Search
  • Follow NativePlanet
Share
» »அரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..!

அரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..!

மாந்திரீகம் நிறைந்த சிறப்பு வாய்ந்த கோவில்களில் உயிர்ப் பலி என்ற பெயரில் விலங்குகளை கடவுளுக்கு காவு கொடுக்கும் சடங்குகளும் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. நம் நாட்டில் உள்ள விசித்திர கோவில்கள்

By Staff

இந்து கோவில்கள் சிலலை மந்திர தந்திரங்களுக்கு எனவே தனியே பெயர்பெற்றுள்ளது. இதுபோன்ற தலங்களில் வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர். இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த கோவில்களில் உயிர்ப் பலி என்ற பெயரில் விலங்குகளை கடவுளுக்கு காவு கொடுக்கும் சடங்குகளும் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. நம் நாட்டில் அப்படிப்பட்ட சில கோவில்கள் எங்கே உள்ளது ?. அங்கே எந்தமாதிரியான விசித்திர வழிபாடு நடத்தப்படுகிறது என பார்க்கலாம் வாங்க.

காளிகாட்

காளிகாட்


மேற்கு வங்காளம், கல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவில் புதிதாக யாவரையும் கொஞ்சம் பயமுறுத்தும் தன்மை கொண்டது. அன்னை பார்வதி தேவியின் உடலிருந்து ஒரு விரல் விழுந்து எழுந்த இடம் தான் இது. இங்கே ஆடுகளை உயிர்பலி கொடுத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதேப் போன்று மேற்கு வங்காளத்தில் உள்ள மற்றொரு இடம் பிஷ்ணுபூர். இங்கே ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் நாகத்தை தெய்வமாகக் கொண்டு திருவிழா நடத்துவது வழக்கம்.

உஜ்ஜயினி மகா காளி

உஜ்ஜயினி மகா காளி


உஜ்ஜயினி மகா காளி கோவில் இங்கே இறந்த உடலின் சாம்பலை கொண்டு தான் காளி தேவிக்கு ஆர்த்தியே எடுக்கின்றனர். கால பைரவர் கோவில், ஜ்வாலாமுகி கோவில், மகாகாலேஸ்வரர் கோவில் போன்றவற்றின் தாந்திரீக சிறப்புகள் தெரியுமா ?. அன்னை பார்வதி தேவியின் உடல்பாகம் பூலோகத்தில் விழுந்ததை கொண்டு ஒவ்வொரு சக்தி பீடங்களாக எல்லா இடங்களிலும் வழிபாடு செய்கின்றனர். எண்ணற்ற தாந்திரீகர்கள் இதற்காக மந்திரங்கள் ஓதி அன்னையை தரிசித்து வருகின்றனர்.

ஏக்லிங்க்

ஏக்லிங்க்

நாட்டிலேயே நான்கு முகங்களைக் கொண்ட கருப்பு பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்ட சிவன் உள்ள தலம் ராஜஸ்தானில் உள்ள ஏக்லிங்க் கோவில் தான். இந்த கோவில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் உள்ளது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் ஏராளமான தாந்திரீகவாதிகள் இத்தலத்தில் ஒன்றுகூடி சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

பாலாஜி கோவில்

பாலாஜி கோவில்


ராஜஸ்தானில் தாந்திரீக சடங்குகளுக்கு பிரசிதிபெற்ற தலம் தான் பாலாஜி கோவில். ஜெய்ப்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள பரத்பூர் என்ற இடத்தில் இது அமைந்துள்ள இங்கே போகின்ற வழியில் எல்லாம் எண்ணிலடங்காத மக்களுக்கு சாமியார் தோற்றம் கொண்ட சிலர் பேயோட்டுவதை காணலாம். பார்க்கும் போது நமக்கே உடல் சிலிர்க்க இந்த பேயோட்டும் செயல் நடந்து கொண்டிருக்கும். ஆக்ரோஷமும், கதறலும் தான் நாம் போகும் வழியெல்லாம் காதில் கேக்கும்.

