Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவின் ஆன்மீகக் கோட்டை சுவாமிமலை! அப்படி என்ன இருக்கு தெரியுமா ?

தென்னிந்தியாவின் ஆன்மீகக் கோட்டை சுவாமிமலை! அப்படி என்ன இருக்கு தெரியுமா ?

தென்னிந்தியாவின் ஆன்மீகக் கோட்டையே இந்த சுவாமிமலை என்றால், அப்படி இங்கே என்னதான் இருக்கு என தெரிந்துகொள்ள வேண்டாமா?. வாருங்கள், சுவாமிமலையைச் சுற்றி ஓர் பயணம் போகலாம்.

தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் கும்பகோணத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் சுவாமிமலை. இப்பகுதியினைச் சுற்றிலும் ஆன்மீகத் தலங்கள் இருப்பதைக் காண முடியும். தமிழ் கடவுளான முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் சுவாமிமலையும் ஒரு படைவீடாகும். மாநிலத்திலேயே வெண்கலக் காசுகள் செய்யக் கற்றுத்தரும் ஒரே பள்ளி இங்குதான் உள்ளது என்பது பெருமைமிகு விசயமாகும். சரி, தென்னிந்தியாவின் ஆன்மீகக் கோட்டையே இந்த சுவாமிமலை என்றால், அப்படி இங்கே என்னதான் இருக்கு என தெரிந்துகொள்ள வேண்டாமா?. வாருங்கள், சுவாமிமலையைச் சுற்றி ஓர் பயணம் போகலாம்.

சுவாமிமலை

சுவாமிமலை

காவிரி ஆற்றின் கிளையாறு ஒன்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலையானது முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாகக் கருதப்படுகிறது. இத்தலத்தோடு தொடர்புடைய புராணங்களின்படி, முருகப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தனது தந்தையான சிவபெருமானுக்கு உரைத்த தலம் சுவாமிமலையாகும். இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிலைகளில், மந்திரத்தின் பொருளை விளக்கும் முருகப்பெருமான் குருவாகவும், மந்திரப் பொருளை காதில் கேட்கும் சிவபெருமான் சீடனாகவும் செதுக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜம்புலிங்கம்

திருவிழாக்கள்

திருவிழாக்கள்


கோவில்கள் நிறைந்த நகரமான கும்பகோணத்திற்கு வெகு அருகாமையில் சுவாமிமலை அமைந்திருப்பதால், ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் சுவாமிமலைக்கு வருகைபுரிவது வாக்கம். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா, மார்ச் மாதத்தில் நடைபெறும் பங்குனி உத்திரம் உள்ளிட்ட பிரபலமான திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. மே மாதத்தில் வைகாசி விசாகத்திருவிழாவும், அக்டோபர் மாதத்தில் கந்த சஷ்டித்திருவிழாவும் கொண்டாடப்படுகின்றன.

பா.ஜம்புலிங்கம்

அருகில் உள்ள ஆன்மீகத் தலம்

அருகில் உள்ள ஆன்மீகத் தலம்


சுவாமிமலைக்கு அருகில் மிகவும் பிரசிதிபெற்ற ஆன்மீகத் தலமாக விலங்குவது வீற்றிருந்த பெருமாள் ஆலயம். தஞ்சாவூரில் உள்ள வேப்பத்தூர் என்னும் ஊர் இந்த ஆலயம் அமைந்துள்ளது. விஷ்ணு கோவிலான இது கி.பி. 850 ஆம் ஆண்டு பல்லவர்களால் கட்டப்பட்டதாக சான்றுகள் உள்ளன. மேலும் இன்றும் நிலைத்துநிற்கும் பல்லவகாலத்திற்கு முந்தைய இரண்டு இந்து கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கட்டப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும், இக்கோவிலில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களைப் பிணைக்கப் பயன்பட்டுள்ள காரையானது இன்னும் பலமாக செங்கற்களை பிணைத்துக் கொண்டுள்ளதைக் காணும்பொழுது இக்கோவிலைக் கட்டிய கலைஞர்களின் கட்டிட நுணுக்கம் நன்கு புலனாகிறது.

பா.ஜம்புலிங்கம்

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சுவாமிமலையினை அடைய அனைத்து தமிழகத்தின் அனைத்து நகரங்களில் இருந்தும் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. கும்பகோணம், திருச்சி, சிதம்பரம் மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து சீரான நேரங்களில் பேருந்து வசதிகள் சுவாமிமலைக்கு உள்ளன. சுவாமிமலைக்கு மிக அருகிலுள்ள இரயில் நிலையம் சுவாமிமலையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. கொல்லம், திருப்பதி, சென்னை மற்றும் இராமேஸ்வரத்திலிருந்து ரயில்கள் அடிக்கடி கும்பகோணம் இரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றன. சுவாமிமலைக்கு மிக அருகிலுள்ள விமான நிலையம் 85 கிலோமீட்டர் தொலைவில் திருச்சியில் அமைந்துள்ளது.

Rasnaboy

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


சுவாமிமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் என பார்த்தால், சுக்ர தேவ நவக்கிரக கோவில், தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்டவை உள்ளன. இவை இப்பகுதிகளில் வீக்கென்ட் சுற்றுலாத் தலங்களாகவும் திகழ்கிறது.

Kasiarunachalam

சுக்ர தேவ நவக்கிரகக் கோவில்

சுக்ர தேவ நவக்கிரகக் கோவில்


தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கஞ்சனூர் கிராமம் கும்பகோணம் நகரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கிராமம் அக்னீஸ்வர சுவாமி கோவிலுக்காக பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்றது. இந்த அக்னீஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Rasnaboy

தரங்கம்பாடி

தரங்கம்பாடி


தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் ட்ரான்குபார் என்ற நகரம் தான் தரங்கம்பாடி என்று அழைக்கப்பட்டு வந்தது. தரங்கம்பாடி என்ற வார்த்தைக்கு அலைகள் கவி பாடும் இடம் என்று பொருள். 1620 முதல் 1845-ம் ஆண்டுவரை முன்னாள் டச்சு காலனியாக இருந்த இவ்விடம், இன்றும் டேனிய மொழியில் ட்ரான்கிபார் என்று அழைக்கப்படுகிறது.

I, Eagersnap

பூம்புகார்

பூம்புகார்

பூம்புகார் அல்லது காவிரிப்பூம்பட்டிணம் என அழைக்கப்படும் இந்த நகரமானது தற்போதைய நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு கிழக்கே 22 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மிகத்தொன்மையான மண் சிற்பங்கள் மற்றும் தாழிகள் பூம்புகார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் ஆதி நாகரிக நகரங்களில் ஒன்றாக இந்த பூம்புகார் கருதப்படுகிறது.

PP Yoonus

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X