Search
  • Follow NativePlanet
Share
» »மத்தியும், உத்திரப் பிரதேசமும் தனிமாநிலம் கேட்க காரணமே இந்த ஊர் தான்!

மத்தியும், உத்திரப் பிரதேசமும் தனிமாநிலம் கேட்க காரணமே இந்த ஊர் தான்!

மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி எது என தெரியுமா ?

மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் நிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. பேத்வா என்னும் ஆற்நங்கரை ஓரம் அமைந்துள்ள இந்த ஊர் முன்னொரு காலத்தில் புந்தேலா ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்துள்ளது. தற்போது, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கக் காரணமே இந்த நகரம் தான் என்றால் மிகையாகாது. அப்படி இந்த நகரத்தில் என்னதான் உள்ளது ?. பிற பெரிய மாநிலங்களே இந்த நகரை முன்னோடியாக எடுத்துக் கொள்ள என்ன காரணம் ?. வாருங்கள் ஓர்ச்சாவில் என்னதான் உள்ளது என அறிந்துகொள்ள பயணிப்போம்.

ஷீஷ் மஹால்

ஷீஷ் மஹால்


ராஜ் மஹால் மற்றும் ஜெஹாங்கீர் மஹால் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கிறது ஷீஷ் மஹால். 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராஜா உதைத் சிங் தங்குவதற்கென கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடம் தான் இது. ஆனால், தற்போது அந்த கட்டிடத்தின் பல புராதானச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது. மீதி இருக்கும் இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடமும், உணவகமும் செயல்பட்டு வருகிறது.

Yann

மஹாராஜா ருத்ர பிரதாப் சிங்

மஹாராஜா ருத்ர பிரதாப் சிங்


இந்நகரின் ஆட்சியாளராக விளங்கிய மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களால், 1501-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஊர்ச்சா என அழைக்கப்படும் ஓர்ச்சா, திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மாநிலம், மத்தியப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது. ஓர்ச்சா, பெட்வா நதிக்கரையில், ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும், திகம்காரிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

R. Hotz

ஓர்ச்சா கோட்டை

ஓர்ச்சா கோட்டை


ஓர்ச்சா கோட்டை என்றழைக்கப்படும் மற்றொரு கோட்டையும் மஹாராஜாவால் கட்டப்பட்டுள்ளது. ராஜ வம்சத்தின் மற்றொரு அங்கத்தினரான ராணி கணேஷா பாய், சதுர்புஜ் கோவிலை முகாலயப் பேரரசரான அக்பரின் ஆட்சிக்காலத்தின் போது இங்கே நிறுவியுள்ளார். மேலும், இன்று நகரின் மற்றொரு ஆன்மீக அடையாளமாகத் திகழும் ராஜா மந்திர், மதுகர் ஷா அவர்களால் 1554 முதல் 1591 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.

Vadaykeviv

பீரங்கிப்படையுடன் குட்டித் தீவு

பீரங்கிப்படையுடன் குட்டித் தீவு


பெட்வா நதியால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தீவானது, பீரங்கிப்படைப் பாதுகாப்புடன் கூடிய சுவர்களால் சூழப்பட்டுள்ள ஒரு அரண்மனைக் கோட்டையின் இருப்பிடமாகவும் உள்ளது. மஹாராஜா பிர் சிங் தியோ தன் ஆட்சிக்காலத்தின் வெவ்வேறு காலகட்டங்களின் போது கட்டிய பல்வேறு கட்டிடங்களும் இக்கோட்டையில் காணப்படுகின்றன. இக்கட்டிடங்களின் தனித்தன்மையே கோட்டைகளும், கட்டிடங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. சாத்ரிகள் என்றழைக்கப்படும், சமாதியின் மேல் அல்லாமல் வேறிடத்தில் அமைக்கக்கூடிய நினைவிடங்கள் பலவும் பெட்வா நதிக்கரையில், கோட்டைக்கு அருகே காணப்படுகின்றன.

