Search
  • Follow NativePlanet
Share
» »ஆந்திராவில் உள்ள அடுத்த காஷ்மீர்... சுற்றிப்பார்க்கலாம் வாங்க..!

ஆந்திராவில் உள்ள அடுத்த காஷ்மீர்... சுற்றிப்பார்க்கலாம் வாங்க..!

ஆந்திராவிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக கருதப்படும் பப்பி கொண்டலு எனப்படும் மலைத்தொடர் கம்மம் பகுதியில் அமைந்துள்ளது. ஆந்திராவில் பிரசிதிபெற்ற இத்தலத்தில் என்ன உள்ளது என பார்க்கலாமா ?

நாட்டில் மிகவும் குளிர்ச்சியான வருடம் முழுவதும் பணிகளால் நிறைந்த மலைத்தொடர் என்றால் அது காஷ்மீர் மலைத் தொடர்தான். இன்னும் எத்தனையோ குளிர்ந்த மலைப்பிரதேசம் நம் நாட்டில் இருந்தாலும் காஷ்மிருக்கு இணையான இன்னொரு மலைப் பகுதி என்றால் அது பப்பி கொண்டலு மலை தான். ஆந்திராவிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தலமாக உள்ள இந்த மலைத்தொடர் கம்மம் பகுதியில் அமைந்துள்ளது. சரி வாருங்கள், அப்படி அங்கே என்னதான் உள்ளது என பார்க்கலாம்.

பப்பி கொண்டலு

பப்பி கொண்டலு


பப்பி கொண்டலு பள்ளத்தாக்கு சமவெளிகளின் அழகு காஷ்மீர் பகுதியின் அழகுக்கு இணையாக புகழ் பெற்றுள்ளது. கம்மம் நகரத்திலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேடக், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் அங்கமாகவும் இந்த மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. கோதாவரி ஆற்றை இரண்டாக பிரிக்கும்படியாக அமைந்திருப்பதால் பிரிப்பு என்னும் பெயரையும் கொண்டுள்ளது. இருப்பினும் வேறு சிலரின் கருத்துப்படி, வானிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் தலைமுடி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது போன்று இந்த மலைத்தொடர் காட்சியளிப்பதால் இந்த பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

B.K.Viswanadh

நீர்வீழ்ச்சி

நீர்வீழ்ச்சி


பப்பி கொண்டலு மலைகளில் அமைந்துள்ள முனிவாட்டம் எனும் ரம்மியமான நீர்வீழ்ச்சி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது. மலை வாசிகள் வசிக்கும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப் பகுதியானது பசுமையும், அமைதியும் நிறைந்த சூழல் மற்றும் இயற்கை எழிலுடன் ஜொலிக்கிறது. இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் அமைதியான குணம் உடையவர்களாகவும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்விதத்தில் இடைஞ்சல் தராதவர்களாகவும் விளங்குகின்றனர்.

Avenue

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


கம்மம் கோட்டை

கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டதாகும். இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை. அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர். மேலும், பின்னாளில் 1531ம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர். இந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த கோட்டை அமைப்பில் பார்க்க முடிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.

Shashank.undeela

பாலாயிர் ஏரி

பாலாயிர் ஏரி


ஆந்திர மாநிலத்தில் கம்மம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பாலாயிர் ஏரி இந்தியாவிலுள்ள அழகான ஏரிகளுள் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. கம்மம் மாவட்டத்தில் குசுமஞ்சி தாலுக்காவில் உள்ள பாலாயிர் எனும் கிராமத்தின் ஒரு பகுதியாக இந்த ஏரி வீற்றுள்ளது. கம்மம் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரியை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். மனித முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை ஏரி நாகார்ஜுனசாகர் அணைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவும் செயல்படுகிறது. லால் பகதூர் கால்வாய் என்று அழைக்கப்படும் ஒரு கால்வாய் மூலமாக இணைக்கப்பட்டு ஒரு உபரி நீர்த்தேக்கமாக இந்த ஏரி பயன்படுத்தப்படுகிறது. 1748 ஹெக்டேர் பரப்பளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஏரி 2.5 டி.எம்.சி நீரை சேமிக்கக்கூடிய கொள்ளளவை கொண்டுள்ளது. பலவித நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த பாலாயிர் ஏரி கம்மம் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. பாலாயிர் ஏரிக்கு வெகு அருகிலேயே வய்ரா ஏரி என்ற மற்றொரு பிரசித்தமான பிக்னிக் தலமும் அமைந்துள்ளது. கம்மம் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்த ஏரிப்பகுதிகளுக்கு ஓய்வாக பயணம் செய்து இந்த சூழலின் இயற்கை அழகை ரசித்து மகிழலாம்.

Pranayraj1985

ஜமாலபுரம் கோவில்

ஜமாலபுரம் கோவில்


கம்மம் நகரத்திலிருந்து 120 கிலோ தொலைவில் உள்ள இந்த ஜமாலபுரம் கோயிலுக்கு கம்மம் சின்ன திருப்பதி கோவில் என்ற சிறப்புப்பெயரும் உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த கோவிலை கட்டிய பெருமை விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயருக்கு உள்ளது. வெங்கடேஸ்வர கடவுளுக்காகவே இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1000 வருடங்கள் பழமையான கோவில் என்பதால் இது யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. விஷ்ணு பக்தர்கள் மிக விரும்பும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவிலுக்கு மிக அருகிலேயே சூசிகுட்டா எனும் மலை அமைந்துள்ளது. இது ஜபாலி முனிவருடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இந்த மலையில் கடுந்தவத்தில் இந்த ஜபாலி முனிவர் ஈடுபட்டதாகவும் இறுதியில் இவரது தவத்தை மெச்சி வெங்கடேஸ்வரர் தரிசனமளித்து வரங்கள் அருளியதாகவும் புராணிகக்கதை கூறுகிறது.

Jamalapuram Temple

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X