Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவுக்கு நடுவுள இத்தனை இருக்கா..!?

இந்தியாவுக்கு நடுவுள இத்தனை இருக்கா..!?

மத்திய பிரதேசத்தை நோக்கி பயணம் செய்வதாக இருந்தால் அங்கே தவறவிடக்கூடாத சில பகுதிகள் எவை என தெரிந்துகொள்வோம் வாங்க.

இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளதால் மத்தியப் பிரதேசம் என அழைக்கப்படும் இந்த மாநிலம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக அறியப்படுகிறது. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கிறது. நர்மதை நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எந்த மாநிலத்தில் இருந்தும் இம்மாநிலத்தை அடையும் வகையில் புவியியல் அமைப்பும், போக்குவரத்து சேவையும் எளிய முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய மத்திய பிரதேசத்தை நோக்கி பயணம் செய்வதாக இருந்தால் அங்கே தவறவிடக்கூடாத சில பகுதிகளுக்கும் சென்று வர வேண்டும். சரி, இதில் தவறவிடக்கூடாத பகுதிகள் என்னவெல்லாம் என தெரிந்துகொள்வோம் வாங்க.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்


மத்திய பிரதேசத்தில் விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்களில் அமைந்துள்ள பசுமையான வனப்பகுதிகளில் பல்வகையான காட்டுயிர் அம்சங்கள் நிறைந்துள்ளன. பந்தவ்கர் தேசியப்பூங்கா, வன் விஹார் தேசியபூங்கா, கன்ஹா தேசியப்பூங்கா, பெஞ்ச் தேசிய பூங்கா, மாதவ் தேசியபூங்கா, சத்புரா தேசிய பூங்கா உள்ளிட்ட இன்னும் பல தேசியப்பூங்காக்களும், பறவைகள், விலங்குகள் சரணாலயங்கள் என மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் இந்த கோடை காலத்தை இணைத்து குளுகுளுவென சுற்றுலாச் செல்ல திட்டமிட்டால் பாதாள் பானி, கோரடிமோன் நீர்வீழ்ச்சி, பாண்டவர் குகையுடன் கூடிய நீர்வீழ்ச்சி உள்ளிட்டவை சிறந்த சுற்றுலாத் தலமாக இருக்கும்.

Hariya1234

பாதாள் பானி

பாதாள் பானி


இந்தூர் நகரத்திலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி பாதாள் பானி. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் ஆழமானதாக இருக்கக் கூடும். புராணக் கதைகளில் இந்நீர்வீழ்ச்சி பூமியின் அடிப்பகுதி வரையிலும் நீண்டு செல்கிறது என்று பொருள் படும் வகையில் பாதாள் என்று அழைக்கப்பட்டு வருகிறது. வெப்பமான கோடைக்காலங்களில் இந்நீர்வீழ்ச்சி முழுமையாக வறண்டு விடும். அந்த சமயத்தில் இந்நீர்வீழ்ச்சியை உருவாக்கும் ஓடையானது, சிறு சிறு துளியாக வடிந்து கொண்டிருக்கும். ஆனால், மழைக்காலத்தின் முடிவில் இந்நீர்வீழ்ச்சி அதன் முழுமையான பரிணாமத்தை எடுத்து விடும். ஜுலை மாதத்தில் இந்நீர்வீழ்ச்சியின் தண்ணீர் முழுமையான வேகத்தில் விழத் தொடங்கும் போது இந்நீர்வீழ்ச்சி புகழ் பெற்ற இன்ப சுற்றுலா தலமாகவும் மற்றும் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற இடமாகவும் இருக்கும்.

Anvesh Sharma

பூர்வா நீர்வீழ்ச்சி

பூர்வா நீர்வீழ்ச்சி


ரேவா மாவட்டத்தில் மையத்தில் இருந்து சுமார் 31.6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூர்வா நீர்வீழ்ச்சி. சுமார் 70 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலாப் பயணிகளைப் பெரிது கவர்ந்திழுக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய சூழலில் அமைந்திருப்பதால், பூர்வா நீர்வீழ்ச்சியைக் காண நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். டன்ஸ் ஆற்றிலிருந்து தோன்றிய இந்த நீர்வீழ்ச்சி, ரேவா பகுதியின் வடக்கே பாய்கிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால், இந்த சமயத்தில் பல்வேறு கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறுகின்றன. புகழ்பெற்ற சித்ரகூட் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் பூர்வா நீர்வீழ்ச்சியை, வெப்பம் தணிந்து குளிராக இருக்கும் மே முதல் ஜூன் மாத காலங்களில் சுற்றுலா செல்வது சிறப்பாக இருக்கும்.

