Search
  • Follow NativePlanet
Share
» »விசாகப்பட்டினத்தில் இதெல்லாமா இருக்கு..!? இத்தனை நாள் தெரியாம போச்சே..!

விசாகப்பட்டினத்தில் இதெல்லாமா இருக்கு..!? இத்தனை நாள் தெரியாம போச்சே..!

விசாகப்பட்டினத்திற்கு ஓரிரு நாட்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் தவறவிடக்கூடாத தலங்கள் எவை ? எப்படி சென்று வருவது என பார்க்கலாம் வாங்க.

ஒரு பகுதி முழுக்க பரந்துவிரிந்த வங்காள விரிகுடா, மற்றொரு புறம் நிலம், ஆன்மிகத் தலம், அறிவியல் சுற்றுலா, ஓய்வு என்றாலும் சரி, சுற்றித் திரிந்து பொழுதைக் கழிக்க வேண்டும் என்றாலும் சரி எதற்கும் குறைவில்லை. மலை வாசத்தலம், பள்ளத்தாக்கு, கடற்கரை, கோவில் என பலவகையான தலங்கள் இங்கே ஒருங்கே அமைந்து நமக்கு மனமகிழ்ச்சியைத் தருகின்றன. ஆந்திராவிற்கு தொழில் ரீதியாகச் சென்றாலும் சரி, சுற்றுலாவிற்கு சென்றாலும் சரி உள்ளூர் மக்களால் பெரிதும் ஈர்க்கப்படாத ஆனால், அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் சுற்றுலாத்தலங்கள் இங்கே உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படி, இந்த விசாகப்பட்டினத்திற்கு ஓரிரு நாட்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் தவறவிடக்கூடாத தலங்கள் எவை ? எப்படி சென்று வருவது என பார்க்கலாம் வாங்க.

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்


விசாகப்பட்டினத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால் எங்கு செல்வது ? எதை முதலில் பார்ப்பது என்ற ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதே சற்று கடினமான ஒன்றுதான். கடற்கரைகளும், மலைக் காடுகளும் என விரிந்துகிடக்கும் சுற்றுலாத் தலங்களில் காண வேண்டிய தலங்களை முதலில் பட்டியலிட்டு ஆரம்பிக்க வேண்டும். இத்திட்டமானது உங்களது நேரத்தையும், பயணத்தால் ஏற்படும் சோர்வையும் குறைக்கும். அவ்வாறு திட்டமிட்டீர்கள் என்றால் உங்களுடைய முதல் சுற்றுலாப் பயணத்தை பிம்லி கடற்கரையில் இருந்து துவங்குங்கள். அங்கிருந்து கடற்கரையை ஒட்டிய சுற்றுலாத் தலங்களுக்கு எல்லாம் சென்று வரலாம்.

Indian Navy

பிம்லி பீச்

பிம்லி பீச்


பீமுனிப்பட்டணம் எனும் கடற்கரையே பிம்லி பீச் என்று அழைக்கப்படுகிறது. பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் பெயரே இந்த கடற்கரைக்கு வைக்கப்பட்டுள்ளது. கொஸ்தனி ஆறு வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. பிம்லி - விசாகப்பட்டினம் பீச் சாலையை ஒட்டியே இந்த கடற்கரையும் நீள்கிறது. அமைதி தவழும் இந்த கடற்கரைப்பகுதி பாதுகாப்பான நீச்சலுக்கும் ஏற்றதாகும். இப்பகுதியின் அருகேயே பவுரலகொண்டா எனும் மலைப்பகுதியில் உள்ளது. இங்கு 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு கோட்டையின் சிதிலங்கள் மற்றும் ஒரு கல்லறை போன்றவை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக காணப்படுகின்றன. தேவதாரு மரங்கள் இப்பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன. இவை தவிர சிறிய கோவில்களும் இங்கு காணப்படுகின்றன. கடற்கரையும், காடும் ஒருங்கே இணைந்த இப்பகுதி நிச்சயம் உங்களது பயணத்தை மகிர்வுடன் துவங்க வழிவகுக்கும்.

Adityamadhav83

ரிஷிகொண்டா பீச்

ரிஷிகொண்டா பீச்


பிம்லி கடற்கரையில் இருந்து சுமார் 16.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரிஷிகொண்டா பீச் விசாகப்பட்டணம் செல்வோர் தவறவிடக்கூடாத தலங்களில் மிக முக்கியமானதாகும். தங்கநிற மணற்பரப்போடு நீண்டு பரந்து காட்சியளிக்கும் இந்த கடற்கரை பயணிகளிடையே பிரசித்தமாக அறியப்படுகிறது. நீர்ச்சறுக்கு மற்றும் காற்றுச்சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் இந்த கடற்கரையில் ஈடுபடலாம். நீச்சலுக்கு ஏற்ற பாதுகாப்பான கடற்கரையாகவும் இது அமைந்துள்ளது. கடற்கரையை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் காணப்படுவதால் இந்த கடற்கரைப்பகுதி இயற்கை ஆர்வலர்களுக்கு பிடித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது. காட்டேஜ் வசதிகள், ரெஸ்டாரெண்டுகள் மற்றும் பார் போன்றவை இந்த கடற்கரையில் காணப்படுகின்றன. இந்த வசதிகள் யாவும் விசாகப்பட்டணம் நகரத்தில் சுற்றுலாச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆந்திரப்பிரதேச சுற்றுலாத்துறையால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

Adityamadhav83

கம்பலகொண்டா சரணாலயம்

கம்பலகொண்டா சரணாலயம்


பிம்லி கடற்கரையில் இருந்து சமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கம்பலகொண்டா காட்டுயிர் சரணாலயம். இங்குள்ள கம்பலகொண்டா எனும் மலையின் பெயரிலேயே இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது. 71 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள பசுமை மாறாக்காடுகளை இது உள்ளடக்கியுள்ளது. பலவிதமான தாவர வகைகள் மற்றும் உயிரினங்கள் இந்த வனப்பகுதியில் காணப்படுகின்றன. அருகி வரும் உயிரினமான இந்தியச் சிறுத்தை மற்றும் குரைக்கும் மான், குள்ளநரி போன்ற விலங்கினங்களும், கட்டுவிரியன், நாகம் போன்ற ஊர்வன வகைகளும் இங்கு காணப்படுகின்றன. குறிப்பாக, ஆசியன் பாரடைஸ் ஃப்ளைகாட்சர் எனும் அரிய பறவையினம் இங்கு அதிகளவில் காணப்படுகிறது.

