின் தந்தையின் நடவடிக்கைகளால் என்ற கடும் கோபத்தால், சிவபெருமான் வீரபத்ரனை உருவாக்கினார். கொட்டியூருக்கு விரைந்த அவர்கள் யாகத்தை அழித்தனர். தக்சனின் தலையை கொய்த சிவபெருமான், பாதி எரிந்த சதி தேவியின் உடலை சுமந்த படி ருத்ரதாண்டவம் ஆடினார். உலகத்தின் அழிவை தடுத்து நிறுத்த, தன் சுதர்சனத்தை கொண்டு சதி தேவியின் உடலை 51 துண்டுகளாக வெட்டினார் மகா விஷ்ணு. இந்த பூமியில் விழுந்த அந்த 51 துண்டுகளும் இந்திய துணைக்கண்டத்தின் மீது 51 சக்தி பீடங்களாக உருவாகின. இந்த கோவிலுக்கு அருகாமையில் வரும் போதே இந்த கதை உயிர்ப்பைப் பெறும். கைலாசத்தில் இருந்து சதி தேவியின் பயணத்தை தொடர்புப்படுத்தும் வகையில் பெயரிடப்பட்ட இடங்கள் இன்னமும் கூட உள்ளது. கொட்டியூர் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கொட்டியூர்

கொட்டியூர்


சிவபெருமானால் அனுப்பப்பட்ட காளையை அவர் சந்தித்த இடத்தை "கேலகம்" (மலையாளத்தில் காள என்றால் காலை என அர்த்தமாகும்) என அழைக்கின்றனர். தன் தந்தை நடத்திய யாகத்தைக் காண, அவர் கழுத்தை நீட்டிய இடத்தை "நீண்டு நோக்கி" (நீண்டு என்றால் நீட்டுதல், நோக்கி என்றால் பார்த்தல்) என அழைக்கின்றனர். சதி தேவி அழுத போது, கண்ணீர் சிந்திய இடத்தை "கணிச்சர்" என அழைக்கின்றனர். யாகம் அழிக்கப்பட்ட போது உலகத்திற்கு கெட்ட நேரம் வந்து சேர்ந்தது. அப்போது மகா விஷ்ணுவும், பிரம்ம தேவனும் சிவபெருமானிடம் சென்று யாகத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவர்கள் சந்தித்த இடத்தை "கூடியூர்" (அதாவது கூடிய இடம்) என அழைக்கின்றனர். காலப்போக்கில் கூடியூர் கொட்டியூராக மாறியது.

Vinay

சுயம்பு சிவலிங்கம்

சுயம்பு சிவலிங்கம்


வெட்டப்பட்ட தக்சனின் தலை இந்த பூமியில் விழுந்து, சுயம்பு சிவலிங்கமாக உருமாறியது என நம்பப்படுகிறது. வனத்தில் தொலைந்து போனதாக கருதப்படும் இந்த சிவலிங்கம் ஒரு நாள் ஒரு காட்டுவாசியின் பார்வையில் பட்டது. தன் அம்பை அந்த கல்லின் மீது செலுத்திய போது, அதிலிருந்து அதிசயமாக இரத்தம் வழிந்தது. ஆச்சரியப்பட்ட அவன் அருகில் இருந்த குடும்பங்களிடம் இதனை தெரிவித்தான். அதனை சிவலிங்கம் என அவர்கள் கண்டு கொண்டனர். சிவலிங்கத்தின் மீதான இரத்த காயத்தை ஆற வைக்க, அவர்கள் நெய்யையும் இளநீரையும் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். விசாக திருவிழாவின் போது இன்று வரை இந்த சடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

Sivavkm

கொட்டியூரின் இரண்டு கோவில்கள்

கொட்டியூரின் இரண்டு கோவில்கள்


கொட்டியூரில் இரண்டு கோவில்கள் உள்ளது. பவலி எனும் நதியின் இருபுறமும் அவை அமைந்துள்ளது. இந்த கோவில்களை இக்கரே மற்றும் அக்கரே என அழைக்கின்றனர். இந்த கோவிலுக்கு வருகை தரும் முன்பு, இந்த நதியில் அனைவரும் குளிப்பார்கள். பவலி நதியின் நீர் மருத்துவ குணம் கொண்டவையாக நம்பப்படுகிறது. இந்த நதியில் உள்ள கூலாங்கற்களை தேய்க்கையில் சந்தனம் போன்று கரையும். இதனை தங்களின் நெற்றியில் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்.