Syedzohaibullah

கியோந்தி நீர்வீழ்ச்சி

கியோந்தி நீர்வீழ்ச்சி


ரேவா மாவட்டத்தில் அமைந்துள்ள மற்றுமோறு வியக்கத்தகுந்த நீர்வீழ்ச்சி கியோந்தி. நகரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லால்கோன் என்ற ஊரில் இது அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சிகளில், கியோந்தி நீர்வீழ்ச்சி 24-ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இயற்கை எழில் நிறைந்த பகுதியில் நீர்வீழ்ச்சி அமைந்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல பெரிதும் விரும்புகின்றனர். தம்சா ஆற்றின், துணை ஆறான மஹானா ஆற்றில் இருந்து கியோந்தி நீர்வீழ்ச்சி தோன்றுகிறது. சுமார் 98 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி, பகுதி பகுதியாக பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

Syedzohaibullah

கோரடிமோன் நீர்வீழ்ச்சிகள்

கோரடிமோன் நீர்வீழ்ச்சிகள்


பாந்தவ்காரில் அமைந்துள்ள கோரடிமோன் நீர்வீழ்ச்சி என்பது ஒரு ஆழமான மற்றும் ஆண்டு முழுவதும் நீர் விழும் இயற்கையான் நீர்வீழ்ச்சி ஆகும். இது இயற்கையாக நடைபெற்ற பல்வேறு புவியியல் செயல்முறைகள் காரணமாக உருவானது. இந்த பாந்தவ்கார் சரணாலயத்தின் மிக முக்கியமான சுற்றுலா தலமாக இது உள்ளது. நீர்வீழ்ச்சியின் ஓசை மற்றும் காட்டின் இசை நம்மிடையே ஒரு அமைதியின் நறுமணத்தை உருவாக்குகிறது. நீங்கள் பாந்தவ்கார் சுற்றுலா செல்லும் பொழுது கண்டிப்பாக கோரடிமோன் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க தவறிவிடாதீர்கள். சாகசம் மற்றும் இனிமையான நடைப்பயிற்சியில் ஓய்வு காலத்தை கழிக்க விரும்ப்பும் நபர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது.

Vaibhavraj241

பாண்டவர் குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சி

பாண்டவர் குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சி


போபாலில் இருந்து சுமார் 195 கிலோ மீட்டர் தொலைவிலும், பண்ணா நகரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலும் பண்ணா தேசியப் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது பாண்டவர் குகை மற்றும் நீர்வீழ்ச்சி. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருப்பதால், இவ்விடத்தினை எளிதில் சென்றடைய முடியும். ஊற்றில் இருந்து தோன்றும் இந்த நீர்வீழ்ச்சி, பண்ணா சுற்றுலாவின் சிறப்பம்சாகத் திகழ்ந்து வருகிறது. வருடம் முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் இருந்தாலும், மழைக்காலத்தில் சுற்றுலா செய்வது சிறப்பாக இருக்கும். சுமார் 100 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி ஒரு பெரிய நீர்தேக்கத்தில் விழுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப் பகுதியில், பாண்டவர் குகைகள் அமைந்துள்ளது. பாண்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் தஞ்சம் அடைந்த இடம் இந்தக் குகைகள் ஆகும். இவ்விடத்தைச் சுற்றியிருக்கும் இயற்கை அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வருகின்றனர். அடுத்த முறை மத்திய பிரதேசத்திற்கு தொழில் ரீதியாகவோ, அல்லது சுற்றுலாவாகவோ செல்ல நேர்ந்தால் மறக்காமல் இப்பகுதிக்கும் சென்று வருவது உங்களது பயணத்தை மேலும் சிறப்பாக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

Ankit Saha

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X