• Follow NativePlanet
Share
» »ஆந்திரா போய்ட்டு இங்க போகாம வந்தா எப்படி ?

ஆந்திரா போய்ட்டு இங்க போகாம வந்தா எப்படி ?

Written By:

ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ஓஷன் பார்க் நாட்டிலுள்ள இரண்டாவது மிகப்பெரிய உல்லாச பொழுதுபோக்கு பூங்காவாக அறியப்படுகிறது. நன்கு பராமரிக்கப்பட்டு அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளையும் சுத்தமான நீர் நிறைந்து காணப்படும் நீர்த்தடாக அமைப்புகளையும் இது கொண்டுள்ளது. தூய்மையான சூழலை கொண்டிருப்பதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே இந்த பொழுதுபோக்கு பூங்கா பிரபலமாக அறியப்படுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் பிடித்தமான பொழுதுபோக்கு உபகரண வசதிகளும் கட்டமைப்புகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேலும், இதன் அருகே இன்னும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவை அனைத்திற்கும் சென்று வரலாம்..

ஓஷன் பார்க்கில் விளையாட்டுக்கள்

ஓஷன் பார்க்கில் விளையாட்டுக்கள்


குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களில் பாதுகாப்பு அம்சங்கள் கவனமுடன் நடைமுறைகள் ஓஷன் பார்க்கில் பின்பற்றப்படுகின்றன. பலவகை இயந்திரச்சவாரிகளோடு நீர்ச்சறுக்கு சவாரிகளும் இங்கு அதிகம் உள்ளன. தங்கள் விருப்பத்திற்கேற்ப சவாரி அமைப்புகளில் பயணிகள் இங்கு உல்லாச பொழுதுபோக்கில் ஈடுபடலாம். டீ கப் சவாரி, ஏர் டிராப்ஸ், ஷிப்ஸ் அன்ட் டிரெய்ன்ஸ் மற்றும் ஓசன் பூல் போன்ற அம்சங்கள் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. எல்லா பொழுதுபோக்கு இயந்திர அமைப்புகளிலும் உல்லாசத்தோடு பாதுகாப்பு அம்சங்களையும் உறுதிசெய்யும் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

எப்படிச் செல்லலாம் ?

நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள இந்த பொழுதுபோக்கு பூங்கா ஓஸ்மான் ஏரிக்கு அருகிலேயே உள்ளது. ஓஸ்மான் ஏரியும், அதனருகில் இருக்கும் இந்தப் பூங்காவும் ஹைதராபாத்தின் மிக முக்கிய பொழுதுபோக்குத் தலங்களாகும்.

Raiwlofira

பப்பிகொண்டலு மலைகள்

பப்பிகொண்டலு மலைகள்


ஆந்திராவிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் பப்பி கொண்டலு எனப்படும் இந்த மலைத்தொடர் கம்மம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியின் பள்ளத்தாக்கு சமவெளிகளின் அழகு காஷ்மீர் பகுதியின் அழகுக்கு இணையாக புகழ் பெற்றுள்ளது. கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேடக், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் அங்கமாகவும் இந்த மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்த மலைத்தொடர் பிரிப்பு எனும் பொருள் தரக்கூடிய பப்பிடி கொண்டலு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. கோதாவரி ஆற்றை இரண்டாக பிரிக்கும்படியாக அமைந்திருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் வேறு சிலரின் கருத்துப்படி, வானிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் தலைமுடி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டதுபோன்று இந்த மலைத்தொடர் காட்சியளிப்பதால் இந்த பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பப்பி கொண்டலு மலைகளில் அமைந்துள்ள முனிவாட்டம் எனும் ரம்மியமான நீர்வீழ்ச்சியும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிவாசிகள் வசிக்கும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியானது நிசப்தம் நிலவும் சூழல் மற்றும் கன்னிமை கெடாத இயற்கை எழிலுடன் ஜொலிக்கிறது. இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் அமைதியான குணம் உடையவர்களாகவும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்விதத்தில் இடைஞ்சல் தராதவர்களாகவும் விளங்குகின்றனர்.

Pranayraj1985

நேரு ஜுவாலஜிகல் பார்க்

நேரு ஜுவாலஜிகல் பார்க்


ஹைதராபாத் நகரத்தில் மீர் ஆலம் குளத்துக்கருகில் அமைந்துள்ள இந்த நேரு ஜுவாலஜிகல் பார்க் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பெயர் பெற்றுள்ளது. சொல்லப்போனால் ஹைதராபாத் நகரத்தின் மூன்று முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். 1959-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த வனவிலங்கு பூங்கா 1963-ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது. இந்த பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊர்வன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. புலி, சிறுத்தை, ஆசியச்சிங்கம், மலைப்பாம்பு, உராங்குடான் குரங்கு, முதலை, காட்டெருமை, கலை மான், மான் மற்றும் இந்திய காண்டாமிருகம் போன்ற விலங்குகள் இங்கேயே வளர்க்கப்பட்டு இனப்பெருக்கம் செய்விக்கப்படுகின்றன. இங்குள்ள விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இயற்கையான வாழ்விடச்சூழல் கிடைக்கும்படியாக இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. காட்டு விலங்குகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான கல்விக்கூடம் போன்று அமைந்துள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் தவறாமல் இந்த வனவிலங்கு பூங்காவுக்கு விஜயம் செய்கின்றனர். தினசரி இந்த பூங்காவில் யானைச்சவாரி மற்றும் காட்டுச்சுற்றுலா (சஃபாரி) போன்றவை பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இயற்கை வரலாறு பற்றிய காட்சிப்பொருட்களை கொண்டிருக்கும் ஒரு விசேஷ அருங்காட்சியகமும் இந்த வனவிலங்கு பூங்காவில் உள்ளது.

Sashank.bhogu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more