Vinayaraj

அக்கரே கோவில்

அக்கரே கோவில்


விசாகோல்சவம் என்ற விசாக திருவிழாவின் போது 27 நாட்களுக்கு மட்டுமே அக்கரே கோவில் திறந்திருக்கும். இந்த கோவிலில் கர்பக் கிரகமே கிடையாது. "மனிதாரா" என்ற கோவிலில் ஓலைக் கூரையுடன், கற்களாலான உயர்ந்த மேடையில் சிவலிங்கத்தை காணலாம். "திருவஞ்சிரா" என்றழைக்கப்படும் முட்டி அளவிலான குளத்தின் நடுவில் இது அமைந்துள்ளது. கடவுளைச் சுற்றி பிரதக்ஷணம் செய்ய பக்தர்கள் இந்த குளத்தில் இறங்கி சுற்ற வேண்டும்.

Satheesan.vn

அம்மரக்கள் தாரா

அம்மரக்கள் தாரா


சதி தேவி தன் உயிரை விட்ட இடத்தை அம்மரக்கள் தாரா என அழைக்கின்றனர். மனிதாராவுக்கு பின்புறம் மிகப்பெரிய ஆலமரத்துடன் இது அமைந்துள்ளது. பனமர இலைகளை கொண்டு செய்யப்பட்ட மிகப்பெரிய குடையால் மூடப்பட்ட பெரிய விளக்கு அம்மரக்கள் தாராவில் ஏற்றப்படும். நாணயங்களும், பணமும் காணிக்கையாக வழங்கப்படும். ஆலமரத்தில் பக்தர்கள் தேங்காயை காணிக்கையாக செலுத்துவார்கள். அதன் ஓரத்தில் கடவுளுக்கு செய்யப்படும் பிரசாதங்கள் தயாரிக்கப்படும் திடப்பள்ளி உள்ளது.

Satheesan.vn

இக்கரே கோவில்

இக்கரே கோவில்


வருடத்தில் 11 மாதங்கள் இக்கரே கோவில் திறந்திருக்கும். விசாக திருவிழாவின் போது இந்த கோவிலுக்கு செல்ல முடியாது.

Vinayaraj

விசாக திருவிழா

விசாக திருவிழா


சிவலிங்கத்தை மூடும் அஸ்தபந்தனத்தை நீக்குவதில் தான் இந்த திருவிழா தொடங்கும். இங்கே பல்வேறு சடங்குகள் நடைபெறும். ஒவ்வொரு சமுதாயனத்தினரும் குறிப்பிட்ட சடங்கை மேற்கொள்வார்கள். இந்த சடங்குகளை உருவாக்கியது சங்கராச்சாரியார் ஆவார். மேலும் பல சடங்குகள் மிக ரகசியமாக நடைபெறுகிறது. திருவிழாவின் தொடக்கம் மற்றும் முடிவை பெண்கள் கண்டு களிக்கலாம். திருவிழா முடிந்தவுடன் சிவலிங்கத்தை மீண்டும் அஸ்தபந்தனத்தை கொண்டு மூடி விடுவர். பின் அந்த ஓலைக்கூரை அழிக்கப்படும். அடுத்த வருடம் வரை சூரியன் மற்றும் இயற்கையின் பிற கூறுகளில் அந்த சிவலிங்கம் வெளிப்படும்.

Sivavkm

விசேஷ சடங்குகள்

விசேஷ சடங்குகள்


இளநீராட்டம் மற்றும் நெய்யாட்டம் ஆகிய இரண்டுமே இந்த திருவிழாவின் போது நடைபெறும் விசேஷ சடங்குகளாகும். பக்தர்களால் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும் இளநீர் கடவுளுக்கு காணிக்கையாக வழங்கப்படும்.