Vadaykeviv

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


மஹாலக்ஷ்மி கோவில்

மஹாலக்ஷ்மி கோவில் முப்பெரும் தேவிகளில் ஒருவரான லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். லக்ஷ்மி தர்வாஜாவுக்கு வெளிப்புறத்தில், லக்ஷ்மி தல்லிற்கு அருகில் உள்ள இந்த அற்புதமான கோவில், 1769 ஆம் ஆண்டில் ஜான்ஸியின் சுபேதாராக விளங்கிய விஷ்வாஸ் ராவ் லக்ஷ்மண் நீக்கத்தைத் தொடர்ந்து, சுபேதாராக பதவியேற்றுக் கொண்ட ரகுநாத் ராவ் நெவால்கர் அவர்களால் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. லக்ஷ்மி தேவியின் பக்தர்களுக்கு மட்டுமின்றி வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பலருக்கும் மிக விருப்பமான இடமாகவும் இது விளங்குகிறது.

vishaka jayakumar

ஜான்ஸி கோட்டை

ஜான்ஸி கோட்டை


ஜான்ஸி கோட்டை, ஓர்ச்சாவின் ராஜா பிர் சிங் தியோ-வால் 1613-ஆம் ஆண்டில், பாறைகளாலான மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது சுற்றிலும் சுமார் 16 முதல் 20 அடி வரையிலான உயர்ந்த, திடமான, அரண் போன்ற கிரானைட் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இச்சுவர்களில் சுமார் 10 நுழைவு வாயில்கள் காணப்படுகின்றன. இந்நுழைவு வாயில் ஒவ்வொன்றும் ஒரு ஆட்சியாளரின் பெயரையோ அல்லது ராஜ்ஜியத்தின் முக்கிய அடையாளச் சின்னங்களுள் ஒன்றின் பெயரையோ கொண்டுள்ளது.

Aarosh0

நுழைவு வாயில்கள்

நுழைவு வாயில்கள்


ஜான்ஸி கோட்டையின் இந்நுழைவு வாயில்கள், ஒவ்வொன்றும் சந்த் நுழைவு வாயில், தாட்டியா தர்வாஜா, ஜர்னா நுழைவு வாயில், லக்ஷ்மி நுழைவு வாயில், ஓர்ச்சா நுழைவு வாயில், சாகர் நுழைவு வாயில், உன்னாயோ நுழைவு வாயில், கந்தேராவ் நுழைவு வாயில் மற்றும் சைன்யார் நுழைவு வாயில் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

Jean-Pierre Dalbéra

கணேஷ் மந்திர்

கணேஷ் மந்திர்


கணேசருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள கணேஷ் மந்திரில் தான், 1842 ஆம் ஆண்டு ராஜா கங்காதர் ராவுடனான ராணி லக்ஷ்மி பாயின் திருமணம் நடைபெற்றது. மணமாவதற்கு முன் மணிகர்னிகா என்ற பெயரில் பிறந்தகத்தில் அழைக்கப்பட்டு வந்த இவர், திருமணத்திற்குப் பின் ராணி லக்ஷ்மி பாய் என்று முறையாக பெயரிடப்பட்டுள்ளார்.

Yann

கோட்டை காக்கும் கோவில்

கோட்டை காக்கும் கோவில்


ஜான்ஸி கோட்டையின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கணேசர், இந்த கோட்டை, அதில் வாழ்வோர் மற்றும் இந்நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்குவதாக நம்பப்படுகிறது. இது குவிந்த கூரை போன்ற அமைப்புடன் காணப்பட்டாலும், இதன் கட்டுமான பாணியும், தனித்தன்மை வாய்ந்த இதர குணங்களும் இக்கோவில், கோட்டை கட்டப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்டதை உணர்த்துகின்றன. கணேஷ் கோவில், ஆன்மீக பயணிகள் மட்டுமல்லாது சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில், மன விருப்பத்தோடு வந்து செல்லும் ஓர் தலமாக விளங்குகிறது.

Prasann kanade

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ஜான்ஸி பகுதி உத்தரப்பிரதேசத்தின் பிரதான நகரங்கள் மற்றும் பிற நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலை 25 மற்றும் 26 ஆகியவற்றின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 143 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாலியர் விமான நிலையமே இதற்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் ஆகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X