Search
  • Follow NativePlanet
Share
» »கடைசி முகலாய மன்னர் வாழ்ந்த இடம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?

கடைசி முகலாய மன்னர் வாழ்ந்த இடம் இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?

முகலாயர்களை தவிர்த்துவிட்டு இந்திய வரலாறு குறித்து பேசவே முடியாது. சுமார் 450 வருடங்கள் தென் இந்தியாவின் சில பகுதிகளை தவிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்சி செய்தவர்கள் முகலாயர்கள். இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் கடைசி முகலாய அரசர் இரண்டாம் பாதூர் ஷாஹ் 1857-ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டு ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டு பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இப்படி சூழ்ச்சியின் பயனாக இந்திய தேசத்தின் அதிகார பீடத்தை ஆங்கிலேயேர்கள் கைப்பற்றியது முகலாய பேரரசின் முடிவாக அமைந்தது. ஆனால், இன்றும் முகலாயர்களின் வரலாற்றுச் சான்றாக நம் நாட்டில் பல சின்னங்கள் இருப்பது பெருமைக்குறிய விசயமே.

காலத்தை வென்று நிற்கும் கட்டிடம்

காலத்தை வென்று நிற்கும் கட்டிடம்


என்னதான் முகலாய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கின்றன. அவற்றில் ஒன்று தான் முகலாய அரசர்களின் இருப்பிடமாக இருந்த செங்கோட்டை. இந்தியாவின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றான இக்கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்வோமா.

A.Savin

செங்கோட்டை

செங்கோட்டை


முகலாய பேரரசர் ஷாஹ் ஜகானால் 1547ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டையில் இருந்துதான் கிட்டத்தட்ட 200 வருடங்கள் அதாவது 1857ஆம் ஆண்டு வரை முகலாய அரசர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வந்தனர். இந்த கோட்டையின் சுவர்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவப்பு மணற்கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். இதன் காரணமாகவே செங்கோட்டை என இக்கட்டிடம் அழைக்கப்படுகிறது.

Shashwat Nagpal

கட்டமைப்புகள்

கட்டமைப்புகள்

செங்கோட்டையின் சுற்றுச் சுவர்களுக்குள் ஒரு பெரிய நகரமே இயங்கி வந்தது. முறையாக திட்டமிடப்பட்ட வீதிகள், கோட்டை முழுமைக்கும் தண்ணீர் விநியோகம் செய்வதற்கான ஓடைகள், அரசர் மக்களை சந்திக்கும் தர்பார் போன்றவை இன்றைய பொறியாளர்களையே வியக்கவைப்பதாக உள்ளது.
தாஜ் மஹாலை வடிவமைத்த உஸ்தாத் அஹமத் லஹுரி என்பவர்தான் ஷாஹ் ஜகானின் உத்தரவின் பெயரில் இந்த செங்கோட்டையையும் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1638-ஆம் ஆண்டு இதற்க்கான கட்டுமானப்பணிகள் துவங்கப்பட்டு 1648ஆம் ஆண்டு நிறைவுற்றிருக்கிறது.

Anonymous

சுவர்களில் ஜொலிக்கும் முத்துக்கள்

சுவர்களில் ஜொலிக்கும் முத்துக்கள்


பேரரசர் ஷாஹ் ஜகானின் ஆட்சிக் காலத்திலும், பின் அவரின் மகனான அவுரங்கசீபின் ஆட்சிக் காலத்திலும் செங்கோட்டை முகலாய அரசின் மையமாக, செல்வச் செழிப்புடன் இருந்திருக்கிறது. அவுரங்கசீபின் ஆட்சிக் காலத்தில் செங்கோட்டையில் உள்ள மன்னரின் அந்தப்புரச் சுவர்களில் மட்டும் கண்களைக் கவரும் வகையிலான விலையுயர்ந்த முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

Hans A. Rosbach

சூரையாடப்பட்ட கோட்டை

சூரையாடப்பட்ட கோட்டை


அவுரங்கசீபின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் 18-ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாக முகலாய ஆட்சி அழிவைச் சந்தித்தது. பெர்சிய மன்னர் நாதிர் ஷாஹ் மிக எளிதாக முகலாய படையை தோற்கடித்தார். முகலாயர்களின் அங்கமாக இருந்த செங்கோட்டையையும் சூறையாடினார். தொடர்ந்து இந்தியாவின் அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்த ஆங்கிலேயேர்கள் தங்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறி செங்கோட்டையில் வசித்துவந்த கடைசி முகலாய மன்னரான இரண்டாம் பாதூர் ஷாஹ்வை கைது செய்து கோட்டையினுள்ளேயே சிறை வைத்தனர். பின், இரண்டாம் பாதூர் ஷாவை மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்கூனுக்கு நாடுகடத்தியதொடு நாட்டையே ஆண்டு வந்த முகலாய சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.

dan

கடத்தப்பட்ட முகலாயச் சொத்து

கடத்தப்பட்ட முகலாயச் சொத்து


ஆங்கிலேயர் ஆட்சியின் போது செங்கோட்டையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அரிய பொக்கிஷங்களான கோஹினூர் வைரம், ஷாஹ் ஜகானின் வைன் கோப்பை, இரண்டாம் பாதூர் ஷாஹ்வின் மணிமுடி உள்ளிட்டவை ஆங்கிலேயே அரசினால் கைப்பற்றப்பட்டு லண்டனில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியரின் முகத்திரை கொண்டு எப்படி கார்ப்பரேட் ஆட்சி நடக்கிறதோ அதேப் போன்று லண்டன் அருங்காட்சியகத்தில் நம் நினைவுகள் உறங்கிக் கிடக்கின்றன.

Shabi Abdullah

சுற்றுலாத் தலமான கோட்டை

சுற்றுலாத் தலமான கோட்டை


இன்று டெல்லியில் இருக்கும் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று இந்த செங்கோட்டை. கோட்டையினுள் தெற்கு பகுதியில் பணிப் பெண்கள் தங்கும் இடமான மும்தாஜ் மஹால், அரசிகள் மற்றும் இதர முக்கியப் பெண்கள் தங்கும் இடமான ரங் மஹால் மற்றும் அரசர் தங்கும் இடமான க்ஹஸ் மஹால் ஆகியவை கட்டமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை பளிங்கு கற்களினால் கட்டப்பட்ட ஒரு இடத்தில் தான் அரசர் மக்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இந்த கோட்டைக்கு முன்பாகவே சவாரி பஜார் என்ற பழமையான கடை வீதி ஒன்றும் உள்ளது. முகலாயர் காலத்தில் இருந்து இயங்கிவரும் இந்த கடை வீதியில் விதவிதமான துணி வகைகள், காலணிகள் போன்றவற்றை வாங்கலாம்.

Eddy Milfort

ஆங்கிலேயர் வசமாகும் செங்கோட்டை

ஆங்கிலேயர் வசமாகும் செங்கோட்டை


இந்தியாவை செல்வச் செழிப்புடன் ஆட்சி செய்து வந்த முகலாயர்கள் வாழ்ந்து மறைந்த இந்தச் செங்கோட்டை இன்றும் அன்றாடம் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வரும் நிலையில் மத்திய அரசாங்கம் அதனை பண்ணாட்டு தனியார் வசமிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது வேதனைக்குறிய விசயமாகும். நம் நாட்டின் சொத்தை நாமே பாதுகாக்க முன் வர வேண்டும். சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையிலான அம்சங்களை அங்கே ஏற்படுத்த வேண்டும்.

Anjisnu Raha

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X