Adityamadhav83

கைலாசகிரி

கைலாசகிரி


கம்பலகொண்டா சரணாலயத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கைலாசகிரி என்னும் மலைப்பகுதி. இயற்கை அழகுடன் சுற்றுலாப் பயணிகளின் மனதை கொள்ளைகொல்லும் இம்மலையின் இடது புறத்தில் ராமகிருஷ்ணா கடற்கரை மற்றும் ரிஷிகொண்டா கடற்கரையும், வடக்கே ஒரு மலையும் சூழ்ந்துள்ளன. சிவனும் பார்வதியும் வசிக்கும் கைலாசத்தை குறிப்பிடும்படியாக இந்த இடத்துக்கு கைலாசகிரி என்று பெயரிடப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்றபடி இங்கு சிவன் பார்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கைலாசகிரி மலையின் உச்சிக்கு செல்வதற்கு ஒரு ரோப் டிராலியும் இயக்கப்படுகிறது. மாலை நேரத்தில் இந்த மலையின் உச்சியிலிருந்து வைசாக் நகரத்தை ரசிக்கும் அனுபவம் பரவசமூட்டக்கூடிய ஒன்றாகும். குழந்தைகளுக்கான ஒரு குட்டி ரயில் மற்றும் ஒரு பிரம்மாண்ட தாவரக் கடிகாரம் போன்றவை இந்த மலைச் சுற்றலாவில் இதர சிறப்பம்சமாகும். அதுமட்டுமின்றி டைட்டானிக் வியூ பாயிண்ட், சாந்தி ஆசிரமம், கிளைடிங் பேஸ் பாயிண்ட், டெலஸ்கோபிக் பாயிண்ட் உள்ளிட்ட மலைக்காட்சி தளங்களும் இந்த கைலாசகிரியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Shalini1997

ராஸ் ஹில்

ராஸ் ஹில்


கைலாசகிரியில் இருந்து ராமகிருஷ்ணா கடற்கரை வழியாக சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஸ் ஹில். கிழக்குத்தொடர்ச்சி மலையில் மிக உயரமான சிகரம் இதுவாகும். வைசாக் நகரை சூழ்ந்து நிற்கும் மூன்று மலைகளிலும் மூன்று மதங்களை சேர்ந்த ஆன்மீக திருத்தலங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதாவது, வெங்கடேஸ்வரா மலையில் ஒரு சிவன் கோவிலும், ராஸ் மலையில் வர்ஜின் மேரி தேவாலயமும் மற்றும் தர்க்கா கொண்டா மலையில் பாபா இஷாக் மதீனா எனும் இஸ்லாமிய யோகியின் கல்லறை மாடமும் அமைந்துள்ளன. இந்த மலையிலிருந்து ரம்மியமான இயற்கைக்காட்சிகள், கடற்கரைகள், துறைமுகம், கப்பல் கட்டுமானத்தளம் போன்றவற்றை நன்றாக பார்த்து ரசிக்கமுடியும் என்பதால் இது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக விசாகப்பட்டினத்தில் பெயர் பெற்றுள்ளது.

Sureshiras

யரடா பீச்

யரடா பீச்


ராஸ் ஹில்லில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யரடா பீச் உள்ளூர் மக்களால் அதிகம் பயணிக்கப்படும் பகுதியாகும். வைசாக் நகரத்துக்கு வெகு அருகிலேயே இந்த யரடா பீச் அமைந்துள்ளதால் உள்ளூர் மக்கள் அதிகளவில் இங்கே வருவத வழக்கம். மூன்று புறம் பசுமையான மலைகளாலும் ஒரு புறம் வங்காள விரிகுடாவாலும் இந்தக் கடற்கரை சூழப்பட்டிருக்கிறது. சுற்றிலும் காட்சியளிக்கும் இயற்கை எழிலுக்கு நடுவே, மென்மையான மணற்திட்டுக்கள், வீற்றிருக்கும் இந்த கடற்கரையின் வசீகரிக்கும் வனப்பு யாரையும் உடனே கவர்ந்துவிடக்கூடியது. சூரிய உதயத்தின் அழகையும் இந்த கடற்கரையில் நன்றாக பார்த்து ரசிக்கலாம். சுருக்கமான ஒரு ஓய்வுப்பயணத்துக்கு ஏற்ற அமைதி நிறைந்த கடற்கரையாக இந்த யரடா பீச் விளங்குகிறது.

IM3847

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு திருவணந்தபுரம் எக்ஸ்பிரஸ், யெஸ்வந்பூர் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ் என பல்வேறு ரயில்சேவைகள் உள்ளன. ஆந்திராவில் அதிக மக்கள் பயணிக்கக்கூடிய பகுதி என்பதால் விசாயப்பட்டிணத்தில் விமான சேவையும் உள்ளது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துவசதிகள் எளிமையாக சென்று வர ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Vizagdestinations

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X