Search
  • Follow NativePlanet
Share
» »கோட்டைக்குள் அரண்மனை..! பார்வதி அம்மனுக்கு அருங்காட்சியகம்! இன்னும் என்னவெல்லாம் உள்ளது ?

கோட்டைக்குள் அரண்மனை..! பார்வதி அம்மனுக்கு அருங்காட்சியகம்! இன்னும் என்னவெல்லாம் உள்ளது ?

ஒரு கோட்டைக்குள்ளேயே ஓர் அரண்மனை இருக்கும் ஆச்சரிய நிகழ்வு யாருக்கேனும் தெரியுமா ?. இந்தியாவுல இந்தமாதிரியாக அம்சங்கள் எல்லாம் எங்க இருக்குன்னு பார்க்கலாம் வாங்க.

பொதுவாக, மிகப் பெரிய கட்டிடம், மன்னர் காலத்து கட்டிடங்கள், கலைநயமிக்க கோட்டை, அரண்மனை என ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களையும் நாம் வகைப் படுத்தி வைத்துள்ளோம். இதில், மன்னர்களின் காலத்து கட்டிடம் கோட்டை அல்லது அரண்மனைகள் என பரவலாக அழைத்து வருகிறோம். ஆனால், ஒரு கோட்டைக்குள்ளேயே ஓர் அரண்மனை இருக்கும் ஆச்சரிய நிகழ்வு யாருக்கேனும் தெரியுமா ?. அதுமட்டும் இல்லைங்க, இந்த அரண்மனைக் கோட்டை அமைந்துள்ள ஊரிலேயே பார்வதி அம்மனுக்கு ஓர் அருங்காட்சியகமும் வைச்சுருக்காங்க. இந்தியாவுல இந்தமாதிரியாக அம்சங்கள் எல்லாம் எங்க இருக்குன்னு பார்க்கலாம் வாங்க.

மகாராஸ்டிராவின் சொர்க்க வாசல்

மகாராஸ்டிராவின் சொர்க்க வாசல்


மகாராஸ்டிராவில் கட்டிடக்கலையும், பாழடைந்த கோட்டைகளும், ஆன்மிகத் தலங்களும் என பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது புனே. இது மகாராஸ்டிராவின் சொர்க்கவாசல் என்றே கூறலாம். கார்லா மற்றும் பாஜா என்ற இடங்களில் புத்த குகைக் கோவில்கள், இயற்கை ரசிகர்களுக்காக எம்ப்ரஸ் தாவரப் பண்ணைத் தோட்டம், குடும்பத்துடன் சென்று மகிழ இன்னும் ஏராளமானத் தலங்கள் இங்கே நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் புனேவில் தான் வேறெங்கும் காணக்கிடைக்காத கோட்டையின் உள்ளே அரண்மனையும், பார்வதி தெய்வத்திற்கு அருங்காட்சியகமும் உள்ளது.

PavelChatterjee

பார்வதி மலைக்கோவில்

பார்வதி மலைக்கோவில்


புனேவில், ஓர் மலையின் உச்சியில் காணப்படும் பார்வதி மலைக்கோவில் சுமார் 17-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக அறியப்படுகிறது. இத்தலத்தில் கணபதி, பார்வதி உள்ளிட்ட தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் பேஷ்வா மன்னர்கள் மட்டுமே வணங்கிவந்த இந்தக் கோவில் பின்னர் பொது மக்களுக்கும் திறந்து விடப்பட்டதாக வரலாறு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருடந்தோறும், இத்தலத்தில் அருள்பாலிக்கும் பார்வதி அம்மையாரை வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலின் அருகில் பார்வதி அருங்காட்சியகம் என்ற பெயரில் பார்வதி தெய்வத்துக்கான ஒரு அருங்காட்சியகமும் காணப்படுகிறது.

