Search
  • Follow NativePlanet
Share
» »சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..!

சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்டது இந்த பள்ளத்தாக்கு..!

சிந்து சமவெளி நாகரிகத்தைவிட பழமையான நாகரீகம் கொண்ட பள்ளத்தாக்கும், ஆதித் தமிழன் வாழ்ந்த குகையும் எங்கே உள்ளது என தெரியுமா ? வியப்படையச் செய்யும் நாகரீகம் தேடிப் போவோம் வாங்க.

தென்மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய சீசன் மாதங்களிலும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய சபரிமலை புனித பயண சுற்றுலா மாதங்களிலும் வந்து செல்வது வழக்கம். அப்படி, குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள். அவ்வாறு, பயணிகளை ஈர்க்கும் வகையில் குற்றாலத்திற்கும், கேரளத்திற்கும் இடையே என்ன இருக்கு தெரியுமா ?.

குற்றாலத்துச் சுற்றுலா தலம்

குற்றாலத்துச் சுற்றுலா தலம்


குற்றாலத்தில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செந்தூருணி வனவிலங்கு சரணாலயமும், தென்மலை சூழ்நிலை சுற்றுலாத் தலமும். அடர் பசுமைக் காடாக காட்சியளிக்கும் இந்த இரு இயற்கை சுற்றுலாத் தலங்களுமே பயணிகளில் பெரும்பாலான விருப்பமாகவும் உள்ளது. குற்றாலம் வரும் யாரும் இப்பகுதியை தவர விடுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jabbarcommons

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்


செந்தூருணி என்ற சொல் செங்குருணி என்ற இப்பகுதிக்கே சொந்தமான ஒரு அரிய வகை மரத்தின் பெயரிலிருந்து மருவி அழைக்கப்படுவதாகும். செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் 1984ம் ஆண்டு அமைக்கப்பட்டது. செந்தூருணி, குழத்துபுழா நதிக்கூடங்களில் கட்டப்பட்டுள்ள பாராப்பர் அணைகட்டின் விளைவாக 26 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஒரு செயற்கை ஏரியை உருவாக்கியுள்ளது. இந்த அணையின் கட்டுமானத்தினால் மேலும் 23 கிலோ மீட்டர் சதுர வனப்பகுதி சரணாலயத்துடன் இணைந்துள்ளது.

Jaseem Hamza

அழிக்கப்பட்ட காடுகள்

அழிக்கப்பட்ட காடுகள்


செந்துரூணி வனவிலங்கு சரணாலயமாக உருவாகும் முன்பு தென்மலை வனசரகத்தின் கீழ் இருந்தது. வனப்பகுதியில் மரங்களை வெட்டுதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அனைத்து மரங்களையும் வெட்டுதல், மற்றொன்று தேர்ந்தெடுத்து வெட்டுதல் என்று இரண்டு வகை உண்டு. இந்த இரண்டு வகை மரம் வெட்டும் முறைகள் ஒரு காலத்தில் இந்த வனப்பகுதியில் வழக்கத்தில் இருந்து வந்தது. இந்த வகைகளில் ஓன்றான அனைத்து மரங்களையும் வெட்டுதல் என்ற முறையில் இப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் பெருமளவில் அழிக்கப்பட்டு மலைத் தோட்ட மரங்கள் வளர்க்கும் திட்டம் குறிப்பாக ரப்பர் எஸ்டேட்டுகளாக உருமாறியது.

Jaseem Hamza

செந்தூருணி பள்ளத்தாக்கு

செந்தூருணி பள்ளத்தாக்கு


இந்த மாற்றத்திற்குப் பிறது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க தகுந்த பகுதியாக செந்தூருணி பள்ளத்தாக்கு பகுதியை கொல்லம் வனச்சரக கமிட்டியின் சிபாரிசின் பேரில் கேரள அரசு செந்தூருணியை வனவிலங்கு சரணாலயமாக 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் அறிவித்தது. தற்போது இந்த வனவிலங்கு சரணாலயம் திருவனந்தபுரம் வனவிலங்கு கோட்டத்தின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது. இந்த வனவிலங்கு சரணாலயம் 100.32 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

Bipinkdas

இந்திய நாகரீக தோற்றம்

இந்திய நாகரீக தோற்றம்


செந்தூருணிக்கு ஒரு வரலாற்று சிறப்பும் உண்டு. புனே டெக்கான் கல்லூரியின் ஒரு பரிவான தொல்பொருள் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கற்காலத்தின் ஒரு மிகப்பெரிய குகையின் அகழ்வுகள் செந்தூருணி ஆற்றின் வடமேற்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு கலாச்சாரம் இந்தியாவின் மிக பழமையான நாகரீகம் என்பது இந்த ஆய்வின் முலம் கண்டறியப்பட்டது. சிந்து சமவெளி நாகரிகத்தைவிட மிகவும் பழமை வாய்ந்த நாகரீகமாக செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு என தற்போது கருதப்படுகிறது.

Kaliyamoorthy Gopalakrishnan

சான்றுகள்

சான்றுகள்

இந்த ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கிமு 4400 முதல் கிமு 3700 வரை உள்ள காலகட்டத்தை சார்ந்ததாக உள்ளது. ஆனால், செந்தூருணி ஆற்று பள்ளதாக்கு நாகரீகம் கிமு 5210 முதல் கிமு 4420-க்கும் உள்பட்ட காலகட்டத்தை சார்ந்தது. இங்குள்ள குகை ஓவியங்கள் மத்திய இந்தியாவின் குகை ஓவியங்களுடன் ஒத்துள்ளது. இங்கு காணப்படும் குகை ஒரே நேரத்தில் சுமார் 20 மனிதர்களை தன்னுள் அடக்கிக் கொள்ளும் அளவில் உள்ளது. குகையின் முன் பகுதியின் சற்று கீழே காணப்படும் சதுப்பு நிலம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்ததற்கான தடையங்கள் காணப்படுகின்றன.

Conscious

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்

செந்தூருணி வனவிலங்கு சரணாலயம்


செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு அரியவகை மரங்கள், செடி, கொடிகள், ஏராளமான வனவிலங்குள், நீரோடைகள், சிறு சிறு அருவிகள் உள்ளது. செந்தூருணி வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்ல தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செந்தூருணி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தில் அனுமதி பெறுவது கட்டாயம்.

Jaseem Hamza

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


செந்தூருணி வனவிலங்கு சரணாலயம் செல்ல தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து கேரள செல்லும் அனைத்து தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகளில் தென்மலை கல்லடா அணைக்கட்டு வரை செல்லலாம். ரயில் மூலம் செல்ல விரும்புவோர் செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் ரயிலில் தென்மலை ரயில் நிலையத்தில் இறங்கி தென்மலை கல்லடா அணைக்கட்டு பகுதிக்கு பேருந்து மற்றும் ஜீப் மூலம் சென்றடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X