Search
  • Follow NativePlanet
Share
» »"நீங்கள் யார் ?" நான்தான்பா பிரம்மா..! அப்பவே திருவிளையாடல் நிகழ்த்திய முருகன்!

"நீங்கள் யார் ?" நான்தான்பா பிரம்மா..! அப்பவே திருவிளையாடல் நிகழ்த்திய முருகன்!

முருகனின் பெருமைகளை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். இத்தகைய முருகன் சிறு குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மாறி மாறித் தோற்றமளிக்கும் அதிசய அரிய நிகழ்வு உங்களுக்கத் தெரியுமா ?.

கந்தன், சுப்பிரமணியன், குமரன் என போற்றப்படும் முருகன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடிகொண்டு காக்கிறார் என்பது நம்பிக்கை. அண்ணன் விநாயகரோ தன் அன்னையிடமிருந்து தோன்றியவர். முருகப் பெருமானோ சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்தவர். இருப்பினும் தாயின் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வணங்கும் கடவுள், ஏன் தமிழ்க் கடவுளே இவர் தானே. இப்படி, முருகனின் பெருமைகளை பட்டியலிட்டால் நீண்டுகொண்டே செல்லும். இத்தகைய முருகன் சிறு குழந்தையாகவும், இளைஞராகவும், முதியவராகவும் மாறி மாறித் தோற்றமளிக்கும் அதிசய அரிய நிகழ்வு உங்களுக்கத் தெரியுமா ?. வாருங்கள் அது எங்கே, என்ன சிறப்பு என பார்க்கலாம்.

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு


ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இத்தலத்திலேயே காலை நேரத்தில் முருகப் பெருமான் குழந்தை வடிவிலும், மதியத்தில் இளைஞராகவும், மாலைப் பொழுதில் முதியவராகவும் தோற்றமளித்து வருகிறார்.

Anandajoti Bhikkhu

கோவில் பெருமைகள்

கோவில் பெருமைகள்


இத்தலத்தில் உள்ள அதிகார முருகன் பிற கோவில்களில் காணப்படுவதைப் போல இல்லாமல் வேல், சக்தி என ஆயுதமின்றி தோற்றமளிக்கிறார். முருகனின் இருபுறங்களிலும் வாகனமாக யானைகள் நிற்கின்றன. அருணகிரியார் இத்தல முருகன் குறித்து திருப்புகழ் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிக் கோலத்தில் முருகன் இங்கு அருள்புரிவதால் இந்த ஊர் ஆண்டியார்குப்பம் என முதலில் அழைக்கப்பட்டு பின் ஆண்டார்குப்பம் என தற்போது பெயர்பெற்றுள்ளது.

Sricharan

தலவரலாறு

தலவரலாறு


கைலாயம் சென்றிருந்த பிரம்மா, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். இதனால் கோபமடைந்த முருகன், பிரம்மாவை அழைத்து "நீங்கள் யார் ?" எனக் கேட்டார். அதற்குப் பிரம்மாவோ "நான்தான் படைக்கும் தொழில் செய்யும் பிரம்மா" என அகங்காரத்துடன் கூறினார். அவரது அகந்தையை முடிவுக்குக் கொண்டுவர நினைத்த முருகன், எந்த அடிப்படையில் படைப்புத் தொழில் செய்கிறீர்கள் எனக் கேட்டார். அவரோ ஓம் எனச்சொல்லி அதற்குப் பொருள் தெரியாமல் திணறினார். இதையடுத்து முருகனும் பிரம்மாவை சிறைவைத்தார். இதனாலேயே இத்தலத்து முருகன் பிரம்மாவை விடவும் பெரிய உருவத்தில் காட்சியளிக்கிறார்.

Michael Gunther

கோவில் அமைப்பு

கோவில் அமைப்பு


இக்கோவிலில் உள்ள விமானம் ஏகதாள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தலத்தில் விநாயகர் வரசித்தி விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் காசி விஷ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் என தனித் தனியே சன்னிதிகள் உள்ளன.

JerryDP

வழிபாடு

வழிபாடு


அதிகாரமிக்க பதவிகள் கிடைக்க, பணியில் சிறந்து விலங்க இத்தல முருகனை வழிபடுவது சிறந்தது. பிரசவகாலத்தில் அதிகார முருகனை வழிபடுவதால் குழந்தைகள் அறிவுமிக்கவராகவும், கல்வியில் சிறந்து விலங்குபவராகவும் இருப்பர் என்பது நம்பிக்கை.

Vanmeega

நடை திறப்பு

நடை திறப்பு


அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நடை காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்பட்ட பூஜைகள் செய்யப்படுகிறது.

Lomita

திருவிழா

திருவிழா


நித்திரை மாத பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், கார்த்திகை, முருகனுக்கு உகந்த விரத நாளான கந்தசஷ்டி, தைப்பூசம் உள்ளிட்ட காலங்களில் விழா கொண்டாடப்படுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளில் தெய்வானை திருமணமும், 9ம் நாளில் வள்ளி திருமணமும் நடைபெறுகிறது. முருகன் அவதரித்த கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டி விழாவின் போது சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்குத் திரண்டு வருவது வழக்கம்.

Vanmeega

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


திருவள்ளூர் மாவட்டம், ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது இந்த முருகன் கோவில். வடமதுரை, கண்ணிகைபேர், ஜெகநாதபுரம் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். சென்னையில் இருந்து சென்னை - விஜயவாடா தேசிய செநடுஞ்சாலையில் படியநல்லூர், சோழவரம் வழியாகவும் இக்கோவிடிலை சென்றடையலாம். ஆவடி, கும்மிடிப்பூண்டி, சென்னை, திருவள்ளூர் எனச் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆண்டார்குப்பம் வர பேருந்து வசதிகள் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X