Satheesan.vn

ரோகினி ஆராதனா

ரோகினி ஆராதனா


எங்குமே காண முடியாத மற்றொரு முக்கிய சடங்காக விளங்குவது ரோகினி ஆராதனா. பிராமண குடும்பம் மற்றும் குருமதூர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மகா விஷ்ணுவை உள்ளடக்குவதாக கருதப்படுகிறது. ரோகினி ஆராதனா சடங்கின் போது, அவர் சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொள்வார். சதி தேவியின் இழப்பிற்கு மகா விஷ்ணு இதேப்போல் தான் சிவபெருமானுக்கு ஆறுதல் கூறியதாக நம்பப்படுகிறது.

Sivavkm

வீரபத்திரனின் வாள்

வீரபத்திரனின் வாள்


தக்சனின் தலையை துண்டிக்க பயன்படுத்தப்பட்ட வாள், கோவிலுக்கு அருகாமையில் உள்ள முத்தேரி காவு என்ற இடத்தில் இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. விசாக திருவிழாவின் போது கொட்டியூர் கோவிலுக்கு இந்த வாள் கொண்டு வரப்படும்.

கொட்டியூர் கோவிலின் அதிசயங்கள்

கொட்டியூர் கோவிலின் அதிசயங்கள்


இந்த கோவிலில் டன் கணக்காக விறகுக்கட்டை எரிக்கப்படும் போதும் கூட, அங்குள்ள சாம்பலை சுத்தப்படுத்துவதற்கான தேவை ஒரு முறை கூட எழுந்ததில்லை. பல மைல்களுக்கு அப்பாலுள்ள வேறு கோவிலில் இதன் சாம்பல் காணப்படுவதாக கூறப்படுகிறது.

மூங்கில் பூக்கள்

மூங்கில் பூக்கள்


கொட்டியூர் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தரும் அக்கடவுளின் ஆசீர்வாதத்துடனும், அங்குள்ள கடைகளில் விற்கப்படும் ஒடப்பு என்னும் மூங்கில் பூக்களுடன் திரும்பி வருகின்றனர். இள மூங்கிலில் இருந்து எடுக்கப்படுவதே ஒடப்பு மலர். அது தக்சனின் தாடியை குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்பும் பக்தர்கள் தங்கள் பூஜை அறையில் இந்த மலர்களை வைப்பார்கள். அல்லது அவற்றை வீட்டிற்கு வெளியே அதிர்ஷ்டத்திற்காக மாட்டி வைப்பார்கள். மே மற்றும் ஜூன் மாதத்தில் வைசாக திருநாள் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 28 நாட்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் இந்த திருவிழாவின் சடங்குகளிலும் பூஜைகளிலும் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

Vinayaraj

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


கன்னூரில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொட்டியூர் கோவில். கன்னூர், சிவபுரம், மனதனா வழியாக பயணித்தால் பசுமை நிறைந்த காட்டில் உள்ள இத்தலத்தை அடையலாம். சுற்றுவட்டாரத்தில் இருந்து இக்கோவிலுக்கு வர எளிய முறையில் போக்குவரத்து வசதிகள் உள்ளது. திருவிழாக் காலங்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்

அருகில் உள்ள சுற்றுலாத் தலம்


முழுப்பிளாங்காட் பீச்

ஆசியாவிலேயே கடற்கரையில் வாகனம் ஓட்ட ஏற்ற இடம் என்ற பெருமையை பெற்றுள்ளது கன்னூரில் உள்ள முழுப்பிளாங்காட் பீச். முழுப்பிளாங்காட் கடற்கரை தலசேரி நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. ஒரு நாள் சுற்றுலாவுக்கும் குடும்பத்தினருடன் பிக்னிக் செல்வதற்கும் ஏற்ற இந்த கடற்கரைப்பகுதிக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ஒவ்வொரு வருடமும் பயணம் செய்வது வழக்கம். அலைகளை ஒட்டியே வாகனங்களில் கடற்கரை மணற்பரப்பின் அழகை ரசித்தபடி பயணம் செய்ய முடிவது இந்த இடத்தில் சிறப்பாகும். தர்மதம் தீவு அல்லது பச்ச துருத்து என்று அழைக்கப்படும் ஒரு சிறு தீவுத்திட்டு இந்த கடற்கரையை ஒட்டியே 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கரையில் அசைந்தாடும் தென்னை மரங்களும் ஆங்காங்கு மணலில் புதைந்திருக்கும் கருப்பு பாறைகளும் இக்கடற்கரையின் எழிலைக்கூட்டுகின்றன.

Shagil Kannur

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X