Search
  • Follow NativePlanet
Share
» » நீச்சலுக்கு ஏற்ற ஜாலி கடற்கரை நம்ம ஊருல எங்க இருக்கு ?

நீச்சலுக்கு ஏற்ற ஜாலி கடற்கரை நம்ம ஊருல எங்க இருக்கு ?

கேரள மாவட்டத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் ஆள் ஆரவாரமில்லாத, அமைதியும் அழகும் நிறைந்த கடற்கரை கிராமம் தான் பூவார்.

வார இறுதி நாட்களிலோ அல்லது தொடர் விடுமுறை காலங்களிலோ சின்னதா சுற்றுலா போக திட்டமிட்டால் அனைத்து பகதிகளும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இந்த விடுமுறையும் வீனாகி விடுமோ என்ற அச்சம் தான் வருது. எங்கயாவது ஜாலியா போய் ஊர் சுற்றி மனதை புத்துணர்ச்சி செய்யனுமே, அப்ப எங்கதான் போறது... இப்படிப்பட்ட சூழ்நிலையில நீங்க இருந்தீங்கன்னா உங்களுக்கு வர விடுமுறை நாள்ள இந்த கடற்கரைக்கு போய்ட்டு வாங்க. ரம்மியமான காட்சியும், ஆக்ரோசமற்ற அலையும் செம ஜாலியா இருக்கும்.

எங்க இருக்கு ?

எங்க இருக்கு ?


கேரள மாவட்டத்தின் தென்கோடி முனையில் அமைந்திருக்கும் ஆள் ஆரவாரமில்லாத, அமைதியும் அழகும் நிறைந்த கடற்கரை கிராமம் தான் பூவார். இயற்கையான துறைமுக புவியமைப்பை பெற்றுள்ள இந்த இடம் கி.மு 1000மாம் ஆண்டிலேயே வெளிநாட்டவர் வந்துசெல்லும் துறைமுகமாக இருந்திருக்கிறது. இன்னைக்கு ஒரு சில சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே தெரிந்த அழகிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.

Thejas Panarkandy

சுத்தமான கடற்கரை

சுத்தமான கடற்கரை


நாட்டில் வேறெந்த கடற்கரைக்கு சென்றாலும் ஏதோனும் ஒன்று நம் முகம் சுழிக்க வைத்து விடும். ஆனால், பூவார் கடற்கரை மிகவும் சுத்தமாக இருப்பது கூடுதல் சிறப்பு. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே காலாற கடற்கரையில் நடப்பது மிகவும் புத்துணர்வூட்டும் ஒரு விசயமாக இருக்கும். இந்த ஊரானது கேரளா - தமிழக எல்லையில் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒட்டி அமைந்திருப்பதால் எளிதில் எசன்றடையலாம்.

Vijay S

அருகில் உள்ள சுற்றுலா அம்சங்கள்

அருகில் உள்ள சுற்றுலா அம்சங்கள்


கோட்டயம்

பிரம்மாண்டமான மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரையும், மேற்கே மதிமயக்க வைக்கும் வேம்பநாட் ஏரியையும் எல்லைகளாக கொண்டுள்ளதால் கோட்டயம் அற்புதமான இயற்கை அமைப்புடன் காட்சியளிக்கிறது. திரும்பும் திசையெங்கும் திகட்ட வைக்காத இயற்கைக்காட்சிகளும் எழில் அம்சங்களும் இப்பிரதேசத்தில் நிரம்பி வழிகின்றன.

Hciteam1

காஞ்சிரப்பள்ளி

காஞ்சிரப்பள்ளி

காஞ்சிரப்பள்ளி

காஞ்சிரப்பள்ளி நகரின் பிரதான சுற்றுலா அம்சங்களாக கணபதியார் கோவில், செயின்ட் மேரிஸ் தேவாலயம், மதுரை மீனாட்சி கோவில், செயின்ட் டோமினிக் சைரோ மலபார் கத்தோலிக் போன்றவை அறியப்படுகின்றன. இவற்றில் காஞ்சிரப்பள்ளியின் கலாச்சாரத்துக்கும், பார்மபரியத்துக்கும் சிறந்த சாட்சியாக திகழ்ந்து வரும் கணபதியார் கோவில் மிகவும் தொன்மை வாய்ந்தது.

Arjungopidas

வர்கலா

வர்கலா


வர்கலா பகுதியில் பல நீரூற்றுகள், கடற்கரை உள்ளிட்டவை சுற்றுலாவிற்கு பிரசித்தமாக உள்ளன. இங்குள்ள முக்கியமான கடற்கரைகளில் ஒன்றான பாபநாசம் கடற்கரைக்கு அருகில் 2000 வருடங்கள் பழமையான ஜனார்த்தன கோவிலும் அமைந்துள்ளது. இது ஒரு விசேஷமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாக பெயர் பெற்றுள்ளது.

Vinayaraj

மாராரிக்குளம்

மாராரிக்குளம்


மாராரிக்குளம் கிராமத்துக்கு நீங்கள் சுற்றுலா வரும் போது கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம், அரூர், அருந்தன்கால், பூச்சக்கால், பணவல்லி உள்ளிட்ட இடங்களுக்கும் கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும். அதோடு கட்டிடக் கலைக்கு பெயர்போன சிவன் கோவில், சேர்தலா கார்த்தியேணி கோவில், காஞ்சிகுங்க்லரா கோவில் போன்ற ஹிந்துக் கோவில்களையும் நீங்கள் மாராரிக்குளம் சுற்றுலா வரும் போது பார்க்கலாம்.

Almost90's

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X