Search
  • Follow NativePlanet
Share
» »தெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பின்னணி தெரியுமா ?

தெலுங்கானாவையே கட்டியாளும் நல்கொண்டா பின்னணி தெரியுமா ?

ஆதியில் நீலகிரி என்ற பெயரால் அழைக்கப்பட்ட நல்கொண்டா இன்னும் பல சிறப்பு அம்சங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. இதுகுறித்தும் தெரிந்துகொள்ள பயணிக்கலாம் வாங்க.

தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரமே இந்த நல்கொண்டா. கருப்பு மலை என்ற பொருளைத்தரும் நல்ல மற்றும் கொண்டா எனும் இரண்டு தெலுங்கு வார்த்தைகளை இணைந்து இந்த பெயர் பிறந்துள்ளது. உள்ளூர் மக்களால் கருப்பு மலை எனப்படும் இந்த நகரம் ஆதியில் நீலகிரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல சிறப்பு அம்சங்களையுடைய நல்கொண்டா குறித்தும், ஆந்திராவிற்கு இப்பகுதி ஆற்றிவரும் பங்குகள் குறித்தும் தெரிந்துகொள்ள பயணிக்கலாம் வாங்க.

நல்லகொண்டா

நல்லகொண்டா

பாமனி அரசர்களின் ஆட்சியின்போது இந்நகரம் நல்லகொண்டா-வாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னாளில் நிஜாம் மன்னர்களின் ஆட்சியில் இது நிர்வாக வசதிக்காக நல்கொண்டா என மாற்றப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது. உள்ளூர் மக்கள் இன்னமும் நல்லகொண்டா என்றே இந்த நகரத்தை அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா சுதந்திரப்போராட்ட கவிதைகளிலும் இந்த ஊர் நல்லகொண்டா என்றே சொல்லப்பட்டிருப்பதுடன் இப்படித்தான் எழுதவேண்டுமென்பதும் பலரது விருப்பமாக உள்ளது.

Avsnarayan

தெலுங்கானா

தெலுங்கானா


தற்போதும் கூட நல்லகொண்டா நகரமானது தெலுங்கானா இயக்கத்தின் கேந்திரமாகவே விளங்குகிறது. நல்லகொண்டா மற்றும் வாரங்கல் மாவட்டத்தை சுற்றியே இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்கள் இந்த இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

wikipedia

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


இன்று சுற்றுலா அடிப்படையில் பார்க்கும்போது தெலுங்கானா மாநிலத்தில் ஒரு முக்கிய நகரமாக நல்கொண்டா பிரசித்தி பெற்றுள்ளது. வேறு எந்த தொழில்களையும் பொருளாதார ரீதியாக சார்ந்திராததால் சுற்றுலாத்தொழில் மட்டுமே இந்த நகரத்தின் முக்கிய வருவாய் அம்சமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Adityamadhav83

முக்கிய சுற்றுலாத் தலங்கள்

முக்கிய சுற்றுலாத் தலங்கள்


மட்டபள்ளி, பில்லலமரி, ராஜீவ் பார்க், பாணிகிரி பௌத்த ஸ்தலங்கள், பனகல் கோவில், நந்திகொண்டா, கொல்லன்பாகு ஜெயின் கோவில், ரச்சகொண்டா கோட்டை, மெல்லசெருவு, தேவரகொண்டா மற்றும் புவனகிரி கோட்டை போன்ற முக்கியமான சுற்றுலா அம்சங்கள் இந்த நகரத்தில் இடம் பெற்றுள்ளன.

Brahmanand Reddy

மெல்லசெருவு

மெல்லசெருவு


மெல்லசெருவு எனும் இந்த கிராமம் நல்கொண்டா மாவட்டத்தில் நல்கொண்டா நகரத்துக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த கிராமம் ஒரு ஓடையின் மூலம் விஜயவாடா நகரத்துடன் இணைக்கப்பட்டிருப்பது ஒரு சுவாரசியமான அம்சமாகும். வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இக்கிராமத்தில் காகதீய அரசர்கள் கட்டிய பல கட்டிடக்கலை சின்னங்கள் காணப்படுகின்றன. பல கோவில்கள் இந்த மெல்லசெருவு கிராமத்தில் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுயம்பு ஜம்புலிங்கேஸ்வர சுவாமி கோவில் குறிப்பிடத்தக்கதாகும்.

BALU11

தென்னாட்டு வாரணாசி

தென்னாட்டு வாரணாசி


ஜம்புலிங்கேஸ்வரா கோவில் லிங்கத்தில் உள்ள 2 அங்குல துவாரத்தில் எப்போதுமே நீர் நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பு காரணமாக இந்த மெல்லசெருவு கிராமம் தென்னாட்டு வாரணாசி என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது. இந்த கோவிலின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டு வருவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.

Ranju.barman

பில்லலமரி

பில்லலமரி


நல்கொண்டா மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம் பில்லலமரி. இங்கு காகதீய வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள கோவில்களுக்கு இந்த கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த சிறிய கிராமத்தின் உன்னதமான வரலாற்றுப்பின்னணியை எடுத்துரைக்கும் விதத்தில் இந்த அழகிய கோவில்கள் வீற்றுள்ளன.

Avsnarayan

புவனகிரி கோட்டை

புவனகிரி கோட்டை


திரிபுவனமல்ல விக்ரமாதித்யா எனும் சாளுக்கிய மன்னரால் இந்த புவனகிரி கோட்டை 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. தனது சாம்ராஜ்ஜியத்தின் பாதுகாப்பு கருதி இந்த கோட்டையை அம்மன்னர் நிர்மாணித்துள்ளார். 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு பிரம்மாண்ட மலைப்பாறையின்மீது 500 மீ உயரத்தில் இந்த கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களுடனும் தோற்றத்துடனும் காட்சியளிப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த புவனகிரி கோட்டை பிரசித்தமாக அறியப்படுகிறது.

Moses Manobhilash

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X