Siddhesh Nampurkar

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


புனே நகரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் தான் பார்வதை மலைக் கோவில் அமைந்துள்ளது. புனே - சத்தர் சாலையில் இருந்து ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் சாலையில் நுழைந்து அங்கிருந்து லட்சுமி நகர் சாலையை அடைய வேண்டும். நகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் எளிதாக இப்பகுதியை அடைய போக்கவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Tehniyatshaikh

விஸாபூர் கோட்டை

விஸாபூர் கோட்டை


புனேயில் அமைந்துள்ள விஸாபூர் கோட்டை லோஹாகட்-விஸாபூர் எனும் இரண்டு கோட்டைகளை உள்ளடக்கியது. விஸாபூர் கோட்டை பேஷ்வா வம்சத்தின் முதன் மன்னர் பாலாஜி விஸ்வநாத் என்பவரால் கட்டப்பட்டதாகும். இக்கோட்டைகள் பல நுட்பமான குகை அறைகளையும், தூண்களையும், உயர்ந்த சுவர்களையும் பழமையான வாழிடங்களையும் கொண்டுள்ளது. கோட்டைக்குள் பல இடங்களில் ஆஞ்சநேயருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன. பேஷ்வாக்களின் அரண்மனை ஒன்றும் இக்கோட்டைக்குள் பாழடைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோட்டையானது சத்வாகனர்கள், சாளுக்கியர்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் போன்ற பல ராஜ வம்சங்களின் ஆட்சியில் பங்கேற்ற பெருமையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Elroy Serrao

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


புனேவில் இருந்து சுமுர் 63 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விஸாபூர் கோட்டை. புனேவில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 48-யில் பயணித்து மும்பை தேசிய நெடுஞ்சாலையை அடைந்து அங்கிருந்து வடகோன், தேவ்கர் பகுதியைக் கடந்தார் இத்தலத்தை அடையலாம். உள்ளூர் வாடகைக் கார்கள் மலம் இப்பகுதிக்குச் செல்வது நேரத்தையும், பயண அழைச்சலையும் குறைக்கும்.

Sumedh.dorwat

பாடாலேஷ்வர் கோவில்

பாடாலேஷ்வர் கோவில்


எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுமார் 1400 ஆண்டுகள் பழமையான கோவில் பாடலேஷ்வர் கோவில். பாடலேஷ்வர் என்ற தெய்வத்தின் பெயரால் இந்தக் கோவில் அழைக்கப்படுகிறது. அதாவது பாதாளக் கடவுள் என்பது அதன் பொருள். இந்தக் கோவிலானது அதன் கட்டிடக்கலை வடிவமைப்பில் எலிபண்டா மற்றும் எல்லோரா குகைக் கோவில்களை ஒத்திருக்கிறது. இதன் ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில் இது ஒரே ஒரு பெரிய பாறையிலிருந்து உருவாக்கப்பட்டிருப்பது தான். இந்த குகைக் கோயிலின் உள்ளே ஒரு அழகான சிவலிங்கம் உள்ளது. பாடாலேஷ்வர் கோவிலை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தரிக்கலாம்.

Karthik Easvur

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


புனே நகரத்தின் மிக அருகில், சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த படாலேஷ்வர் கோவில். ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ அல்லது வாடகை கால்டாக்சி மூலம் எளிதில் இக்கோவிலையும், குறையையும் அடையலாம்.

Khoj Badami

பழங்குடி அருங்காட்சியகம்

பழங்குடி அருங்காட்சியகம்


புனே மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடி அருங்காட்சியகம் ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். புனேவில் இருந்து கிழக்கே கோரேகான் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பழங்குடி இனத்தவரின் கலையம்சங்கள் மற்றும் பண்பாட்டு ஆவணங்களின் மையமாக திகழ்கிறது. பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த அருங்காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது. பழங்குடி இனத்தவர் பயன்படுத்திய பல விதமான ஆயுதங்கள், கலைப்பொருட்கள் போன்றவை இங்கு நம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மராய், தண்டேஸ்வர், பாஹிராம் மற்றும் வாஹ்தியோ பழங்குடி வம்சங்களின் படைப்புகள் மற்றும் தொன்மைக்கு இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பழங்குடி மக்களின் தெய்வ வழிபாட்டு பழக்க வழக்கங்கள் தொடர்பான பொருட்கள், கைவினைப் பொருட்கள் போன்றவை அவர்கள் நாகரிகம், பண்பாடு போன்றவற்றைப் பற்றி நம்மை எளிதில் புரிந்து கொள்ள வைக்கின்றன.

FredTC

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


புனேவில் இருந்து சாதனந் நகர், டாக்டர் அன்னை பெசன்ட் ரோடு வழியாக சுமார் 4.3 கிலோ மீட்டர் பயணம் செய்தால் இந்த அருங்காட்சியத்தை அடையலாம். இந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக் கிழமைத் தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

FredTC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X