வைத்தல் கோவில்

வைத்தல் கோவில்


ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் எட்டாம் நூற்றாண்டைஙச சேர்ந்த கோவில் இந்த வைத்தல். மாந்ரீகத்திற்கு பேர் போன இக்கோவிலில் உள்ள அம்மனை சாமுண்டா என்று அழைக்கின்றனர். இந்த அம்மன் கால்களில் மனித மண்டை ஓட்டால் ஆன அணிகலனை அணிந்து கொடூரமாகக் காட்சியளிக்கிறது. பழம் பெரும் மந்திர தந்திர முறைகளையும் சக்தி வாய்ந்த வரலாறும் இக்கோவிலின் சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாகாலேஸ்வர் கோவில்

மகாகாலேஸ்வர் கோவில்


மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த கோவில் இது. இங்கே பெரிய மதிலால் சூழப்பட்ட இடத்தில் கருவறைக்கு மேலே விமான சிற்ப வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே சிவலிங்கத்தை மூலவராகக் கொண்ட இத்தலத்தில் நிறைய விழாக்களும், பூஜைகளும் நடைபெற்றாலும், சாம்பல் சடங்கு விழா பிரபலமானது. சாம்பல் சடங்கு செய்யும் நாட்களில் பிணத்தின் சாம்பலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த சாம்பல் சுற்றியுள்ள எல்லா சுடுகாட்டில் இருந்தும் கொண்டு வரப்பட்டு செய்யப்படுகிறது. இதன் மூலம் அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைகிறது என நம்பப்படுகிறது. இந்த கோவிலின் மேல் தளம் எப்பொழுதும் மூடப்பட்டே இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அதாவது நாக பஞ்சமி நாளிக்கு மட்டுமே இது திறக்கப்பட்டு மக்கள் அணுமதிக்கப்படுவர். இங்கே இரண்டு நாகங்கள் சேர்ந்த படத்தை கொண்டு சக்தி வாய்ந்த மந்திர தந்திரங்களை ஓதி கோரிநாத்கள் வழிபாடு செய்கின்றனர்.

மதுகுடிக்கும் கால பைரவர்

மதுகுடிக்கும் கால பைரவர்


மத்திய பிரதேசம், உஜ்ஜைனில் உள்ள கால பைரவர் கோவிலில் கருப்பு முகத்தால் ஆன கால பைரவர் சிலையைக் கொண்டு வழிபாடு நடத்தப்படுகின்றனது. தாந்திரீகம், வசியம், பாம்பாட்டி வித்தை போன்றவற்றிற்கு பிரசிதிபெற்ற இங்கே இருக்கும் மற்றொரு வழக்கம் கால பைரவருக்கு மது கொடுக்கப்படுகின்றன. பூசாரியிடம் பக்தர்கள் மதுபாட்டில்களை கொடுக்கிறார்கள், அதை அவர் திறந்து ஒரு தட்டில் ஊற்றி கால பைரவரின் வாயருகே வைத்தால் சிலையானது முழு மதுவயும் உறிஞ்சிக் கொள்ளும் அதிசயம் நிகழ்கிறது.

பஜிநாத் கோவில்

பஜிநாத் கோவில்


இமாச்சல பிரதேசத்தில் பிரசிதிபெற்ற கோவில்களில் ஒன்றுதான் இந்த பஜிநாத் கோவில். இங்கே சிவபெருமான் வைத்தியநாதர் என்ற லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இங்கே கோவில் அமைக்கப்படுவதற்கு முன்பு சிவன் ஒரு மருத்துவராக வாழ்ந்து வந்ததாக நம்மப்பட்டு வருகிறது. பண்டைய கோவில் என்பதால் ஏராளமான மக்கள் இதைக் காண வருகின்றனர். தாந்திரீகர்கள் மற்றும் யோகிகள் இங்கு பயணம் செய்து சிவனின் சக்திகளை பெற்று வந்தனர். பல நோய்களையும் குணப்படுத்தி வந்தனர். இங்குள்ள தண்ணீர் தான் சுற்றியுள்ள கங்கிரா மலை மக்களுக்கு நீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது.

ஜ்வாலாமுகி கோவில்

ஜ்வாலாமுகி கோவில்


இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜ்வாலாமுகி கோவில் தாந்திரீக வேலைக்கு பெயர் போனது. ஏராளமான மக்கள் தாந்திரீக வாதிகளை பின்பற்றி அருள் பெறுகின்றனர். சக்தி வாய்ந்த மந்திரங்களும் கட்டுப்பாடுகளும் மேற்கொள்ளப்படுகிறது. நிறைய படிக்கட்டுகள் தாங்கிய குகை போன்று கோவில் செல்கிறது. இங்கே ஒரு தெளிவான நீரோடை போன்று இரண்டு குளங்கள் இருக்கிறது. இந்த குளத்திற்கு அருகில் உள்ள செம்பு குழலின் வழியாக மூன்று தீ ஜ்வாலைகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அங்கே அடிக்கும் குளிர்க்கு இந்த வெதுவெதுப்பான நீராடல் உங்களுக்கு உற்சாகத்தை அழிக்கிறது. இங்கே தாந்திரீகர்கள், பக்தர்கள் எல்லாம் நீராடி அம்மனின் சக்தியை பெறுகின்றனர்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X